நில அதிர்வூ குறித்து ஆராய விசேட குழு அம்பாறைக்கு விஜயம்
அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட நிலஅதிர்வூ குறித்து ஆராய தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சி அலுவலகத்தின் விசேட குழுவொன்று நாளை அம்பாறை செல்கிறது. நான்கு விஞ்ஞானிகள் இக்குழுவில் அடங்குவதாக தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சி அலுவலகத்தின் தலைவர் கலாநிதி என்.பி.விஜயானந்த தெரிவித்துள்ளார். இவர்களில் புவியியல் வல்லுநர்கள் இருவரும் இயற்பியல்துறை வல்லுநர்கள் இருவரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இக்குழு குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளை அண்டிய பிரதேசங்களில் தமது ஆய்வூகளை முன்னெடுக்கவூள்ளது. அம்பாறை மாவட்டத்தின் வட்டினாகல, தேவாலஹித்த, கிவூலேகம, தமண உள்ளிட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நில அதிர்வூ உணரப்பட்டது. வெடிமருந்து பயன்படுத்தி சிலர் கல் உடைப்பதே அதிர்வூக்கு காரணம் என பரவலாக கூறப்பட்ட போதும் நில அதிர்வூக்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment