கல்முனை மாமாங்க வித்தியாலயத்தில் வெள்ளம் மாணவர்கள் சிரமம்


கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையினால் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயம் முற்றாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது . இதனால் இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கும்  கல்வி பயில்வதற்கு சிரமப்படுகின்றனர் .

சுனாமி அனர்த்தத்தின் போது  முற்றாக அழிந்த இப்பாடசாலை புதிய கட்டிடங்களுடன்  தற்போது இயங்குகின்றது. மழை  ஓய்ந்திருந்த போதிலும் வெள்ளநீர் வடிந்தோட  வடிகால் வசதி இல்லாமையினால் பாடசாலை வளாகம் முழுவதும் நீர் தேங்கி காணப்படுகின்றது . இதன் காரணமாக பாடசாலைக்கு மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. தொடர்ந்து நீர் தேங்கிக் காணப்படுவதால் பாடசாலை சூழலில் டெங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் நோய் பரவும் சந்தர்ப்பமும் அதிகம் காணப்படுகிறது.

வெள்ள நீர் தேங்கியுள்ள இப்பாடசாலையின்பால் கல்முனை மாநகர சபை ,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,கல்முனை வலயக்கல்வி அலுவலகம்  கவனம் செலுத்த வேண்டிய அவசிய தேவை ஏற்பட்டுள்ளது . கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ,சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் வலயக்கல்வி  பணிப்பாளர் ஆகியோர் இப்பாடசாலையை  இதுவரை கவனத்தில் கொள்ளாதது கவலை தருவதாக மாணவர்களின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர் .

தொடர்ந்தும்  இந்நிலை நீடிக்குமாக  இருந்தால் பாடசாலையை  மூட வேண்டிய நிலை உள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர் . எனவே சுனாமி அனர்தத்தால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மாணவர்களின் கல்வி சுகாதாரத்தை கவனத்தில் கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்களும் நலன் விரும்பிகளும் கேட்டுக்கொண்டுள்ளனர்




Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்