கல்முனை மாநகர சபை 2019 வரவு செலவு திட்டம் தோல்வி


கல்முனை மாநகர சபையின் முதலாவது வரவுசெலவு திட்டம்  தோற்க்கடிக்கப்படுள்ளது. மாநகர சபையின் 2019ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்ட  அறிக்கையை  மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் நேற்று புதன் கிழமை நடை பெற்ற  மாநகர சபை விசேட கூடத்தில் சமர்ப்பித்தார்.

வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப் பட்ட விடயங்கள் மாநகர சபை உறுப்பினர்களுக்கு  ஒருவாரத்துக்கு முன்னர் திருத்தங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டு  நேற்று அதற்கான விவாதம் இடம் பெற்றது.

விவாதத்தின் பின்னர் வரவு செலவு திட்டத்தை  நிறைவேற்றுவதற்கான அங்கீகாரத்தை முதல்வர் கேட்டதற்கிணங்க எதிர் தரப்பு உறுப்பினர்கள் வாக்கெடுப்புக்குவிடுமாறு கோரிக்கை விடுத்தனர் . இதன் பிரகாரம்  2019 க்கான கல்முனை மாநகர சபை வரவு செலவு திட்ட அறிக்கை  வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது  41 உறுப்பினர்களை கொண்ட  கல்முனை மாநகர சபையில் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 17 உறுப்பினர்களும், ஏதிராக 24 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

கல்முனைப்பின் மாநகர சபை  ஆரம்பிக்கப் பட்டு 11 வது வரவு செலவு திட்டமே  இவ்வாறு தோற்கடிக்கப்படுள்ளது . சமர்ப்பிக்கப்பட்ட  வரவுசெலவு திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட வருமானமாக ரூபா.646,714,000.00 எதிர்பார்க்கப்பட்ட செலவாக ரூபா.646,700,208.80 மிகை செலவாக ரூபா.13791.00வாக வரவு செலவு திட்டம்  அமைந்திருந்தது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது