வெற்றிகரமாக கத்தாரில் நடந்து முடிந்த நியாஸ் ஏ மஜித் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டி



மாவனல்லை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற நியாஸ் ஏ மஜித் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமைஜனவரி 04 ஆம் திகதி மீஸைத் விளையாட்டு அரங்கத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஸாஹிராவின் ஓய்வு பெற்ற ஆசிரியரும் மாவனல்லை நகரின் சமூக நலன் விரும்பியும்முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான மர்ஹூம் நியாஸ் ஏ மஜித் அவர்களுக்குக்கான கௌரவிப்பாகவே இக்கிண்ணம் பெயரிடப்பட்டு இருந்தது.

இத்தினத்தில் மாவனல்லை நகரின் இரு முக்கிய பாடசாலைகளாக விளங்கும் ஸாஹிரா மற்றும் பதுரியாவின் பழைய மாணவர்களுக்கிடையிலான ஷா ஆசிப் கிண்ண கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது. ஷா ஆசிப் இளம் வயதில் உயிர் நீத்த ஸாஹிராவின் சிறந்து விளங்கிய ஒரு கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பதுரியாவின் பழைய மாணவர் அணி வெற்றி பெற்று முதல் ஷா ஆசிப் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

இந்த சுற்றுப் போட்டியில் ஐந்து அணிகள் மோதியதுடன் அவை பாடசாலையின் செயற்படும் இல்ல விளையாட்டு போட்டியில் உள்ளவாறு கோடோவாஅல் ஸஹ்றாநிஸாமியாஅல் அஸ்ஹர் எனவும்ஐந்தாவது அணியாக நிர்வாக குழு அணியும் களம் இறங்கினர்.

நியாஸ் ஏ மஜித் கிண்ணத்துக்கான இறுதி போட்டிக்கு அல் அஸ்ஹர் அணியும் அல் ஸஹ்ரா அணியும் தகுதிபெற்றன. இறுதி போட்டியில் அல் ஸஹ்றா அணி அல் அஸ்ஹர் அணியை தோற்கடித்து கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

பின்வரும் வீரர்கள் சிறப்பாக விளையாடி சிறந்த வீரர்களுக்கான விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

இறுதி ஆட்ட வீரன் அல் ஸஹ்றா அணியின் முகம்மது மபாஸ்

சிறந்த துடுப்பாட்ட வீரன் கோடோவா அணியின் முகம்மத் அப்fலால் 

சிறந்த பந்துவீச்சு முகம்மது அர்சாட்

சுற்றுப் போட்டியின் ஆட்ட நாயகன் முகம்மது மபாஸ்

ஆகியோர் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

இச்சுற்றுப் போட்டியின் நோக்கங்கள் பற்றி ஸாஹிரா பழைய மாணவர் சங்க கட்டார் கிளை தலைவர் முகம்மத் லாபிர் கருத்து தெரிவிக்கையில், "இச்சுற்றுப் போட்டியின் நோக்கம் கட்டார் வாழ் எமது ஸாஹிராவின் பழைய மாணவர்கள் மத்தியிலான உறவை மேம்படுத்துவதும் வளர்ப்பதும் ஆகும். மேலும் Zahirians அமைப்பு ஆரம்பிக்கும் ஸாஹிராவின் தேவை மிகுந்த மாணவர்களுக்கான  Touching Hearts புலமைப் பரிசில் திட்டத்தின் ஆரம்ப நிதிக்கான பங்களிப்பை இதன் மூலம் நாம் பூர்த்தி செய்யும் உயரிய நோக்கத்தையும் இது கொண்டுள்ளது" என தெரிவித்தார். மேலும் இச்சுற்றுப் போட்டியை சிறந்த முறையில் நடத்தி முடிப்பதற்காக சகல விதத்திலும் உதவிய நிர்வாக குழு உறுப்பினர்கள்அங்கத்தினர்கள், பதுரியாவின் பழைய மாணவர்கள்மற்றும் நிதி ஆதரவு தந்து உதவிய நிறுவனங்களுக்கும் தனது நன்றிகளை தெறிவிப்பதாகவும் கூறினார்.

இந்நிகழ்வில் ஸாஹிராவின் பழைய மாணவர்கள்குடும்ப உறுப்பினர்கள்மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்




திரு. ஷம்ரான் நவாஸ்

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்