Posts

Showing posts from August, 2013

மூன்று இலச்சம் சனத்தை புலிகள் பிடித்து வைத்திருந்த போது நீங்கள் வந்திருந்தால் நல்லா இருந்திருக்குமே!

Image
நவிபிள்ளை:   என்ன அது? மூன்று   இலச்சம்  சனத்தை  புலிகள்    பிடித்து  வைத்திருந்தவர்களா?   இதை பற்றி  யாரும்  எனக்கு  அப்ப   சொல்லவில்லையே..? உண்மையாகவா சொல்லுகிறீர்கள்.  சண்டை   நடந்த  பகுதிகளில்   நான்  சந்தித்த  தமிழாகளும்   நீங்கள்  சொல்வது  போன்று  தான்..  ‘புலிகள்   தங்களை  தப்பித்து   போகவிடாமல்  பிடித்து  வைத்திருந்ததாக’  என்னிடம்   சொன்னார்கள். மகிந்த   :   பின்ன  நான் என்ன பொய்யா சொல்லுகிறேன்?   இதற்காகத்தான்,  நான்   இங்கு  வந்து  நிலைமைகளை  நேரில்  பார்க்குமாறு  எல்லோருக்கும்  அழைப்பு  விடுக்கின்றேன்.  இப்போ உங்களுக்கு  உண்மைகள்  புரிந்திருக்கும்.  சரி, சரி  நடந்தவைகளை   நடந்தவைகளாக இருக்கட்டும்.  மறப்போம்,  மன்னிப்போம்… அவற்றை  பற்றி     பேசுவதை  விட்டுவிடுவோம்.  உங்கள்  மதப்போதனைப்படி   நடந்தவைகள்  நன்றாகவே  நடந்தன,  நடப்பவைகளும்  நன்றாகவே   நடக்கின்றன..,  இனிமேல்  நடக்கபோவதை  பற்றி   பேசுவோம்.   நாட்டை  சுற்றி  நல்லா  பார்த்தீங்க  தானே..?  எப்படி எங்கட  நாடு  அழகான  நாடு தானே? நவி:   சுப்பர். ரீயலி  சொர்க்கம் தான்.   மக்களும்   நல்லவர்கள்,  எங்களை  நன்றாக   உப

ஜனாதிபதி - நவநீதம் பிள்ளை சந்திப்பு!

Image
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலhன சந்திப்பும்  பேச்சுவார்த்தையும் நேற்று அலரி மாளிகையில் நடைபெற;றது. அலரி மாளிகையைப் பார்க்க வந்திருந்த பாடசலை மாணவர்களையும் நவநீதம் பிள்ளை சந்தித்து இலங்கையின் சுதந்திரக் கல்வி பற்றி உரையாடினார். ஜனாதிபதிக்கும் நவநீதம் பிள்ளைக்கும் இடையில்  நடைபெற்ற சந்திப்பு தொடர்பில்  ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் நவநீதம்பிள்ளை தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு- மீள்நிர்மாணம்- சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை தன்னால் கண்டுக்கொள்ள முடிந்ததாக நவீபிள்ளை தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கிற்கு சென்று மக்களை சந்தித்ததுடன் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார். புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பிலான உங்களுடைய நோக்கத்தை நான் மதிக்கின்றேன் எ

மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சின் மேற்பார்வை எம்பியாக ஏ.எச்.எம்.அஸ்வர் நியமனம்!

Image
பாராளுமன்ற உறுப்பினரும் ,  பாராளுமன்ற பேரவை உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் ,  மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சின் மேற்பார்வை எம்பியாக ,  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்லை முன்னிலையில் இவர்  இன்று முற்பகல் அமைச்சில் வைத்து தமது கடமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டார். தமது அமைச்சின் மேற்பார்வை எம்பியாக ஏ.எச்.எம்.அஸ்வர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் ஊடகத்துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவரை தமது அமைச்சுக்கு நியமித்தமை குறித்து தாம் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் ,  நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் என் எம் அமீன் , தகவல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஹில்மி மொஹமட் ,  அஸ்வர் எம்பியின் இணைப்புச் செயலாளர் முபாரக் அலி ,  தகவல் அதிகாரி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் ஆகியோர் உட்பட பிரமுகர்கள் , ஊடகவியலாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். 1960 ஆம் ஆண்டில் ச

கிழக்கு மாகாண அதிபர்கள் மற்றும் ஆசியர்களுக்கு ஜனாதிபதி விருது

Image
யு.எம்.இஸ்ஹாக்  கிழக்கு மாகாண அதிபர்கள் மற்றும் ஆசியர்களுக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படவுள்ளதாக மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் அறிவித்துள்ளார். கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு மேலாக சர்வதேச மட்டத்தில் அல்லது தேசிய மட்டத்தில் விஷேட திறன்களை வெளிப்படுத்திய அதிபர்கள் மற்றும் அசிரியர்களுக்கு இந்த ஜனாதிபதி விருது வழங்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் கல்முனை ஆகிய கல்வி மாவட்டங்களில் இருந்து தமிழ், முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த ஐந்து அதிபர்களும் மூன்று ஆசிரியர்களும் என எட்டு பேர் இந்த விருது வழங்கப்படவுள்ளது என மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்தார். "இதற்கான விண்ணப்பங்கள் வலய மட்டத்தில் கோரப்பட்ட போதிலும் விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டியோர் மாத்திரம் இதற்காக வலயக் கல்வி பணிப்பாளர்களினால் சிபாரிசு செய்ய்பபட்டுள்ளனர். இதனை பரவலாக்கும் விதத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து நேரடியாக விண்ணப்பங்களை பெற மாகாண கல்வி திணைக்களம் கோரியுள்ளது" என அவர் தெரிவித்தார்.

நவநீதம்பிள்ளையின் வருகைக்கு எதிராக பிக்குகள் திரண்டு ஆர்ப்பாட்டம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராவணா சக்தி அமைப்பு இன்று (26) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் பெரும் எண்ணிக்கையிலான பிக்குகள் பங்கேற்றனர். வீடியோ  இணைப்பு 

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக நீளமான கூந்தல் அழகி!

Image
உலகில் எத்தனையோ சாதனையாளர்கள் குறித்து செய்திகள் வந்திருக்கக்கூடும். அனால், நீளத் தலைமுடி குறித்த சாதனையாளர் இந்தப் பெண் ஒருவராகத்தான் இருக்கமுடியும். இவரது சாதனையை முறியடிக்க வேறு எவரேனும் வருவார்களா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம். ஜார்ஜியா நாட்டின் அட்லாண்டா நகரில் தனது மகனுடனும், இரண்டாவது கணவருடனும் வசித்து வருபவர் ஆஷா மண்டேலா ஆவார். 50 வயதாகும் இவர் கடந்த 25 வருடங்களாகத் தனது முடியைக் கத்தரித்துவிடாமல் கவனமுடன் பாதுகாத்து வருகின்றார்.கடந்த 2008ஆம் ஆண்டில் நீளமான கூந்தலுக்கான முதல் பெண்ணாக இவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார். இவரது ஒரு முடிக்கற்றையின் நீளம் 19 அடி,6 அங்குலமாக இருந்தது. இதனால், இவரே இவரது சாதனையை முறியடித்தவராக அறியப்பட்டார். அதற்கு அடுத்த வருடம் இதுபோல் பின்னப்பட்டிருக்கும் முடிக்கற்றைகள் மிக நீளமாக வளரும் தன்மை கொண்டிருப்பதால் கின்னஸ் புத்தகமே அந்த சாதனையைக் குறிப்பிடுவதை நிறுத்திவிட்டது. சிறுசிறு பின்னல்களாக தனது முடியினை அலங்கரித்துக் கொள்ளும் ஆஷா வெளியில் செல்லும்போது குழந்தைகளை சுமந்து செல்லுவது போன்ற குறுக்குத் துணியினைத் தோளில் கட்டிக்கொண்டு

மணப்பந்தலில் நாய்களுக்கு திருமணம்

Image
கலாசார மரபை மீறியதாக அமைச்சர் ஏக்கநாயக்கா விசனம் கண்டி உத்தியோகபூர்வ பொலிஸ் நாய் பராமரிப்பு நிலையத்தில் கலாசாரப் பெருமை மிக்க மணப்பந்தலில் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட் டுள்ளது. கலாசார விழுமியங்களை அவமதிக்கும் இத்தகைய கலாசார சீர்கேடான நிகழ்வு தொடர்பில் விசாரணை நடத்தி உடனடியாக தமக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கலாசார அமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க பொலிஸ் மா அதி பரைப் பணித்துள்ளார். பாரம்பரிய பெருமை மிக்கச் சொந்தமான மணப்பந்தலில் நாய்களுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டமை தொடர்பில் நாம் மிகுந்த வேதனையடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை நாம் முற்றாக நிராகரிப்பதாகவும் இது தொடர் பில் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இலங்கையின் தேசிய கலாசாரச் சொத்தான பாரம்பரிய மனப்பந்தல் இதன்மூலம் கேலிக்குட்படுத்தப்பட் டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர்; இது போன்ற சம்பவங்கள் இனி இடம் பெறாதிருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் அவர் பொலிஸ் மா அதிபரைக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது:- வெளிநாடுகளிலிருந்து

ஆகாஸ் நிறுவனத்தின் மரநடுகை திட்டம்

Image
ஆகாஸ்  அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மரம் நடுகைத்திட்டத்தின் ஒரு கட்டமாக பெரியநீலாவணை  சரஸ்வதி வித்தியாலயத்தில் மாமரம் நடுகைத் திட்டம் ஒன்று நேற்று 2013.08.25ம் திகதி மேற்கொள்ளப்பட்டது. அதன் போது பாடசாலையின் அதிபர் P.ஜெகநாதன் அவர்களிடம் மரங்கள் கையளிக்கப்பட்டு மரங்கள் நட்டும் நீர் வசதியும் செய்து வழங்கப்பட்டது. இதன் போது பாடசாலையின் ஆசிரியர் M.R.றபிஅசாம் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களும் பங்குகொண்டனர். 

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை இன்று!

Image
2013ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை இன்று (25) நாடு முழுதிலும் இடம்பெறவுள்ளது. இன்றைய பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 329 725 மாணவர்கள் தோற்றுகின்றனர். கல்முனை  கார்மேல் பத்திமா  தேசிய பாடசாலையில் நடை பெற்ற  பரீட்சை நடவடிக்கைகள் 

நவநீதம்பிள்ளை நாளை இலங்கை வருகிறார்!

Image
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை நாளை (25) ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார். அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் நவநீதம்பிள்ளை எதிர் வரும் ஐந்து நாட்களுக்கு நாட்டில் தங்கியிருப்பாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. நவநீதம்பிள்ளை இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் அவர் செல்லவிருக்கும் இடங்கள் மற்றும் சந்திக்கவுள்ள நபர்கள் குறித்த நிகழ்ச்சி நிரலை வெளிவிவகார அமைச்சு ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து தயாரித்துள்ளது. இதற்கிணங்க நவநீதம் பிள்ளை வடக்கிற்கும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலைக்கும் விஜயம் செய்ய திட்டமிடபட்டுள்ளது. இவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெ டுத்துள்ளது. கொழும்பிலிருந்து விசேட ஹெலிகொப்டர் மூலம் கிளிநொச்சி செல்லவுள்ள நவநீதம் பிள்ளை- அபிவிருத்தி திட்டங்களை நேரில் பார்வையிடக் கூடிய வகையில் அங்கிருந்து தரை மார்க்கமாகவே ஏனைய பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார். மேலும் வடக்கில் சிவில் சமூகத்தினரை சந்

கல்முனை பிரிலியன்ட் கழகம் 300வது உதைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி!

Image
கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக் கழகத்தின் 300வது உதைப்பந்தாட்டப் போட்டி  (23) வெள்ளிக்கிழமை மாலை கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஐ.எல்.சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இவ்வுதைப்பந்தாட்ட போட்டியில் மாவனல்ல யுனைட்டெட் விளையாட்டுக் கழகத்துடன் பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம் மோதியது. இதில் போட்டி ஆரம்பித்து 20 நிமிடங்களில் பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் முன்னணி வீரர் எம்.சீ. ஹாறூன் எதிரணிக்கு முதலாவது கோலை புகுத்தினார். இறுதியில் மேலும் மூன்று கோல்கள் புகுத்தப்பட்டது. இதன் மூலம் கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக்கழகம் 4 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெற்ற கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்திற்கு வெற்றிக்கேடயமும் பணப்பரிசும் பிரதம அதிதி உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது. 2ம் இடத்தைப் பெற்ற மாவனல்ல யுனைட்டெட் கழகத்திற்கும் பரிசில்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது. 300வது போட்டியின் இறுதி நிகழ்வின்போது, கல்முனை பிரதேசத

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உப தலைவர்கள் இருவர் ஆளும் கட்சியில் இணைவு!

Image
தமிழ் தேசிய கூட்டமைப்பைச்சேர்ந்த பிரதேச சபை உப தலைவர்கள் இருவர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து ஆளும் கட்சியில் இணைந்துக் கொண்டனர்.

ஊடகத்தாரின் உல்லாச குடும்ப சவாரி!

Image
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் அங்கத்தவர்களின் குடும்பங்களுக்கான ‘ஊடகத்தாரின் உல்லாச குடும்ப சவாரி’ கடந்த சனிக்கிழமை சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு பயிற்சி நிலையத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சம்மேளத்தின் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறியவர்கள் பெரியவர்களுக்கான பலூன் உடைத்தல், அப்பம் சாப்பிடுதல், போத்தலில் தண்ணீர் நிரப்புதல், சாக்கோட்டம், தவழ்தல், கூடையில் பந்து போடுதல் உள்ளிட்ட பல விளையாட்டுக்கள் நடைபெற்றன. மாவட்ட சாரணிய ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, எம்.எல்.எம்.ஜமால்தீன் ஆகியோர் போட்டிக்களை நெறிப்படுத்தினார்கள். விஷேட விருந்தினராக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் என்.எம்.எம்.நௌசாட் கலந்து கொண்டார்.

கல்முனை பிரிலியன்ட் கழகத்தின் 300வது உதைபந்தாட்டப் போட்டி

Image
யு.எம்.இஸ்ஹாக்    கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக் கழகத்தின் 300வது உதைபந்தாட்டப் போட்டி இம்மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் கல்முனை பிர்லியண்ட்  கழகமும் மாவனல்லை யுனைடட் கழகமும் மோதவுள்ளது. இது குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்  ஊடக மாநாடு  கடந்த சனிக்கிழமை  கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் விளையாட்டுக் குழுவின் தலைவர் எஸ்.எல்.யஹ்யாகான் தலைமையில் இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் மகாநாட்டில கழகத்தின் செயலாளர் எஸ்.ரீ.எம்.பஸ்வாக் , பொருளாளர் எம்.எம்.ஏ.றஸாக் , பயிற்றுவிப்பாளர் எம்.எஸ்.எம்.பளீல் உட்பட பலர் கலந்து கொண்டனர். அங்கு கழகத்தின் செயலாளர் எஸ் ரீ.எம்.பஸ்வாக் கருத்துத் தெரிவிக்கையில்; “கல்முனை பிராந்திய உதைபந்தாட்ட வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ள கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக்கழகம் 1991 ஆம் ஆண்டு ஆரம்பித்த உதைபந்தாட்ட பயணம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 300வது போட்டியாக தடம் பதிக்கவுள்ளது. இலங்கை உதைபந்தாட்ட சங்கம் 2010 ஆம் ஆண்டு கொழும்பு ஸீ.ஆர்.எப்.சி.விளையாட்டு மைதானத்தில் இடம்

நாளை முதல் வகுப்புக்கள் நடத்த தடை!

Image
எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 25 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு- தனியார் வகுப்புக்களை நடத்தவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த காலத்தில் மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள் விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிள்ளைகளுக்கு சுதந்திரமாக நேரமும் இருக்க வேண்டும். 05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் க. பொ. த. சாதாரண- உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் தினத்திலிருந்து 05 தினங்களுக்கு முன் இருந்து பரீட்சைகள் முடிவும் வரையிலான முழுக் காலத்தில் பரீட்சையில் தோற்றுபவர்களுக்கு துணை வகுப்புக்களை அமைத்தல் விரிவுரை கருத்தரங்கு செயலமர்வு- மாதிரி வினாபத்திரம் அச்சிட்டு விநியோகித்தல் போன்றவை வர்தமானி மூலம் தடுக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்கு முன்னர் பிள்ளைகளுக்கு சிறிது ஓய்வு வழங்க கல்வி அமைச்சு எடுத்த தீர்மானம் காலத்துக்குப் பொருத்தமானதென சிறுவர் நரம்பியல் மருத்துவ நிபுணர் டொக்டர் அநு

கிழக்கு மாகாண விளையாட்டு விழா இன்று மட்டக்களப்பில் ஆரம்பம்

Image
இவ்வருடத்திற்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி விளையாட்டு மைதானத்திலே இன்றும் நாளையும் (17, 18) நடைபெறவுள்ளது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி 210 வீர, வீராங்கனைகள் கலந்து இவ் விளையாட்டு விழாவில் முதலாவது நாள் நிகழ்வு காலை 8.30 மணிக்கு இடம்பெறும் இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ். அமலநாதன் கலந்துகொள்கிறார். இரண்டாம் நாளான நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துறை அமைச்சர் எம். ஐ. எம். மன்சூர், கெளரவ அதிதியாக மாகாண பிரதம செயலாளர் அபய குணவர்தனவும் கலந்து கொள்கின்றார்கள். இந்நிகழ்வு ஞாயிறு மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதேவேளை 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண மாகாணத்திலிருந்து பங்குபற்றி சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட 71 வீர வீராங்கனைகளும் 13 பயிற்றுவிப்பாளர்களுக்கும் பணப் பரிசில்களும் ஞாபகார்த சின்னங்களும் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு வருடா வருடம் நடத்தப்பட்டு வருகிறது இதனை ‘வரணவிழா’ என அழைக்கப்படுகிறது.