Posts

Showing posts from August, 2014

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் கடின பந்து பயிற்சி கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Image
கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான பெஸ்டர் றியாஸின்   முயற்சியினால் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கடின பந்து பயிற்சி கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த  வெள்ளிக்கிழமை மாலை கல்முனை மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இப்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். மாநகர சபை உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் எம்.எல்.எம்.ஜமால்டீன், சட்டத்தரணி றொசான் அக்தர், ஓய்வுபெற்ற உடற்கல்வி விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா  உட்பட விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளும் மற்றும் பல பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை நாளை அங்குரார்ப்பணம்

Image
கிழக்கு மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை நாளை  2014.09.01 ம் திகதி சம்பிரதாயபூர்வமாக கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் ஆகியோர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்;;ப்பாசனம், வீடமைப்பும் மற்றும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்;களின் அழைப்பின் பேரில் வருகை தரவிருக்கும் ஆளுநர்; மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோரினாலேயே பொது மக்கள் பயன்பெறும் வண்ணம் இவ்வதிகாரசபை திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் கல்வி, காணி மற்றும் காணி அபிவிருத்தி, கலாசார அமைச்சர் விமலவீர திஸாநாயக, சுகாதார, சுதேச வைத்தியம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், விவாசாய, கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய கைத்தொழில் அமைச்சர் இஸட். ஏ. ஹாபிஸ் நஸீர் அகமட், கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலபதி மற்றும் பிரதி தவிசாளர் எம். எஸ். சுபைர் ஆகியோரும் கிழக்கு மாகாண சபையின் கௌரவ உறுப்பினர்

கல்முனை பிர்லியன் விளையாட்டு கழகத்தின் வீரர் எஸ்.எல்.யஹியா அரபாத் 200 வது உதை பந்தாட்டப் போட்டி

Image
கல்முனை பிர்லியன் விளையாட்டு கழகத்தின் வீரர் எஸ்.எல்.யஹியா அரபாத் 200 வது உதை    பந்தாட்டப் போட்டியில் பங்கு பற்றுவதை கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை பிர்லியன் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று  நடை பெற்றது  . கல்முனை பிர்லியண்ட் கழகத்துக்கும் காத்தான்குடி சண் றைஸ் கழகத்துக்குமிடையே  உதை  பந்தாட்டப் போட்டி இடம் பெறவுள்ளது . போட்டியில் எஹியா அரபாத் 200வது போட்டியை சந்திக்கின்றார் . இந்தப் போட்டியில் 2:0 என்ற அடிப்படையில் கல்முனை பிர்லியண்ட் கலக்கம் வெற்றி பெற்றது  கழகத்தின் தலைவர் ஐ.எல்.சம்சுதீன் தலைமையில் நடை பெற்ற  நிகழ்வுககளில் கல்முனை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாகவும் >கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ்  கௌரவ அதிதியாகவும் > கல்முனை பொலிஸ்  நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .ஏ.கப்பார்  ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்  இந்த நிகழ்வில் யஹியா அரபாத் 200வது உதய் பந்தாட்டம் என்ற சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன்  விசேட நினைவு சின்னம் பரிசு வழங்கி கௌரவிக்கப் பட்டார்.  

உண்ணாமல், பருகாமல் 12 மணித்தியாலங்களும் எழுதிக் கொண்டிருக்கும் அனிஸ்டஸ் ஜெயராஜாவின் கின்னஸ் சாதனை- யு.எம் இஸ்ஹாக்

Image
கரன்சி இல்லாத உலகம் என்ற தலைப்பில் தொடந்து 12 மணிநேரம் எழுதும் ஒரு உலக சாதனைக்காக இலக்கியத்தில் ஒரு மாபெரும் முயற்சி அனிஸ்டஸ் ஜெயராஜினால் இன்று (30.08.2014) திருமலை புனித சூசைப்பர் கல்லூரியில் காலை 8.00 மணிக்கு மிகவும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.  இலக்கியத்தை வரலாறு ஆக்குவதில் அனிஸ்டஸ் ஜெயராஜாவின் இச் சாதனை முயற்சி ஈழத்து இலக்கிய உலகிற்கு ஒரு மகுடத்தை வைத்தாற் போன்று அமைந்திருக்கிறது. இன்று இம்முயற்சியை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பத்தி, கிழக்குமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி, திருமலை நகர பிதா க. செல்வராசா, கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் பிரதம கணக்காளர் ரகுராம், வண தந்தை நோயல்,  தந்தை நிதிதாசன், ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளர், கு. திலகரட்ணம்,  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையும் வாழ்த்துரைகளையும் வழங்கினர்.  கிழக்கு தமிழர் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாட்டில் ஆரம்பமாகியிருக்கும் இச்சாதனை எழுத்தை இன்று காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை உண்ணாமல் பருகாமல் 12 மணித்தியாலங்களும் எழுதிக் கொண்டிருக்கும் உறுத

அக்கரைப்பற்று வேலாமத்தில் 118ஆவது வருடாந்த கொடியேற்ற விழா

Image
( எஸ்.எம்.எம்.றம்ஸான்) அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட வேலாமத்தில் இன்று 118ஆவது வருடாந்த கொடியேற்ற விழா   ஆரம்பம். இஸ்லாமியப் பெரியார் கலந்தர் சிக்கந்தர் வலியுல்லா அவர்களின் நினைவாக ஒவ்வரு வருடமும் கொடியேற்றப்பட்டு மௌலித் ஓதி அன்னதானம் (கந்தூரி) வழங்குவது வழமையாகும். இதற்கமைய இன்று 118ஆவது வருடாந்த கொடியேற்ற விழா  ஆரம்பமானதுடன் நாளை கந்தூரி வைபவமும் இடம் பெறும் என வேலாமம் பள்ளி நிருவாத்தினர் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பல ஊர்களிலும் இருந்து அனைத்தின மக்களும் கலந்த கொண்டனர். 

கிராமசேவகர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும்!

Image
நாடளாவிய ரீதியில் நிலவும் கிராம சேவைகள் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் மேலும் 1000 கிராம சேவகர்களை புதிதாக நியமிப்பதற்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடளாவிய ரீதியில் மேலும் சுமார் 1600 வெற்றிடங்கள் தற்போது நிலவுவதாகவும் அவற்றை நிரப்பும் வகையில் 1000 பேருக்கு நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையில் ஏற்கனவே நியமனம் பெற்றவர்களுக்கு அடுத்ததாக அதிக புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவர்களிலிருந்து நேர்முகப் பரீட்சை மூலம் மேலும் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் எனவும் அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே நாடளாவிய ரீதியில் 4000 கிராம சேவகர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கல்முனை அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம்

Image
கல்முனை பிரதேசதில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கல்முனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள்,  வாழ்வாதார அபிவிருத்தி வேலைதிட்டங்கள், பாடசாலைகள் சார்ந்த அபிவிருத்தி முன்னெடுப்புகள் போன்றவற்றின் முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், அவற்றை துரிதமாக பூர்த்திசெய்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. கல்முனை பிரதேச செயலாளர்  மங்கள  விக்ரம ஆராய்ச்சியின்  வழி காட்டலுடன் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்,அப்துல் ஜலீல்,  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு திவிநெம 06ஆம் கட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டம்

Image
(ஹாசிப் யாஸீன்) திவிநெம 06ஆம் கட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாகவும் , அதற்கான  கிராம மட்ட செயலணி அமைப்பது தொடர்பாகவும் சாய்ந்தமருது  பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருது  பிரதேச செயலாளர்  ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள் ஆகியோர்களுக்களுக்கு ஒக்டோபர் 20ஆம் திகதி தேசிய ரீதியில் இடம்பெறவிருக்கும் இந்நிகழ்வுக்கு பிரதேச ரீதியாக  எவ்வாறான முன்னாயத்தங்களை மேற்கொள்வது எனவும், இதற்கான கிராம மட்ட செயலணிகளை  எவ்வாறு தெரிவு செய்வது என்பது தொடர்பாகவூம் அறிவூட்டப்பட்டது. இதில் மாவட்ட செயலக திவிநெகும சிரேஷ்ட  முகாமையாளர் யூஎல்.எம்.சலீம், திவிநெகும முகாமையாளர்களான ஏ.சீ.ஏ.நஜீம், எஸ்.றிபாயா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத்,  திவிநெகும வங்கி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.பார்ஹான், திட்ட முகாமையாளா; எம்.எஸ்.எம்.மனாஸ் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர் .

நற்பிட்டிமுனை மக்களை நோயாளிகளாக மாற்ற கல்முனை மாநகர சபை நடவடிக்கை - இதற்கு உடந்தையாக நற்பிட்டிமுனை மாநகர சபை உறுப்பினர்கள்

Image
கல்முனை மாநகர பிரதேசத்தில் மாநகர சபையினல் சேகரிக்கப்படும் கழிவுகள் நற்பிட்டிமுனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுவதால் அப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு சுகாதாரப் பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் முறையிடுகின்றனர். கல்முனை மாநகர சபையினால் கல்முனை பிரதேசத்தில் சேகரிக்கப்பட்ட  கழிவுகள் இதுவரை காலமும் காரைதீவுக்கு அனுப்பப் பட்டு அங்கிருந்து ஒலுவில் அஸ்ரப் நகரிலுள்ள திண்மக்கழிவு சேகரிக்கும் நிலையத்துக்கு அனுப்பப் பட்டு வந்தது. காரைதீவுக்கு அனுப்பப் படும் கழிவுகளுக்கு கல்முனை மாநகர சபையினால் பணம் செலுத்தப்பட்டு வந்ததாகவும் மாநகர சபையில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கல்முனை மாநகர சபை காரைதீவு பிரதேச சபைக்கு கடனாளியாக இருப்பதன் காரணத்தினால் கல்முனை திண்மக் கழிவை ஏற்பதற்கு காரைதீவு பிரதேச சபை மறுத்துள்ளதால் கல்முனை மாநகர கழிவுகள் கொட்டுவதற்கு இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நற்பிட்டிமுனையில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை நற்பிட்டிமுனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் கொட்டுவதற்கு கல்முனை மாநகர சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கல்முனை மாநகர முதல்வர் ஆல

மலேசியன் ஏர்லைன்ஸ் எடுத்த அதிரடி முடிவு!

Image
மலேசியன் ஏர்லைன்ஸ் 6 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் இரண்டு விபத்துக்களை சந்தித்துள்ளதால் தர்ம சங்கடமான சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில் MH370 மற்றும் MH17 விமான விபத்து எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிரதி முதல்வருக்கு அதிகாரம் வேண்டும் பதவியை இராஜினாமா செய்த - கல்முனை பிரதி முதல்வர் பிர்தௌஸ் வேண்டுகோள்

Image
பிரதி முதல்வராக கல்முனை மாநகர சபைக்கு நியமிக்கப்படவுள்ள அப்துல் மஜீதுக்கு முதல்வரது சில அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக கடமையாற்றி இன்று ராஜினாமா செய்துள்ள எம்.ஐ.எம்.பிர்தௌஸ்  ஊடகவியலாலர்களிடம் தெரிவித்தார். கட்சியின் நலன்கருதியும் தலைமைத்துவத்தின் கட்டுப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு பிரதி முதல்வர் பதவியை இராஜினாமா செய்துள்ளேன். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த அப்துல் மஜீத் பிரதி முதல்வராக நியமிக்கப்படுவதை பாராட்டுகின்றேன். என்று தனது வாழ்த்துக்களையும், இன்று கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் தற்போதய முதல்வர் வேலைப்பழு கூடியவராக இருப்பதனால் தனது பொறுப்புக்கள் சிலவற்றை புதிய பிரதி முதல்வருக்கு கையளிக்க வேண்டும். இந்த விடயத்தை நான் உட்பட உறுப்பினர்கள் முதல்வர் நிஸாம் காரியப்பரிடம் எத்தி வைக்கவுள்ளோம் எனவும் பிர்தௌஸ் தெரிவித்தார்.

கல்முனைக்கு அப்பாலும் ஹரீஸ் எம் .பீ யின் சேவை !!

Image
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் இவ்வாண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு  செலவுத்திட்டத்தின் 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட போட்டோ பிரதி இயந்திரம் மஜீட்புரம் வித்தியாலயத்திற்கும், 75 ஆயிரம் ரூபா நிதியில் கொள்வனவு  செய்யப்பட்ட அலுவலக தளபாடங்கள் மஜீட்புரம் ஹூஸ்னுல் மாஅப் பவூண்டேசன் அமைப்பிற்கும் கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (28) மஜீட்புரம் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் வை.பி.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ் உபகரணங்களை கையளித்து வைத்தார் . இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளா; ஏ.மன்சூர் , முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்  எம்.பி.எம்.அன்வர் , வலயக் கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.சௌதுல் நஜீம், பிரதிக் கல்விப் பணிப்பாளார் உமர்  

மாளிகைக்காடு கிராமத்துக்குள் காட்டு யானை ! மக்கள் கலவரம் சொத்துக்கும் சேதம்

Image
 SMR இன்று(28) அதிகாலை 2 மணியளவில் மாளிகைக்காடு மேற்கில் உள்ள ரியால் மர ஆலை வீதியில் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. இதனால் குழப்பமடைந்த மக்கள் கூக்குரலிட்டு யானையை விரட்டியுள்ளனர். இதன்போது அருகில் இருந்த மதில் சுவர் ஒன்றை வீழ்த்திவிட்டு மாளிகைக்காட்டின் தெற்குப்புறமாக உள்ள   காரைதீவுப் பக்கமாக அந்த யானை ஓடிச் சென்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். 

'Muslims of Sri Lanka - Under Siege'

Image
"Latheef Farook" This  book is about the never ending 'Hate- Muslim' campaign unleashed by a small group of Sinhala racists  who fortunately do not enjoy the support of the vast majority of  Sinhalese in the country.  The writer is concerned that this campaign, unless brought to a  halt, is likely to lead to a total breakdown in communal  harmony to the detriment of the country which has  just  emerged from a devastating ethnic war.  This campaign began around four years ago, coincidentally or  otherwise, with the ever increasing Israeli presence in the  island. Today the Muslim community has become the victim of  not merely highly offensive hate speeches but also subjected  to attacks on mosques, religious schools, halal food,  women’s dress code,  slaughtered pigs thrown into mosque, burning and urinating  on Holy Quran, forcing Muslim students to kneel down and  worship Sinhalese teachers, writing Allah’s name on

பேச்சுக்கு கூட்டமைப்பு தயார்! சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு!!

Image
இனப்பிரச்சினை தீர்விற்காக ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பான பேச்சுக்களை அரசுடன் ஆரம்பிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தாயாராகவுள்ளது.  இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  எங்களிடம் மறைமுக நிகழ்ச்சி நிரல் எதுவுமில்லை, அரசியல் தீர்வொன்றை காண்பது குறித்து உறுதியாகவுள்ளோம். நாங்கள் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்று தெரிவித்து எங்களுடன் பேச முடியாது என அரசாங்கம் தற்போது தெரிவிக்கிறது.  அரசாங்கம் பொய்யான காரணங்களைக் காட்டி தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பை தட்டிக்கழிக்க முயல்கிறது எங்களுடன் பேச்சுக்களை மேற்கொள்வதிலிருந்து பின்வாங்கியது அரசாங்கமே. அது தற்போது பேச்சுக்களை ஆரம்பிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழைப்புக்காக காத்திருப்பதாக தெரிவிப்பது ஆச்சரியமளிக்கின்றது - என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.