அக்குரண நகரம் மீண்டும் வெள்ளத்தில் சாரதிகள் மாற்றுவளியை பயன்படுத்தவும்
கண்டி அக்குரண நகரம் நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதி வழியான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழைக் காரணமாக குறித்த வீதி இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே அக்குரண நகரம் ஊடாக மாத்தளை செல்லும் வாகன ஓட்டுனர்கள் வத்தேகம ஊடான மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment