ஆப்கானிஸ்தான் தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்ததில் 30 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள படாக்ஷான் மாகாணத்துக்குட்பட்ட கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில் வசிக்கும் மக்கள் சுற்றுப்புற பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக நம்புகின்றனர். இதனால், அரசின் உரிய அனுமதி பெறாமல் அவர்களே சொந்தமாக சுரங்கம் வெட்டி தங்கம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், சுமார் 200 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட ஒரு சுரங்கத்துக்குள் சிலர் இன்று பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது, அந்த தங்கச் சுரங்கம் திடீரென்று சரிந்து விழுந்தது. இந்த விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் களமிறங்கிய உள்ளூர் மக்கள், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 30 பேரின் உடல்களை மீட்டனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக படாக்ஷான் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் நிக் முஹம்மது நசாரி தெரிவித்துள்ளார். Dozens of gold miners killed in collapse in Afghanistan ========================================== At least 30 people were killed when a gold mine c...