Posts

Showing posts with the label வானொலி

இன்று உலக வானொலி தினம்!

Image
உலக வானொலி தினம் (World Radio Day) ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி அதாவது இன்று கொண்டாடப்படுகின்றது.  இந்த நாளை ஐ.நா.வின் கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) ஆண்டு தோறும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது. ஆயினும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஐ.நா. 36 ஆவது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின் , நவம்பர் 3 ஆம் திகதியை உலக வானொலி தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதன் பின்னர் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதியை உலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையை கொண்டாடவும், பல நாட்டு வானொலியாளர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், ஒலிபரப்புச் சம்பந்தமான முடிவெடுப்பாளர்களை வானொலிகள் மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாறிக் கொள்வதனை ஊக்குவிப்பதற்கும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மலர் இணைய வானொலியின்! நவீன ஊடகமும் மாணவர்களின் பங்களிப்பும் !!

Image
மலர் இணைய  வானொலியின் அனுசரணையுடன் நவீன ஊடகமும்  மாணவர்களின் பங்களிப்பும் என்ற  தலைப்பில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு  செயலமர்வொன்று  இடம் பெற்றது . கல்லூரி முதல்வர்  அருட் தந்தை பிரைன் செலர்  தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  மலர் இணைய வானொலியின்  முகாமைத்துவப் பணிப்பாளர்  எப்.எம்.சரீக்  மற்றும் , இலங்கை மனித உரிமைகள் அமைப்பின்  அம்பாறை மாவட்ட  பிரதிப் பணிப்பாளரும் , மலர் இணைய  வானொலியில் பணிப்பாளர் சபை உறுப்பினருமான  ஐ.மொஹமட்  சபீக் ஆகியோரால்  கருத்தரங்கு நடாத்தப் பட்டது . இக்கருத்தரங்கில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர் 

ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் “முஸ்லிம் சேவை இணைய வானொலி” ஆரம்பம்

Image
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் “முஸ்லிம் சேவை இணைய வானொலி” சேவை எதிர் வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு ஆறாம் இலக்க கலையகத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தலைமையில் இடம்பெறவிருப்பதாக இனைய வானொலியின் பொறுப்பாளர் அஹமட் முனவ்வர் தெரிவித்தார். இதன்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில் உயர் பதவிகள் வகித் பேராசிரியர் மர்கூம் டொக்டர் உவையிஸ், ஏ.எம்.காமில் மரைக்கார், வி.ஏ.கபூர், எம்.சி.கபூர், எம்.எஸ்.குத்தூஸ், மௌலவி.இஸட்.எல்.எம்.முஹமட், நூராணியா ஹஸன் மற்றும் ஒலிபரப்பு முன்னோடியும் தயாரிப்பாளருமான எம்.ஏ.எம்.முஹமட் ஆகியோரின் குரல்ஒலிகள் அடங்கிய இறுவெட்டுக்களும் உத்தியோக பூர்வமாக வெளியிட்டு வைக்கப்படவிருக்கின்றது. மேற்படி நிகழ்வில் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் புத்தி ஜீவிகள், மார்க்க அறிஞர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்த கொள்ள இருப்பதாகவும் மேற்படி நிகழ்வினை கண்டுகளிக் விரும்புபவர்கள் மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ளலாம் எனவும் அங்குரார்ப்பன நிகழ்வினை நேரடி உலிபரப்புச் செய்யவுள்ள...