கைகள் இல்லை எனினும் கலங்காது கருமமாற்றும் காரிகை!

லண்டனை சேர்ந்த 48 வயதான Annette Gabbedey என்ற பெண்மணி தனது இரு கைகளையும் மணிக்கட்டுக்கு கீழாக முற்றாக இழந்த நிலையிலும் அதனை பொருட்படுத்தாது பல்வேறு வடிவங்களில் ஆபாரணங்களை  உருவாக்கி அசத்துகின்றார்.

உள்ளதை கொண்டு திருப்தி கொள்வதில் உயர்விருக்கிறது என்பது நபி மொழியும் கூட . அவ்வாறே தனக்கு இருக்கும் முண்டக் கையை வைத்தே, திருப்தியுடன் உழைப்பதானது இரு கைகளிருந்து; சோம்பேறியாக வாழும்  ஏனையோருக்கு நல்லதோர் படிப்பினையன்றோ?.

'
காலுக்கு செருப்பில்லையே என்று அழுதேன் .காலே இல்லாத ஒருவனைக் காணும் வரை' என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி படித்துள்ளோம். அல்லவா? தனது  இரு கைகளை இழந்த இந்த அழகிய பெண்ணின் அயராத  முயற்சியைப் பார்த்தீர்களா?


ஆம்!.  மாட மாளிகை இல்லை, கூட கோபுரமில்லை, ஓட வாகனமில்லை என அங்கலாய்ப்போருக்கு சோதனையையும் தாண்டி சாதிக்கும் இந்த  பெண்மணி ஒரு முன்னுதாரணம் அல்லவா?  




Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது