Posts

Showing posts with the label விளையாட்டு

தேசிய விளையாட்டுப்போட்டிக்கு ஒப்பானதொரு நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகாவித்தியாலய வருடாந்த இல்லவிளையாட்டு இறுதிநாள் நிகழ்வு

Image
தேசிய விளையாட்டுப்போட்டிக்கு  ஒப்பானதொரு நிகழ்வாக  நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகாவித்தியாலய  வருடாந்த இல்லவிளையாட்டு  இறுதிநாள் நிகழ்வு இடம் பெற்றது .பச்சை நிற ஸபா  இல்லம் ,நீல நிற மினா இல்லம் ,சிவப்பு நிற  அறபா  இல்லம் என மூன்று இல்லங்கள் கலந்து கொண்ட நிகழ்வில்  சிவப்பு நிற அறபா  இல்லம் 485 புள்ளிகளைப்பெற்று  இவ்வருடத்தில் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 437 புள்ளிகள் பெற்று ஸபா  இல்லம் இரண்டாம் இடத்தையும் ,417 புள்ளிகள் பெற்று மினா இல்லம் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது. கல்லூரி அதிபர் வீ.எம்.ஸம்ஸம் தலைமையில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு  நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகவும்  கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் ,கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் பீ.எம்.எம்.பதுர்தீன் ,உதவிக்கல்விப்  பணிப்பாளர் யு.எல்.எம்.சாஜித் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் முன்னாள் கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஃபர் மற்றும் முன்னாள் கல்லூரி அதிபர் எம்.எ...

அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிக்க அனுமதி

Image
அரசாங்க பாடசாலைகளுக்கான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்காக அமைச்சரவை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அதனடிப்படையில் 3,850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமாக கத்தாரில் நடந்து முடிந்த நியாஸ் ஏ மஜித் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டி

Image
மாவனல்லை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற நியாஸ் ஏ மஜித் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை ,  ஜனவரி  04  ஆம் திகதி மீஸைத் விளையாட்டு அரங்கத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸாஹிராவின் ஓய்வு பெற்ற ஆசிரியரும் மாவனல்லை நகரின் சமூக நலன் விரும்பியும் ,  முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான மர்ஹூம் நியாஸ் ஏ மஜித் அவர்களுக்குக்கான கௌரவிப்பாகவே இக்கிண்ணம் பெயரிடப்பட்டு இருந்தது. இத்தினத்தில் மாவனல்லை நகரின் இரு முக்கிய பாடசாலைகளாக விளங்கும் ஸாஹிரா மற்றும் பதுரியாவின் பழைய மாணவர்களுக்கிடையிலான ஷா ஆசிப் கிண்ண கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது. ஷா ஆசிப் இளம் வயதில் உயிர் நீத்த ஸாஹிராவின் சிறந்து விளங்கிய ஒரு கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பதுரியாவின் பழைய மாணவர் அணி வெற்றி பெற்று முதல் ஷா ஆசிப் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. இந்த சுற்றுப் போட்டியில் ஐந்து அணிகள் மோதியதுடன் அவை பாடசாலையின் செயற்படும் இல்ல விளையாட்டு போட்டியில் உள்ளவாறு கோடோவா ,...

பதுரியன்ஸ் பாஷ் 2018 - மாபெரும் உதைபந்தாட்ட போட்டி

Image
மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளையின் ஏற்பாட்டில், பழைய மாணவர்களுக்கு இடையிலான புட்சல் கால்பந்து போட்டி (Baduriyan's Bash 2018 - Inter Batch Futsal Tournament) நேற்றுடன் இனிதே நிறைவு பெற்றது. கடந்த இரு தினங்களாக (சனி 15.12.2018, ஞாயிறு 16.12.2018) நடாத்தப்பட்ட இந்த புட்சல் போட்டியானது மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.  பதுரியா மத்திய கல்லூரி மைதானத்தில் இனிதே நிறைவு பெற்ற இந்த போட்டியை கண்டுகளிக்க நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பாடசாலையின் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். இது நீண்ட நாட்களுக்கு பிறகான அணைத்து பழைய மாணவர்களினதும் சிறந்த ஒன்று கூடுதலாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது..  லீக் முறையில் நடந்த இந்த புட்சல் தொடரில் 33 அணிகள் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியானது 25 வயதுக்கு கீழ், 25 முதல் 35 வயதெல்லையினர், 35 வயதுக்கு மேல் என்ற அடிப்படையில் இடம்பெற்றது. இதில் மூன்று குழுக்களிலும் வெற்றி பெற்றவர்களுக்கு சாம்பியன்ஸ், ரன்னர்ஸ்-அப் கிண்ணங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதி...

சாய்ந்தமருதில் தங்கம் வென்ற இளைஞர்களுக்கு பாராட்டு ( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

Image
சாய்ந்தமருதில் தங்கம் வென்ற இளைஞர்களுக்கு பாராட்டு ( எம்.ஐ.எம்.அஸ்ஹர்) தேசிய   இளைஞர்   சேவைகள்   மன்றத்தின்  30 வது   தேசிய   இளைஞர்   விளையாட்டுப்போட்டி மாத்தறையில் இடம்பெற்றபோது   4×100   மீற்றர் அஞ்சல் ஒட்டப்போட்டியில்   அம்பாறை    மாவட்டத்தில்   வரலாற்றில்   முதல்   முதலாக   தங்கப்   பதக்கம்    வென்ற இளைஞர்களுக்கு   சாய்ந்தமருது    -  மாளிகைக்காடு ஜூம்மா   பெரிய   பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரால் பாராட்டி    கெளரவிக்கும்   நிகழ்வு    கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா   தொழுகையின்   பின் பள்ளிவாசல்   மக்கள்   பணிமனையில் இடம்பெற்றது. சாய்ந்தமருது    -   மாளிக்காடு   ஜூம்மா   பெரிய   பள்ளிவாசல்   தலைவர்    அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா   அவர்களின்   தலைமையில்   இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சாய்ந்தமருது   -  மாளிக்காடு   ஜ...

இராணுவ கிண்ண உதைபந்தாட்டம் கல்முனை சனிமெளன்ட் கழகம் சம்பியன்

Image
அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட 'ஏ' பிரிவு 8 அணிகள் பங்கு பற்றிய இலங்கை இராணுவ கிண்ண − -2018 உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் கல்முனை சனிமெளன்ட் விளையாட்டுக் கழகம் 2:1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இலங்கை இராணுவ கிண்ண− -2018 சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. இவ்விறுதிப்போட்டி கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த (30) கல்முனை சனிமெளன்ட விளையாட்டுக்கழகம் மற்றும் மருதமுனை கோல்ட்மைன்ட் விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் எதிர்த்து பலப்பரீட்சை நடாத்தியது. முதல் பாதியில் கோல்ட்மைன்ட் அணியின் வீரர் ரிஷாப் கோல் ஒன்றை போட்டு தனது அணியை பலப்படுத்தினார். இரண்டாம் பாதி தொடங்கி ஆட்டம் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் வேளையில் சனி மெளன்ட் அணியின் முன்னாள் தலைவர் நிசார் கோல் ஒன்றை போட்டு சமநிலை படுத்தினார். தொடர்ந்து போட்டி சென்று கொண்டிருக்கும் போது மேலும் ஒரு கோலை சனி மெளன்ட் கழகத்தின் றில்வாத் பெற்றுக்கொடுக்க இறுதியில் சனிமெளன்ட் கழகத்தினர் 2:1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான வெ...

கல்முனை வலயக் கல்வி அலுவலக வலய மட்ட விளையாட்டுப் போட்டி

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலக வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் நாளை  புதன் கிழமை (25) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகின்றது. கல்முனை வலயத்துக்குட்பட்ட காரைதீவூ, சாய்ந்தமருது, கல்முனை, நிந்தவூர் ,கல்முனை தமிழ் பிரிவு  கோட்ட மட்டங்களில் நடை பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் வெற்றி பெற்ற அறுநூறு மாணவர்கள் நாளை  நடை பெறம் வலய மட்ட மெய் வல்லுனர் போட்டிகளில் பங்கு    பற்றவு ள்ளதாகவும் நாளையும் (25) நாளை மறுதினமும் (26) இப்போட்டிகள் இடம் பெறும் எனவும் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் விளையாட்டுக்குப் பொறுப்பான ஆசிரிய அலோசகர் எம்.ஐ.இப்றாகீம் தெரிவித்தார். நாளை  காலை ஆரம்பமாகும் விளையாட்டுப் போட்டியை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைப்பார். வலய மட்ட விளையாட்டுப் போட்டி உத்தியோக பூர்வ ஆரம்ப நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான வீ.மயில்வாகனம், ஏ.எல்.எம்.முக்தார், எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா , எஸ்.எல்.ஏ.றகீம் ,பீ.எம்.வை.அரபாத் மற்றும்  கல்முனை...

67வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 19வது தடவையாக நடத்தப்பட்ட விமானப் படை சைக்கிளோட்டப் போட்டி

Image
இ லங்கை விமானப் படையின் 67வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 19வது தடவையாக நடத்தப்பட்ட   விமானப் படை சைக்கிளோட்டப்  போட்டியின்  பெண்களுக்கான  போட்டி  இன்று  (03)   மட்டக்களப்பில் ஆரம்பமாகி அம்பாறையில் முடிவடைந்தது. போட்டியாளர்கள் கல்முனை நகர் ஊடாக செல்வதை காணலாம் 

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியில் றோஸ் இல்லம் சம்பியனானது

Image
  நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய  இல்ல விளையாட்டுப் போட்டியில் இவ்வருட சம்பியனாக 304 புள்ளிகளைப் பெற்று  சிவப்பு நிற றோஸ் இல்லம் சம்பியனாக தெரிவாகியுள்ளது. வித்தியாலய  அதிபர் வை.எல் .ஏ.பஸீர் தலைமையில் கடந்த வியாழக்கிழமை நற்பிட்டிமுனை தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்  பொது விளையாட்டு மைதானத்தில் லாபீர் வித்தியாலய  வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின்  இறுதி நாள் நிகழ்வு  சிறப்பாக இடம் பெற்றது. நடை பெற்ற மைதான சுவட்டு நிகழ்ச்சிகளின் அடிப்படையில் சிவப்பு நிற றோஸ் இல்லம் 304 புள்ளிகளைப் பெற்று  முதலாவது இடத்தையும் ,பச்சைநிற ஜெஸ்மின் இல்லம் 282 புள்ளிகளைப்  பெற்று இரண்டாம் இடத்தையும் , நீல நிற லோட்டஸ் இல்லம் 260 புள்ளிகளைப்  பெற்று  மூன்றாம் இடத்தையும் பெற்று  முதலாம் இடத்தைப் பெற்ற  றோஸ் இல்லம் இவ்வருட சம்பியன்  கிண்ணத்தை வென்றது. நடை பெற்று முடிந்த இந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல்  பிரதம அ...

கல்முனை கிறிஸ்தா சிறுமியர் இல்ல விளையாட்டுப் போட்டி

Image
கல்முனை நகரில்  1883 ஆம் ஆண்டு தொடக்கம் கல்முனை மெதடிஸ்த திருச் சபையினால் இயக்கப்பட்டு வருகின்ற வறிய மாணவர்களை பராமரித்து வரும் கல்முனை  கிறிஸ்தா  இல்ல  சிறுமியர் விடுதியின்  இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (03) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் நடை பெற்றது . இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் சிவப்பு நிற அக்கின்ஸ் இல்ல மாணவிகளும் பச்சை நிற ஸ்பார்க் இல்ல மாணவிகளுமாக  இரண்டு இல்லங்களை சேர்ந்த மாணவிகள்  பங்கு பற்றியிருந்தனர் . 56 புள்ளிகளைப்  பெற்ற  பச்சை நிற ஸ்பார்க்  இல்லம்    சம்பியன் கிண்ணத்தை பெற்றதுடன் சிவப்பு நிற அக்கின்ஸ்  இல்லம் 50 புள்ளிகள் பெற்று  இரண்டாம் இடத்தைப் பெற்றது. கல்முனை  கிறிஸ்தா  சிறுமியர் இல்லத்தில் பலதரப்பட்ட  வர்க்கத்தை சேர்ந்த வறிய மாணவிகள் 75 பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் . இவர்களிடையே  நல்  ஒழுக்கத்தையும் ,கட் டுப்பாடையும் ,தலைமைத்துவ  பண்பையும்  கட்டியெழுப்புகின்ற  நோக்கில்  கல்முனை மெதடிஸ்த திருச் ...