உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு எனத் தெரிவித்து, CID யினால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மாஅதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. அச்சங்கத்தின் தலைவர், காலிங்க இந்ததிஸ்ஸவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது தொடர்பில் தெளிவான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும், அவர் ஒரு சட்டத்தரணி எனும் வகையில் கலந்து கொண்ட ஒரு சில நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இக்கைது இடம்பெற்றிருப்பதாக நாம் அறிகின்றோம். தற்போது சட்ட ரீதியாகவும், இயல்பாகவும் இடம்பெறும் நிலுவையிலுள்ள விசாரணைகள் தொடர்பில் தலையிடும் நோக்கம் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு இல்லை. ஆயினும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் நலனில் நாம் அக்கறை கொண்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அவரின் தொழில்சார் உரிமை தொடர்பில் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், அவரது கைதுக்கான காரணம் மற்றும் அதற்கான அட...