Posts

Showing posts with the label காலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Image
நாட்டில் (குறிப்பாக கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில்) தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் ...

பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

Image
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் (இன்று இரவிலிருந்து) அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறி...

வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் புயல்?

Image
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.  இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அது 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது.  இந்த புயல் இலங்கை கடல் வழியாக 30 ஆம் திகதி வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடல் பகுதியை நோக்கி நகரும். இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். புயல் கரை கடக்கும்போது காற்றின் வேகம் 65 கிமீ வரை அதிகரிக்கலாம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கும் கல்முனை மாமாங்க வித்தியாலயத்துக்கு விடிவு

Image
வெள்ளத்தில் மூழ்கும் கல்முனை மாமாங்க வித்தியாலயத்துக்கு விடிவு கிடைத்துள்ளது . கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயம் கடந்த வாரம் வெள்ளத்தில் மூழ்கி கிடந்தது . இந்த செய்தி கல்முனை நியூஸ் இணையத்தளத்தில்  வெளிக்கொண்டுவரப்பட்டது . இந்த செய்திக்கு பலன் கிடைத்துள்ளது . கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்லூரி அதிபர் ஆகியோர் எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக  அம்பாரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பாடசாலையில் ஏற்படும் வெள்ளத்தை தவிர்க்க வடிகால் அமைப்பதற்கு 2.0மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளார் . பாராளுமன்ற உறுப்பினருக்கும் ,வலயக்கல்விப்பணிப்பாளருக்கும் கல்லூரி அதிபருக்கும் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கும் இந்த செய்தியை ஊடகங்களுக்கு வெளிக்கொண்டுவந்த  கல்முனை நியூஸ் இணையத்தளத்துக்கும் பெற்றோர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர் 

கல்முனை மாமாங்க வித்தியாலயத்தில் வெள்ளம் மாணவர்கள் சிரமம்

Image
கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையினால் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயம் முற்றாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது . இதனால் இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கும்  கல்வி பயில்வதற்கு சிரமப்படுகின்றனர் . சுனாமி அனர்த்தத்தின் போது  முற்றாக அழிந்த இப்பாடசாலை புதிய கட்டிடங்களுடன்  தற்போது இயங்குகின்றது. மழை  ஓய்ந்திருந்த போதிலும் வெள்ளநீர் வடிந்தோட  வடிகால் வசதி இல்லாமையினால் பாடசாலை வளாகம் முழுவதும் நீர் தேங்கி காணப்படுகின்றது . இதன் காரணமாக பாடசாலைக்கு மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. தொடர்ந்து நீர் தேங்கிக் காணப்படுவதால் பாடசாலை சூழலில் டெங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் நோய் பரவும் சந்தர்ப்பமும் அதிகம் காணப்படுகிறது. வெள்ள நீர் தேங்கியுள்ள இப்பாடசாலையின்பால் கல்முனை மாநகர சபை ,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,கல்முனை வலயக்கல்வி அலுவலகம்  கவனம் செலுத்த வேண்டிய அவசிய தேவை ஏற்பட்டுள்ளது . கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ,சுகாதார வைத்திய அ...

நாடு முழுவதும் குளிரான வானிலை நிலவும்

Image
நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இரத்தினபுரி மாவட்டத்தில் சில தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, புத்தளம், கேகாலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  மத்திய மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.  நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்பட...

இன்றைய காலநிலை

Image
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலலும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.  மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.  இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  ஏனை...

PHETHAI புயல் இலங்கையை விட்டு விலகி நகரக்கூடிய சாத்தியம்

Image
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய “PHETHAI” என்ற சூறாவளியானது ஒரு பாரிய சூறாவளியாக வலுவடைந்து 2018 டிசம்பர் நேற்று (16) இரவு 11.30 மணிக்கு திருகோணமலைக்கு வடக்கு - வடகிழக்காக அண்ணளவாக 620 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 14.0N, கிழக்கு நெடுங்கோடு 82.5E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.  இத் தொகுதி வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கையை விட்டு விலகி நகரக்கூடிய சாத்தியம். காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் இன்றிலிருந்து படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் தமது நடவடிக்கைகளில் ஈடுபடும்போது இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.  திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடகிழக்கு ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த ...

வானிலை அறிக்கை - அடுத்த 24 மணித்தியாலத்திற்கு...

Image
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய ஆழமான தாழமுக்கம் 2018 டிசம்பர் 14 ஆம் திகதி 23:30 மணிக்கு திருகோணமலைக்கு கிழக்கு - தென்கிழக்காக அண்ணளவாக 540 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 8.8N, கிழக்கு நெடுங்கோடு 86.2E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.  இத் தொகுதி வடக்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு சூறாவளியாக உருவாகக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.  மீனவர்கள் மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாகவும் வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.  வடக்கு, கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்...

இன்றைய காலநிலை விபரம்

Image
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் 2018 டிசம்பர் 13ஆம் திகதி காலை 05.30 மணிக்கு திருகோணமலைக்கு கிழக்கு - தென்கிழக்காக அண்ணளவாக 850 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 6.5N, கிழக்கு நெடுங்கோடு 88.7E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.  இத் தொகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் தொடர்ந்து வரும் 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக உருவாகக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.  மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாகவும் வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.  வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியா...

அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை!

Image
தென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து வடக்கு - வடமேற்கு திசையில் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.  நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுவதுடன் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.  மேலும், இத் தாக்கம் காரணமாக ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி, மற்றும் (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை) அதிகரித்த வேகத்தில் வீசும் கடும் காற்றுடன் கூடிய திடீரென்ற கடல் கொந்தளிப்பு போன்றவற்றுக்கு சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.  கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் ச...

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கீழ் வளிமண்டல தளம்பல் நிலை!! இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Image
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கைக்கு தென்கிழக்காக தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது.  கிழக்கு, ஊவா, மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.  மத்திய, சப்ரகமுவ, மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்...

நாட்டில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு; கிழக்கில் அடிக்கடி மழை

Image
ஞாயிற்றுக்கிழமை (02) இரவு முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படலாம் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை நாட்டின் மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களின் ஒரு சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்ட நிலை காணப்படலாம் என, திணைக்களம் அறிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை ஏற்படும் நிலையில், குறித்த பிரதேசத்தில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கலாம் எனவும், மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அக்குரண நகரம் மீண்டும் வெள்ளத்தில் சாரதிகள் மாற்றுவளியை பயன்படுத்தவும்

Image
கண்டி அக்குரண  நகரம் நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதி வழியான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழைக் காரணமாக குறித்த வீதி இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  எனவே அக்குரண  நகரம் ஊடாக மாத்தளை செல்லும் வாகன ஓட்டுனர்கள் வத்தேகம ஊடான மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை கடலில் இன்று மீன் மழை 1kg Rs.200

Image

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை

Image
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (16) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.  நாட்டின் வடக்கு பிரதேசத்தில் காணப்படுகின்ற சீரற்ற காலநிலை காரணமாகவே பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த கஜ என்ற பாரிய சூறாவளி மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று திகதி அதிகாலை 00.30 மணிக்கும் 02.30 மணிக்கும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கரையைக் கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  இந்நிலையில் வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மக்கள் அவனதானத்துடன் இருக்கமாறு அறிவுறுத்தல்

Image
வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் உருவான கஜா சூறாவளி தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.  இந்தச் சூறாவளி இன்று பிற்பகல் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 200 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டிருந்ததாக அறிவிக்கப்படுகிறது. இது இன்றிரவு கரையிலிருந்து 100 கிலோ மீற்றர்வரை அண்மிக்கக்கூடும். இதன் காரணமாக வடமாகாணத்தில் அடைமழை பெய்து கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  கஜா சூறாவளியின் தாக்கங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை - மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  வடக்கின் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பான பிரதேசங்களை நாட வேண்டுமென இடர்காப்பு முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப்கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.  சில சமயங்களில் மரங்களும் ம...

அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளி ஏற்பட வாய்ப்பு

Image
கிழக்கு மாகாணத்தில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதோடு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும்.  கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோமீட்டர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.  சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  தாழமுக்கம் தற்போது ஒரு ஆழமான தாழமுக்கமாக பலமடைந்து தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதிக்கு மேலாக வட அகலாங்கு 13.1N, கிழக்கு நெடுங்கோடு 90.0E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.  இது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  நாட்டைச் சூழவுள்ள கடற்பர...

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காணப்படும் மழையுடன் கூடிய கால நிலை

Image
இலங்கையைச் சூழ காணப்படும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் மேகமூட்டமான நிலையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  நாட்டின் வடபகுதியில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.  பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.  நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது  வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.  மேல், சப்ரகமுவ மற்றும் ...

காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்

Image
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது மேலும் விருத்தியடைந்து இலங்கையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.  நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது  ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது  சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.  மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பி...