கல்முனையில் சுனாமி பேரழிவு நினைவேந்தல்
தேசியப் பேரழிவான சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்று புதன் கிழமையுடன் 14 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. கடற்கோளில் சிக்குண்டு மரணித்தோருக்கான பதிநான்காவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கல்முனை மாமாங்க வித்தியாலய திடலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபிக்கருகில் இடம் பெற்றது. 2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த சுனாமி அனர்த்தத்தினால் இலங்கை உட்பட ஆசியாவிலுள்ள பல நாடுகள் பேரழிவைச் சந்தித்தன. அந்த அனர்த்தத்தினால் தமது உறவுகளை, பெற்றோரை மனைவியை, கணவனை, தாயை, தந்தையைக் காவு கொடுத்தும் வீடுகள், சொந்தங்கள், வளங்களை, பொருளாதாரத்தை இழந்து நின்ற பேரவலத்தின் எதிர்விளைவவுகளை, அதன் தாக்கத்தை இன்றும் அனுபவிக்கும் மக்களும் அந்த காட்சியை நேரில் கண்டவர்களும் நம்மிடையே உள்ளனர். 14 ஆண்டு நிறைவை நினைவு கூரும் முகமாக மரணித்தவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் மக்களின் அழு குரலுடன் உறவுகளுக்காக தீபமேற்றி பூசை வழிபாடுகளும் இடம் பெற்றன. உள்ளுர் அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், விளையாட்டுக் கழக உறுப...