Posts

Showing posts from July, 2011

முறைப்பாட்டுப் பெட்டி முன்னெடுப்பு

Image
fpof;F khfhz rigapdhy; mwpKfk; nra;ag;gl;l Kiwg;ghl;Lg; ngl;b Kiwapd; %yk; kf;fspd; gpur;rpidfSf;F jPh;TfhZk; Kiwik eilKiwapYs;sJ. ,e;j mbg;gilapy; mk;ghiw khtl;lj;jpy; fpilf;fg;ngw;w Kiwg;ghLfis tprhupf;Fk; Kfkhf ,d;W tpahof;fpoik (28.07.2010) fy;Kid tyaf;fy;tp mYtyfj;jpy; Kiwg;ghl;L tprhuizfs; rk;ke;jkhd epfo;T eilngw;wJ. fpof;Fkhfhz rigapd; jtprhsh; vr;.vk;.vk;. ghap]; jiyikapy; ,lk;ngw;w ,e;epfo;tpy;> fpof;F khfhz rig cWg;gpdh;fshd v];. G];guh[h> mg;Jy; k[Pl;> V.v];. [th`ph; ]hyp> Mupatjp fygjp> Mfpa Kiwg;ghl;Lf; FO mq;fj;jth;fs; cl;gl mk;ghiw khtl;lj;jpd; cs;Suhl;rp rigfisr; Nrh;e;j jtprhsh;fs;> gpujpj; jtprhsh;fs;> nrayhsh;fs; vdg; gyUk; fye;J nfhz;ldh;. ,e;epfo;tpd;NghJ jtprhsh; vr;.vk;.vk;. ghap]; Kiwg;ghl;Lg; ngl;b Kiwapd; Kf;fpaj;Jtk; gw;wp tpsf;fkspj;jhh;. ,q;F 03 gpujhd gpur;rpidfshd Mrpupah; ,lkhw;wk;> tpisahl;L rk;ke;jkhd gpur;rpid> fy;Kid khefu rigapy; Kiwg;ghl;Lg; ngl;b Kiw nraw;ghbd;ik Mfpa gpur;rpidfs; Muha

பேராசிரியர்எம்.இராஜேஸ்வரன் பாண்டிருப்பு அகரம் சமூக சேவை அமையத்தினால் பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பு

Image
பெங்களூர் பல்கலைக் கழகத்தினால் பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்ட கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர் எம்.இராஜேஸ்வரன் பாண்டிருப்பு அகரம் சமூக சேவை அமையத்தினால் நேற்று (2011.07.26) பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். பாண்டிருப்பு அகரம் சமூக சேவை அமையத்தின் தலைவர் எஸ்.துஷ்யந்தன் தலைமையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் அகரம் சமூக சேவை அமையத்தின் ஆலோசகரும், ஓய்வு பெற்ற அதிபருமான இ.இராஜரெத்தினம், பொருளாளர் எஸ்.கஜேந்திரன், ஊடகவியலாளர் எல்.எம்.இஸ்ஹாக் உட்பட அமைப்பின் அங்கத்தவர்களும், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது பொது நூலகத்தின் குறைகளை தீர்க்குமாறு பிரதேச வாசிகள் வேண்டுகோள்

Image
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பொது நூலகம் போதிய வசதிகளற்ற நிலையில் இயங்குவதனால் பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூரினால் திறந்துவைக்கப்பட்ட இப்பொது நூலகம் சுமார் 25 வருடகாலம் பழமை வாய்ந்தது. இவ்வாறான கட்டிடம் இதுவரை புனர் நிர்மாணம் செய்யப்படவில்லை. இதேவேளை சுனாமி பேரலைத் தாக்கத்தின் பின்னர் கடற்கரை வீதியிலிருந்து முற்றாக சேதமடைந்த சாய்ந்தமருது வைத்தியசாலை மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் என்பன சிலகாலங்களாக நூலகக் கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கிவந்தது. பின்னர் அவை சொந்தக் கட்டடங்களுக்கு மாற்றப்படட நிலையில், நூலகக் கட்டிடத்தை குறைந்தது அழகுபடுத்தும் முயற்சிகூட செய்யப்படாமல் பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கின்றது. சாய்ந்தமருது பொது நூலகத்தில் வைத்தியசாலை இயங்கிவந்த காலப்பகுதிக்கான வாடகை சுமார் 20 இலட்சம் ரூபாவை அப்போது கல்முனை மாநகர மேயராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் முயற்சியினால் பெற்றுக்கொடுப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பொது நூலக அபிவிருத்திக்குழுவின் தலைவர்

செப்டம்பரில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்?

Image
வியாழக்கிழமை, 28 ஜூலை 2011 17:18 இன்னும் எஞ்சியுள்ள 23 உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தலை நடத்தும் திகதி இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் மாநாட்டில் முடிவு செய்யப்படும் என தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். எனினும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இத்தோ;தல் நடைபெறலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். (எம்.ரி.-977)

ஊடகவியலாளர்கள் பாராட்டு

Image
கல்முனை பிரதேச செயலக முஸ்லிம் பிரிவின் சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி வேலைத்திட்டங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மருதமுனையை சேர்ந்த பி.எம். எம். ஏ. காதர், நற்பிட்டிமுனையை சேர்ந்த யூ. எம். இஸ்ஹாக் ஆகியோர் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இன்று (21.07.2011) மாலை பிரதேச செயலக மண்டபத்தில் சமுர்த்திப் பிரிவின் தலைமைக் காரியாலய முகாமையாளர் ஏ.ஆர். எம். ஸாலிஹ் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது. பிரதேச செயலாளர் எம். எம். நௌபல், ஏ. ஆர். எம். ஸாலிஹ் ஆகியோர் ஊடகவியலாளர்கள் இருவரையும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம், சான்றதழ் வழங்கி கௌரவிப்பதையும் ஏனைய சமுர்த்தி அதிகாரிகளையும் காணலாம்.

மாணவர்கள் திடீரென சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில்

Image
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றிலிருந்து 75 மாணவர்கள் திடீரென சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்... இவர்கள் தண்ணீர் தாங்கியில் இருந்து வந்த மாசடைந்த நீரை அருந்தியதாலேயே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன... இந்தச் சம்பவம் தொடர்பாக நீர்வழங்கல் அதிகாரசபை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது...

கல்முனையில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து!

Image
அம்பாரை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதியில் உள்ள கடைத் தொகுதி மற்றும் வைம்சிஏ அலுவலகம் என்பன முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. கல்முனை பிரதான வீதியில் உள்ள புத்தக விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள கடைத் தொகுதிகளுக்கும் பரவி பாரிய சேதத்தை ஏற்படுத்தயுள்ளது. இன்று காலை 4 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் அந்த புத்தக நிலையமும் அந்த புத்தக நிலையம் உள்ள கல்முனை வைஎம்சிஏ கட்டிடமும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இதன்போது குறித்த புத்தக நிலையத்திலும் வைம்சிஏ அலுவலகத்திலும் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்துள்ளதாகத் தெரியவருகிறது. இத் தீ மற்றைய கடைகளிலும் சிறிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதும், அதிகாலை வேளை ஏற்பட்டதனால் தெய்வாதீனமாக எந்தவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடை உரிமையாளர்களும் கல்முனை  பொலிசாரும் பொதுமக்களும் விரைந்து செயல்பட்டு தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவற்கு கல்முன

தேசிய ரீதியில் இரண்டாவது இடத்தைப் பெற்ற கிழக்கு விளையாட்டுக்கழக வீரர்களுக்கு வரவேற்பு .

Image
தேசிய ரீதியில் மாகாணங்களுக்கிடையில் நடைபெற்ற மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டியில் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழக வீர்ர்களை பிரதிநிதித்துவப்படுத்திய கிழக்கு மாகாண அணி இரண்டாவது இடத்தை பெற்று கல்முனை நகருக்கு வந்த போது நகரில் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.மாகாணங்களுக்கிடையிலான கிறிக்கட் சுற்றுப் போட்டி கொழும்பு ரொறிங்டன் மைதானத்தில் நடைபெற்ற போது இறுதிப்போட்டியில் கலந்து கொண்ட தென் மாகாண அணி 15 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி (சனிமௌன்ட்) 15 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 75 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டனர்.முதலாவது போட்டியில் கிழக்கு மாகாண அணி ஊவா மகாண அணியுடன் போட்டியில் ஈடுபட்டு  15 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 70 ஓட்டங்களைப் பெற்று 1 விக்கட்டினாலும் , மத்திய மாகாண அணியுடன் போட்டியில் ஈடுபட்டு 4 விக்கட்டுக்களினாலும் வெற்றியீட்டியதனாலேயே இறுதிப் போட்டியில் தென் மாகாண அணியுடன் போட்டியில் ஈடுபடும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொண்டது.தேசிய ரீ

கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையின் 128ஆவது ஸ்தாபகர் தின நிகழ்வுகள்

Image
கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையின் 128ஆவது ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு இறுதி நாள் நிகழ்வுகள்  புதன் கிழமை இடம்பெற்றன. மேற்படி பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 128ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அப்பாடசாலையின் ஸ்தாபகர்களை நினைவு கூறியதோடு வரலாற்று நினைவுக்கட்டிடம் திறப்பு. மரம் நடுகை. கலைநிகழ்ச்சிகள். பரிசளிப்பு மற்றும் அதிதி கௌரவிப்பு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. அதிபர் வி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காஸிநாதர் பிரதம அதிதியாகவும். கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி பி.சுவர்ணராஜா விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் நலன் விரும்பிகள் மற்றும் ஏனைய பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் பல துறைகளிலும் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

உலகில் மிகவும் செல்வாக்குள்ள 500 முஸ்லிம் பிரமுகர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த தேசபந்து ஜெஸீமா இஸ்மாயிலை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு .

Image
உலகில் மிகவும் செல்வாக்குள்ள  500 முஸ்லிம் பிரமுகர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த தேசபந்து ஜெஸீமா இஸ்மாயிலை பாராட்டி கௌரவிக்கும்  நிகழ்வு இன்று  சனிக்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராசிக் பரீட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட சர்வ சமய சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற பாராட்டு விழா நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதி கலாநிதி மஹ்ருப் இஸ்மாயில் பிரதம அதிதியாகவும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா விஷேட அதிதியாகவும் மற்றும் சம்மாந்துறை பிரதேச தவிசாளர் ஏ.எம்.நௌசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அம்பாறை மாவட்ட சர்வ சமய சம்மேளனம் , சாய்ந்தமருது சிரேஸ்ட பிரஜைகள் குழு , கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் கிழக்கு இணைப்பாளர் காரியாலயம் என்பன கூட்டாக இப்பாராட்டு விழா நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தது. தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தரும் , பிர