மணப்பந்தலில் நாய்களுக்கு திருமணம்

கலாசார மரபை மீறியதாக அமைச்சர் ஏக்கநாயக்கா விசனம்
கண்டி உத்தியோகபூர்வ பொலிஸ் நாய் பராமரிப்பு நிலையத்தில் கலாசாரப் பெருமை மிக்க மணப்பந்தலில் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட் டுள்ளது. கலாசார விழுமியங்களை அவமதிக்கும் இத்தகைய கலாசார சீர்கேடான நிகழ்வு தொடர்பில் விசாரணை நடத்தி உடனடியாக தமக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கலாசார அமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க பொலிஸ் மா அதி பரைப் பணித்துள்ளார்.
பாரம்பரிய பெருமை மிக்கச் சொந்தமான மணப்பந்தலில் நாய்களுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டமை தொடர்பில் நாம் மிகுந்த வேதனையடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை நாம் முற்றாக நிராகரிப்பதாகவும் இது தொடர் பில் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையின் தேசிய கலாசாரச் சொத்தான பாரம்பரிய மனப்பந்தல் இதன்மூலம் கேலிக்குட்படுத்தப்பட் டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர்; இது போன்ற சம்பவங்கள் இனி இடம் பெறாதிருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் அவர் பொலிஸ் மா அதிபரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது:- வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள மூன்று சோடிநாய்களுக்குத் திருமணம் செய்து அது பதியப்பட்டு பின்னர் கலாசார பெருமைமிக்க மணப்பந்தலில் ஏற்றிவைத்து அவற்றுக்கு திருமண சடங்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் கண்டி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து திருமணத்திற்கு அலங் கரிக்கப்பட்ட வாகனமாக பொலிஸ் ஜீப் வண்டி ஒழுங்கமைக்கப்பட்டு நாய் ஜோடிகள் அதில் ஏற்றப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த பொலிஸ் ஜீப் வண்டியை பொலிஸ் நாய் ஒன்றே செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் மத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எச். என். பி. அம்பன்வல, பேராதனை பல்கலைக்கழக விலங்கியல் பீட தலைவர் இந்ரா த சில்வா,
உத்தியோகபூர்வ பொலிஸ் நாய்கள் பிரிவின் பணிப்பாளர் சிசிர வீரக்கோன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண் டுள்ளனர்.
இந்த நாய்கள் ஒவ்வொன்றையும் வெளிநாடுகளிலிருந்து 7 மற்றும் எட்டு இலட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய் துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

இனப்பெருக்க நிகழ்ச்சி திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட நாய் சோடிகளுக்காக ஆக்கப்பட்ட மண மேடை, கலாசார பாரம்பரியத்தை அவமதிக்கவில்லை எனவும் அது தரமான நாய்களை இனப் பெருக்கும் திட்டத்தின் தொடக்கத்தை குறிக்கும் நிகழ்வு மட்டுமே என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருமண நிகழ்வு தொடர்பாக வெளியான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பொலிஸ் தலைமையகத்தினால வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக சிறிவர்தன மேலும் தெரிவிக்கையில்,

"ஏராளமான அந்நிய செலாவணியை மீதப்படுத்தக்கூடிய இந்த திட்டம் தொடர்பான நிகழ்வு சகல கலாசார விழுமியங்களையும் மதிக்கும் வகையில் நடத்தப்பட்டது" என்றார்.

இது முதலாவது நிகழ்வாக இருந்தமையினால் நாம் அதை கொண்டாட விரும்பினோம். பல சமய நிறுவனங்களும் கலாசரா அமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க ஆகியோர் இந்த நிகழ்வினை கண்டித்ததை தொடந்தே பொலிஸ் திணைக்களம் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி