Posts

Showing posts from December, 2018

2018 A/L பெறுபேறுகள்; அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றோர்

Image
2018-வௌியிடப்பட்ட, 2018 கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு துறையிலும் அகில இலங்கை ரீதியாக, முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களின் பெயர்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாத்தளை சாஹிரா கல்லூரி மாணவன், எம்.ஆர்.எம். ஹக்கீம் கரீம், 3 ஆம் இடத்தை பிடித்துள்ளார். சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன், மொஹிதீன் பாவா ரீஸா மொஹமட், உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை, கல்விப்பொதுத்தராதரப் பத்திர உயர் தர பரீட்சைக்கு 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சார்த்திகள் (321,469) பரீட்சை எழுத தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 167,907 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதோடு, பரீட்சைக்கு தோற்றியோரில் 119 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார். உயிரியல் விஞ்ஞானப் பிரிவு (Biological Science) 1 ஆம் இடம் – கலனி ராஜபக்ஷ, கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலை 2 ஆம் இடம் – ரவிந்து ஷஷிக, கொழும்பு டி.எஸ். சேனாந

மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் புதிய பொறுப்பு வைத்திய அதிகாரியாக டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி நியமனம்.

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் புதிய பொறுப்பு வைத்திய அதிகாரியாக மருதமுனையைச் சேர்ந்த டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி இன்று(28-12-2018)தனது கடமையைப் பொறுப்பெற்றார். இவர் 1971.01.01ஆம் திகதி மருதமுனையில் பிறந்தார்.மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் உயர்தரம் வரை கற்று மருத்தவத்துறைக்குத் தெரிவாகி கொழும்;பு களணி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தார். அதன் பின் 2000.04.01ஆம் திகதி டொக்டராக முதல் நியமனம் பெற்று மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையேற்று 2003ஆம் ஆண்டுவரை அங்கு கடமையாற்றினார்.அதைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டுவரை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் கடமையாற்றினார். பின்னர் 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டுவரை ஓம்மான் நாட்டின் இரணுவ வைத்திய சாலையில் கடமையாற்றினார்.அங்கிருந்து வருகைதந்து மீண்டும் மருதமுனை வைத்திய சாலையில் கடமையாற்றிய நிலையிலேயே இவர் மருதமுனை பிதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையைப் பொறுப்பெற்றுள்ளார். இவர் மருதமுனையைச் சேர்ந்த அப்துல் றகுமான் ஆயிஷா தம்பதியின் புதல்

திருகோணமலை மொகமட் ராசிக் என்ற, மனிதப் புனிதரின் அற்புதமான பணி

Image
திருகோணமலை பொது வைத்தியசாலையில் தினமும் நோயாளர்களின் பணிவிடைகளை பார்த்து வரும் நபரொருவர் திருகோணமலை மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளார். இவர் ஆச்சரியமிக்க ஒரு புனித மனிதராகவும், புன்னகை நிறைந்த முகத்தோடு நோயாளிகளோடு பேசி நலன் விசாரித்து வருவதுடன் நோயாளர்களுக்கு தினமு‌ம் பனிவிடை செய்து வருவதாகவும் வைத்தியசாலைக்கு வருவதை வழக்கமாக்கியும் கொண்டுள்ளார். கடந்த இரண்டரை வருடங்களாக தினமும் வைத்தியசாலைக்கு வருவதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தனர். தேசிய நீர்வழங்கள், வடிகாலயமப்பு சபையில் பணிபுரியும் ஜமால்தீன் மொகமட் ராசிக் என்பவரே இந்த சமூக பணியில் ஈடுபட்டுள்ளவர். 1978-79 களில் இடியப்பம் விற்று தனது குடும்ப வறுமையை போக்கிய இவர் இன்று தனது உழைப்பில் ஒரு பகுதியை நோயாளர்களுக்காக ஒதுக்கியுள்ளார். தினமும் காலை 7.00 முதல் 8.00 மணிவரை நோயாளர்களுக்கு சேவை செய்வதற்காவே நேரத்தை ஒதுக்கி அந்நேரத்தில் வேறு எந்த விடயத்திலும் ஈடுபடாதவர் எனவும் தெரியவருகின்றது. நோயாளர்களை பார்வையிடும் நேரத்தில் இவரை ஏதாவதொரு வாட்டில் (களம்) நிச்சயம் காணலாம். இதேவேளை தான் சந்திக்கும் நோய

கல்முனை மாநகர சபை 2019 வரவு செலவு திட்டம் தோல்வி

Image
கல்முனை மாநகர சபையின் முதலாவது வரவுசெலவு திட்டம்  தோற்க்கடிக்கப்படுள்ளது. மாநகர சபையின் 2019ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்ட  அறிக்கையை  மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் நேற்று புதன் கிழமை நடை பெற்ற  மாநகர சபை விசேட கூடத்தில் சமர்ப்பித்தார். வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப் பட்ட விடயங்கள் மாநகர சபை உறுப்பினர்களுக்கு  ஒருவாரத்துக்கு முன்னர் திருத்தங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டு  நேற்று அதற்கான விவாதம் இடம் பெற்றது. விவாதத்தின் பின்னர் வரவு செலவு திட்டத்தை  நிறைவேற்றுவதற்கான அங்கீகாரத்தை முதல்வர் கேட்டதற்கிணங்க எதிர் தரப்பு உறுப்பினர்கள் வாக்கெடுப்புக்குவிடுமாறு கோரிக்கை விடுத்தனர் . இதன் பிரகாரம்  2019 க்கான கல்முனை மாநகர சபை வரவு செலவு திட்ட அறிக்கை  வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது  41 உறுப்பினர்களை கொண்ட  கல்முனை மாநகர சபையில் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 17 உறுப்பினர்களும், ஏதிராக 24 உறுப்பினர்களும் வாக்களித்தனர். கல்முனைப்பின் மாநகர சபை  ஆரம்பிக்கப் பட்டு 11 வது வரவு செலவு திட்டமே  இவ்வாறு தோற்கடிக்கப்படுள்ளது . சமர்ப்பிக்கப்பட்ட  வரவுசெலவு திட்டத

மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு இனிமேல் இல்லை

Image
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு டிசம்பர் 31 ஆம் திகதியின் பின்னர் விநியோகிக்கப்பட மாட்டது என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என். ரணசிங்க தெரிவித்துள்ளார்.  எனவே எதிர்வரும் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் எல்லா நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரமே விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  அறிக்கை ஒன்றை வெளியிட்டு குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினர் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளனர்

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக எச்.எம்.எம். ஹரீஸ் கடமையேற்பு.

Image
(அகமட் எஸ். முகைடீன், றியாத் ஏ. மஜீட்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (27) வியாழக்கிழமை கொழும்பு யூனியன் பிலேஸில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சி. அலவதுவல, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் மற்றும்  உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி அரசியல் பிரமுகர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், அமைச்சு அதிகாரிகள், அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள், பணிப்ப

கல்முனையில் சுனாமி பேரழிவு நினைவேந்தல்

Image
தேசியப் பேரழிவான சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்று புதன் கிழமையுடன் 14 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. கடற்கோளில் சிக்குண்டு மரணித்தோருக்கான பதிநான்காவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  இன்று கல்முனை மாமாங்க வித்தியாலய திடலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு  தூபிக்கருகில் இடம் பெற்றது.  2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த சுனாமி அனர்த்தத்தினால் இலங்கை உட்பட ஆசியாவிலுள்ள பல நாடுகள் பேரழிவைச் சந்தித்தன. அந்த அனர்த்தத்தினால் தமது உறவுகளை, பெற்றோரை  மனைவியை, கணவனை, தாயை, தந்தையைக் காவு கொடுத்தும் வீடுகள், சொந்தங்கள், வளங்களை, பொருளாதாரத்தை இழந்து நின்ற பேரவலத்தின் எதிர்விளைவவுகளை, அதன் தாக்கத்தை இன்றும் அனுபவிக்கும் மக்களும் அந்த காட்சியை நேரில் கண்டவர்களும் நம்மிடையே உள்ளனர்.  14 ஆண்டு நிறைவை நினைவு  கூரும் முகமாக மரணித்தவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் மக்களின் அழு குரலுடன் உறவுகளுக்காக தீபமேற்றி பூசை வழிபாடுகளும் இடம் பெற்றன.  உள்ளுர் அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பொது மக்கள் பலரும் கலந்

இன்றைய காலநிலை

Image
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலலும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.  மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.  இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களி

கல்முனை திரு இருதயநாதர் கிறிஸ்தவ தேவாலய நத்தார் ஆராதனை

Image
கல்முனை நகரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த கிறிஸ்தவ தேவாலயத்திலும்   கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் சமய ஆராதனை வழிபாடுகள் நடை பெற்றன . கல்முனை திரு இருதயநாதர் கிறிஸ்தவ தேவாலயத்தின் பங்குத் தந்தை ஏ.யேசுதாசன் அடிகளார்   வழிபாடுகளை நடாத்தி திருப்பலி ஒப்புக் கொடுத்தார் .  இந்த நள்ளிரவு  ஆராதனை வழிபாட்டில் பிரதேச கிறிஸ்தவ பங்கு மக்கள் ஆலயம் நிறைந்து காணப்பட்டனர் . நத்தார் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு பெரு விழாவாகும் .. இவ்விழாவானது கிறிஸ்துவ திரு வழிபாட்டு  ஆண்டில்  திரு  வருகைக் காலத்தினை  முடிவு  பெறச் செய்து  பன்னிரெண்டு நாட்கள்  கொண்டாடப்படும்  கிறிஸ்து பிறப்புக்  காலத்தின்  தொடக்க நாளாகும்  இவ்விழாவின் கொண்டாட்டங்களில்  கிறிஸ்தவ ஆலயங்களில் திருப்பலி ,குடில்கள்ந,த்தார் பாப்பா ,வாழ்த்து அட்டைகளயும்  பரிசுகளையும் பரிமாறல் ,கிறிஸ்மஸ்  மரத்தை  அழகு படுத்தல் , கிறிஸ்மஸ் பாடல் என்பன இடம் பெறுவது சிறப்பம்சமாகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில்  கிறித்தவ மக்கள்  ஆலயங்களில் ஒன்று கூடி நள்ளிரவு  ஆராதனைகளில் ஈடுபடுவர். கல்முனை பிரதேசத்தில்

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் சமய ஆராதனை வழிபாடு

Image
கல்முனை நகரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த கிறிஸ்தவ தேவாலயங்களிலொன்றான மெதடிஸ்த திருச்சபையின்   கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் சமய ஆராதனை வழிபாடுகள் சிறப்பாக நடை பெற்றன . கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் போதகர் அருட் பணி எஸ்.டி. வினோத் அடிகளார் வழிபாடுகளை நடாத்தினார். கல்முனை சேகர மக்கள் பலர் கலந்து கொண்ட இவ்வழிபாட்டில் வட மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்குண்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு மீண்டும் செல்ல விசேட பிரார்தனையும் அங்கு இடம் பெற்றது. நத்தார் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு பெரு விழாவாகும் இவ்விழாவானது கிறிஸ்துவ திரு வழிபாட்டு  ஆண்டில்  திரு  வருகைக் காலத்தினை  முடிவு  பெறச் செய்து  பன்னிரெண்டு நாட்கள்  கொண்டாடப்படும்  கிறிஸ்து பிறப்புக்  காலத்தின்  தொடக்க நாளாகும் நத்தார் பாப்பா இவாழ்த்து அட்டைகளையூம்  பரிசுகளையூம் பரிமாறல் இகிறிஸ்மஸ்  மரத்தை  அழகு படுத்தல்  கிறிஸ்மஸ் பாடல் என்பன இடம் பெறுவது சிறப்பம்சமாகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில்  மெதடிஸ்த திருச்சபையில்  ஒன்று கூடி வழிபாடுகளில் ஈட

தங்கல்லயில் துப்பாக்கி பிரயோகம் - நால்வர் பலி

Image
தங்கல்ல, குடாவெல்ல மீன்பிடித்துறை முக பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த 5 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  பிந்திய தகவலின்படி  குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காயமடைந்த 5 பேரும் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் அறிவித்தலுக்கு அமைய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  இன்று காலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த 5 பேரும் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள

செஸ்டோ”99” அமைப்பின் வருடாந்த பொது ஒன்றுகூடலும் புதிய நிர்வாகத் தெரிவும்

Image
அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஏழு வருடங்களாக பல்வேறு வகையான சமூக சேவைகளில் ஈடுபட்டு  இயங்கிவருகின்ற கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் வருடாந்த பொது ஒன்றுகூடல் கடந்த சனிக்கிழமை (22) இறக்காமம் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.  இவ்வருடாந்த ஒன்றுகூடலின் போது 2019 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத்  தெரிவு  இடம்பெற்றது. இதன் போது இவ்வமைப்பின் 2019 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக இலங்கை கல்வி நிர்வாக சேவை  அதிகாரி   என்.எம்.ஏ மலீக் தெரிவு  செய்யப்பட்டதோடு செயலாளராக  எஸ்.ரீ. சதாத் , பொருளாளராக ஏ.ஏம்.இர்ஷாத் ஆகியோர்  தெரிவு  செய்யப்பட்டனர் . இதனைத் தொடர்ந்து இவ்வமைப்பின் புதிய தலைவர்  என்.எம்.ஏ மலீக் உரையாற்றும போது போது 2018 ஆம் ஆண்டில் சிறப்பாக இவ்வமைப்பை வழி நடாத்திய நிர்வாகத்தினருக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்ததோடு எதிர்வரும் வருடத்தில் இவ்வமைப்பை சிறப்பாக வழி நடாத்தி இப்பிரதேச மக்களுக்கு தேவையான சேவைகளில் ஈடுபட அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பு இன்றியமையாதது எனவும்  தெரிவித்தார் . செஸ்டோ”99” அமைப்பானது இப்பிரதேச மக்களின் நீண்ட கால தேவையாக இருந்

26 ஆம் திகதி நள்ளிரவு முதல் போக்குவரத்து கட்டணங்கள் குறைப்பு

Image
26 ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  கடந்த தினங்களில் ஏற்பட்ட எரிபொருள் விலை மாற்றத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  அதனடிப்படையில் பேருந்து கட்டணங்கள் நூற்றுக்கு 4 வீதத்தினால் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறைந்த பட்ச கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  இதேவேளை, முச்சக்கர வண்டிக் கட்டணமும் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அதனடிப்படையில் ஆரம்ப கட்டணம் 10 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  எனவே 60 ரூபாவாக இருந்த ஆரம்ப கட்டணம் 50 ரூபா வரையில் குறைக்கப்பட்டுள்ளது.  அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணமும் குறைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  நூற்றுக்கு 3 வீதத்தினால் குறித்த கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  குறித்த அனைத்து கட்டணங்களும் 26 ஆம் திகதி நள்ளிரவு முதல் குறைக்கப்படும் எனவும் அவர் மேலும்

பாண்டிருப்பு கடற்கரை வீதிக்கான அடிக்கல் நாட்டு விழா

Image
(அகமட் எஸ். முகைடீன்) நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் 86 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாண்டிருப்பு கடற்கரை வீதி அபிவிருத்திப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை கல்முனை மாநகர சபை உறுப்பினர் வீ. புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான சட்ட முதுமானி ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ;ட சட்டத்தரணி ஏ.ம். றகீப், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார், பொறியியலாளர் ரீ. சர்வானந்தன், கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ; உள்ளிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

புதிய மாகாண சபை சட்ட அடிமை விலங்கை தகர்தெறிவதற்கு தடை ஏற்பட்டால் இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்வேன் - ஹரீஸ்

Image
(அகமட் எஸ். முகைடீன்)   முஸ்லிம், தமிழ் சமூகங்களுக்கு பாதகமான புதிய மாகாண சபை சட்ட அடிமை விலங்கை தகர்தெறிந்து பழைய விகிதாசார முறையினை கொண்டுவரும் தனது முயற்சிக்கு தடை ஏற்படுகின்றபோது இந்த அமைச்சில் ஒரு நிமிடம் கூட இருக்காமல் நான் இராஜினாமாச் செய்வேன் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.  'எழுச்சிபெற்று எழுவோம்' எனும் தொனிப்பொருளில் கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரியபள்ளிவாசல் முன்பாக ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது இராஜாங்க அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த பிராந்தியத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் சர்ச்சையுடன் சம்பந்தப்பட்ட அமைச்சான மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு கல்முனை பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பததனைத் தொடர்ந்து இவர் என்ன செய்யப்போகின்றார் என்ற பல்வேறு வாத பிரதிவாதங்கள் தோ

கல்முனை மாநகரத்தை ஒளியூட்டும் செயற்திட்டம் திறந்துவைப்பு

Image
(அகமட் எஸ். முகைடீன், ஜபீர்)   இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கமைவாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை பிரதான வீதியில் பொருத்தப்பட்ட நவீன தெருமின்விளக்கு தொகுதியினை மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான சட்ட முதுமானி ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து குறித்த தெருமின்விளக்கு தொகுதியினை ஒளியூட்டி திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சராக பதவியேற்ற ரவூப் ஹக்கீமையும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட எச்.எம்.எம். ஹரீஸையும் வரவேற்கும் முகமாக கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை சுற்றுவட்டத்திலிருந்து கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரியபள்ளிவாசல் முன்பாக நடைபெற்ற 'எழுச்சிபெற்று எழுவோம்' எனும் தொணிப்பொருளிலான மாபெரும் பொதுக்கூட்ட மேடைக்கு அவர்களை ஊர்வலமாக பெருந

இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் அபிவிருத்திப் பணிகள் அம்பாறையில் ஆரம்பம்

Image
(அகமட் எஸ்.முகைடீன், றியாத் ஏ. மஜீத்)  குடுவிலில் புதிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட காணியினை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸினால் இன்று (23) ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குடுவில் அமைப்பாளர் எம். சுபைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்களான ஜெமீல் காரியப்பர், எம். முஸ்மி, எம். நைசர், நிர்மலா மற்றும் இறக்காமம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் யூ.கே. ஜபீர் மௌலவி உள்ளிட்ட பிரதேசவாசிகள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராக இருந்தபோது அவரின் பணிப்புரைக்கு அமைவாக அவ்வமைச்சின் கீழுள்ள இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபன இறக்காம தொழிற்சாலைக்கு சொந்தமான குடுவில் பிரதேசத்திலுள்ள 4 ஏக்கர் காணி அப்பிரதேசத்தில் புதிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக வழங்கப்பட்டது.  அக்காணியின் பற்றைகளை சுத்தம் செய்யும்