Posts

Showing posts from May, 2013

அரசசேவை விளையாட்டுப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!

Image
இலங்கை அரசாங்க சேவை விளையாட்டுச் சங்கத்தின் அரசாங்க சேவையில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் உத்தியோகத்தர்களின் திறமைகளை வெளிக்கொணரும் முகமாக 2013 க்கான பின்வரும் போட்டிகளை நடாத்தப்பட உள்ளன. இந்த போட்டிகள் தொடர்பாக  சகல திணைக்களங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அரசசேவை உத்தியோகத்தர்களிடையே கரம், கிரிக்கெட், செஸ், உதைபந்து, பெட்மின்டன்,, ஹொக்கி, மேசைப்பந்து, கரப்பந்து, எல்லே, வலைப்பந்து, மெய்வல்லுனர் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன. மேற்படி போட்டிகள் யாவும் கொழும்பில் ஜுலை மாதம் 26ம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 15ம் திகதி வரை நடைபெறவுள்ளன. போட்டிகளில் பங்குபற்றும் அரச ஊழியர்கள் தங்களுடைய பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை திணைக்கள தலைவர் ஊடாக செயலாளர், இலங்கை அரசாங்க சேவை விளையாட்டுச் சங்கம் 2/12, 216 பொல்ஹெங்கொட வீதி, நாரஹேன்பிட்டிய, கொழும்பு-05 எனும் முகவரிக்கு எதிர்வரும் ஜூன் 26க்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டுமென மேற்படி சங்கம் அறிவிக்கின்றது.

இன்று புகைத்தல் எதிர்ப்பு தினம்

Image
Nghijaw;w kdpju;fs; tho;tpd; vOr;rpahy; G+Tyif G+upg;gilar; nra;thu;fs; vd;w fUg; nghUspy; New;W fy;Kid gpuNjr nrayf rKu;j;jp rKf mgptpUj;jp kd;wk; Vw;ghL nra;j ru;tNjr Gifj;jy; vjpu;g;G jpd nfhb tpw;gid tpopg;Gf; fUj;juq;F epfo;tpy; gpujk mjpjpahf fye;J nfhz;l fy;Kid gpu Njr nrayhsu; vk;.vk;.nesgy;>fy;Kid nghyp]; epiya nghWg;gjpfhup V.lgps;A.V.fg;ghu;> rKu;j;jp Kfhikj;Jt gzpg;ghsu; V.Mu;.vk; rhyp`; MfpNahUf;F rKu;j;jp rKf mgptpUj;jp cj;jpNahfj;ju; vd;.vk;.nesrhj; Gifj;jy; vjpu;g;G jpd nfhbtoq;Ftij fhzyhk;;  

சீரற்ற காலநிலை ஜூன் மாதம் 7ஆம் திகதிவரை நீடிக்கும்?

Image
தற்போது இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சி ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஜூன் மாத முதல் வாரத்தில் ஆரம்பிக்கும் இந்த சீரற்ற காலநிலை பெரும் மழையாக இந்து சமுத்திரத்திர நாடுகளான தென்னிந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்திய வளிமண்டலத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மழை காலம் முதலில் கேரளாவில் ஆரம்பித்து படிப்படியாக மற்றப் பகுதிகளுக்குப் பரவும் என்றும் வளிமண்டல ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இதனை அமெரிக்காவின் தேசிய காலநிலை சேவைகள் நிலையமும் ஊர்ஜிதம் செய்துள்ளது. இந்தப் பலத்த காற்றுடனான பெருமழை ஜூன் மாதம் 7ஆம் திகதிவரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தக் காலநிலை வங்காள விரிகுடாவின் ஊடாக கிழக்கு இந்தியாவையும் பாதிக்கும் என்றும் காலநிலை அவதானிகள் எச்சரிக்கை செய்கின்றார்கள். ஏற்கனவே இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் சீரற்ற காலநிலை தற்போது நீடித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர் பத்திரிகை ஒன்றுக்கு எதிராக நஷ்டஈட்டுக் கோரிக்கை!

Image
கிழக்கு மாகாண சபையின் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எம்.மன்சூர் இலங்கையில் புதிய வாராந்தப் பத்திரிகை ஒன்று பொய்யான தகவல்களை மக்களுக்கு வழங்கி தனது கௌரவத்திற்கும், மானத்திற்கும் பங்கமேற்படுத்தியுள்ளது. இதனால் குறிப்பிட்ட பத்திரிகை ரூபா 500 மில்லியன் நஷ்ட ஈடாகத் தர வேண்டுமென்று கோரி தனது சட்டத்தரணி மூலம் கடிதமொன்றினை ( டுநவவநச ழக னுநஅயனெ) ஒன்றினை குறிப்பிட்ட பத்திரிகை நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.  குறிப்பிட்ட பத்திரிகை ஒன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரை மறைமுகமாகக் சுட்டிக் காட்டும் வகையில் தகவல்களை வெளியிட்டு இருந்தன. அதில் பிரதியமைச்சர் ஒருவரின் விருந்து உபசாரத்திற்கு சென்ற அமைச்சர் மது போதையில் இருந்ததாகக் தெரிவித்திருந்தது. இதனாலேயே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹோமாகம மாவட்ட நீதிபதி கைது

Image
ஹோமாகம மாவட்ட நீதிபதி சுணில் அபேசிங்க லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  நபர் ஒருவரிடமிருந்து மூன்று லட்சம் ரூபாவை  லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மீண்டும் உருவெடுக்கிறது சாய்ந்தமருது தனியான பிரதேச சபை கோரிக்கை; ஹக்கீமுக்கு பகிரங்க மடல்!

Image
கிழக்கு மாகாண கரையோரப் பிரதேசத்தின் அம்பாறை மாவட்டத்திலே அமைந்துள்ள சாய்ந்தமருது கிழக்கே கடலையும் மேற்கே வயல்வெளியையும் கொண்ட ஒரு வனப்பு மிக்க பிரதேசமாகும். 17 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஏறக்குறைய 7000 குடும்பங்களையும் மொத்தமாக 17000ற்கு மேற்பட்ட வாக்காளர்களையும் உள்ளடக்கியுள்ளது. தனியான பிரதேச செயலகம,; 09 பாடசாலைகள், மாவட்ட வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், தபால் நிலையம், 3 உப தபால் நிலையங்கள், நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள், முக்கியமான வங்கிகள் என்பனவற்றைக் கொண்டிருப்பதோடு பல அரச அலுவலகங்களும் காணப்படுகின்றன. 2004 ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்டு இன்னும் முழுமையாக மீட்சி பெறாவிடினும் பொருளாதாரரீதியிலும் கல்வியிலும் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடும் போது முன்னேறிய ஒரு பிரதேசமாகவே காணப்படுகின்றது. என்றாலும் கடந்த சில காலங்களாக முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கைதான் சாய்ந்தமருதுக்கான தனியானதொரு பிரதேச சபை என்பது. இக்கோரிக்கையானது முக்கியமாக தேர்தல் காலங்களில் பரவலாகப் பேசப்படுவதும் பின்னர் மறக்கப்பட்டு விடுகின்றதொரு விடயமாகவும் உள்ளது. சனத்தொகையில் குறைவாகவும்

தீக்குளித்த தேரர் தொடர்பில் வெளியாகும் புதிய தகவல்கள்

Image
தீக்குளித்தது தற்கொலை செய்துகொண்ட  போவத்தே இந்திர ரத்ன தேரர் அவரின் மரணத்துக்கு மூன்று  நாட்களுக்கு முன்னர் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்று  சிங்கள இணையத்தளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்திர ரத்ன தேரர் முன்னர் பிரதேச சபை உறுப்பினராக இருக்கும்போது, மின்சார சபையில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி 20 இலட்சமும் ஆசிரியர் நியமனம் பெற்றுத் தருவதாகக்கூறி 10 இலட்சமும் பணத்தை பெற்றுக்கொண்டதாகவும் . இவ்விடயத்தில் பிக்குவை கைதுசெய்ய பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என குறித்த சிங்கள இணையத்தளம்  தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அது வெளியிட்டுள்ள தகவலில் , தம்புள்ளை பள்ளிவாசலை உடைக்க வந்தபோது, பிக்குகள் கூட்டத்திலிருந்து கூச்சலிட்டவர்என்றும் , பாதுகாப்பு படையினருக்கு தான் அணிந்திருந்த சிவுறவை அவிழ்த்துக் காட்டினார் என்றும் கடந்த வருடம் வீரகெட்டியவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல், அதே ஊரில் இவ்வருடம் பள்ளிவாசல் மீது தாக்குதல் ஆகியவற்றை குறித்த தேரர் நடாத்தியுள்ளார் என்றும் அந்த சிங்கள இணையத்தளம்  தகவல்களை வெளியிட்டுள்ளது. தீக்குளித்து மரணமான போவத்த இந்தரத்தன

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்

Image
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் 1500 ரூபா தண்டம் விதித்துள்ளது. இவ்விருவரும், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலுள்ள பொது மலசலக்கூடத்திற்குள் வைத்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பொலிஸார் அவ்விருவரையும் கைது செய்தனர். மட்டக்குளி மற்றும் தெஹிவளையில் வசிக்கின்ற இருவருக்கே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இவ்வாறு தண்டம் விதித்துள்ளார்.

ஜா-எலயில் 70 இலட்சம் கொள்ளை!

Image
தனியார் தொழிற்சாலை ஒன்றில் சம்பளம் கொடுப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்ட 70 இலட்சம் ரூபா பணம் ஜா-எல- ஏக்கல பகுதியில் வைத்து கொள்ளையிடப்பட்டுள்ளதhக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஜா எல பகுதியூடாக பணம் எடுத்துச்செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் பிற்பகல் 1 மணியளவில் வெள்ளை வேனில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் சிலர் அதனைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். சந்தேக நபர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜாஎல பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்ட சமுர்த்தி விருது வழங்கும் நிகழ்வு

Image
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின நிதி சேகரிப்பில் மாவட்ட, பிரதேச செயலக மற்றும் வலய மட்டத்தில் கூடுதல் நிதிகளை சேகரித்த சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் நிசந்த தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டீ. அல்விஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி வைத்தார்.  இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார் மற்றும் பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது இவ்வருடம் திவிநெகும புத்தாண்டு சேமிப்பில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் எஸ்.றிபாயா அரசாங்

திருமண பந்தத்தில் இணைந்த முதல் முஸ்லிம் பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள்!

Image
பிரித்தானியாவில் திருமண பந்தத்தில் இணைந்த முதல் முஸ்லிம் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த ரெஹானா கவுசார் (34) மற்றும் சோபிடா கமார்(29) ஆகிய இருவரும் பதிவாகியுள்ளனர். திருமணப்பதிவாளர் அலுவகத்தில் இவர்கள் திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணத்திற்கு பின்னர் அவர்கள் இருவரும் உடனடியாக அங்கேயே  புகலிடம் கோரியுள்ளதாகவும் தெரியவருகின்றது. தங்களது சொந்த நாட்டு திரும்பினால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கூறியே இருவரும் புகலிடக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தானின் லாஹூர் மற்றும் மிர்பூரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இவர்கள் இருவருக்கும் தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 3 வருடங்களாக காதலித்து வருவதாகவும் பேர்மிங்காமில் கல்வி கற்கும் போதே பழக்கம் ஏற்பட்டதாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

முதலாம் தரத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

Image
அரசாங்க பாடசாலைகளில் 2014 ஆம் ஆண்டிற்கான மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கல்வியமைச்சினால் இன்று திங்கட்கிழமை முதல் கோரப்பட்டுள்ளது. தங்களுடைய பிள்ளைகளை அரசாங்க பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்கு விரும்புகின்ற பெற்றோர் அல்லது சட்டரீதியான பாதுகாவலர்கள் மாதிரி விண்ணப்பத்திற்கு ஏற்ப தயார் செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமக்குப்பொருத்தமான பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைக்குமாறும் கல்வியமைச்சு கோரியுள்ளது. விண்ணப்பங்களை 2013 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு பதிவுத் தபாலில் அனுப்பவேண்டுமாறும் கல்வியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

நவனீதம்பிள்ளை ஆகஸ்டில் இலங்கை வருகிறார்

Image
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.  நவனீதம்பிள்ளை ஆகஸ்ட் மாதம் 25 தொடக்கம் 31ஆம் திகதிக்கிடையில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். 

டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்!

Image
பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் தமது வயது 91 ஆவது வயதில்  இன்று (25) காலமானார். மூச்சித்திணறலால் அவதிப்பட்ட அவர் சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்தhர். 1946 ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அவர் திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். திரைப்பாடல்கள் மட்டுமின்றி பக்திப்பாடல்களையும் பாடியுள்ளார். எம்.ஜி.ஆர். பாடுவது போன்றும்  சிவாஜி பாடுவது போன்றும் வித்தியாசமான குரல்களில் திரைப்படங்களில் பாடி அசத்தியவர் இவர்

பூ பறிக்க குளத்தில் இறங்கிய இளைஞ்சன் நீரில் மூழ்கி இறந்துள்ளார்

Image
கோயிலுக்கு கொண்டு செல்ல பூ பறிக்க குளத்தில் இறங்கிய இளைஞ்சன் நீரில் மூழ்கி இறந்துள்ளார் . இச்சம்பவம் நேற்று நாவிதன்வெளி அன்னமலை  பிர  தேசத்தில் இடம் பெற்றுள்ளது. துறைநீலாவணை 07ஆம் வட்டாரத்தை சேர்ந்த 35 வயதுடைய தேவராசா சந்திரசேகரன் என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். துறை நீலாவணையில் இருந்து 15ஆம் கிராமத்தில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு சென்ற இவர் வெள்ளிக்கிழமை பகல் 12.00 மணிக்கு அன்னமலை காளி கோயிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற இவர்  அன்னமலை கோயில் குளத்தில் பூ பறிக்க இறங்கியதை பிரதேசத்தில் உள்ளவர்கள் கண்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை இவர் சடலமாக கிடப்பதை கண்ட பொது மக்கள் சவளக்கடை பொலிசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அவரது உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டதன் பின்னர் சடலத்தை மீட்டு சவளக்கடை பொலிசார் கல்முனை ஆதார வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர். இந்த மரணம் தொடர்பாக சவளக்கடை பொலிசார் விசாரணை   மேற்கொண்டு வருகின்றனர்.

மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை திறப்பு விழாவும், வறிய 100 குடும்பங்களிற்கு இலவச நீர் இணைப்பு வழங்குதலும்

Image
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தில் மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை திறப்பு விழாவும், வறிய 100 குடும்பங்களிற்கு இலவச நீர் இணைப்பு வழங்குதலும், மாநகர உத்தியோகத்தர் கௌரவிப்பும் மற்றும் வாசிப்பு வார போட்டி நிகழ்ச்சி பரிசளிப்பு விழா என்பன நேற்று (23.05.2013) வியாழக்கிழமை மாலை சாய்ந்தமருது பீச் பார்க் அருகாமையில் நடைபெற்றது. மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலையினை இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத்தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் திறந்து வைத்தார். இம் மீனவர் வாசிக சாலை மீனவ சமூகத்தின் வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவித்து அவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பங்களிப்பு  செய்யும் வகையில் குறித்த வாசிக சாலை சாய்ந்தமருது 12ம் பிரிவில் கடற்கரையோரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன்போது கல்முனை மாநகர எல்லைக்குள் வசிக்கும் வறிய 100 குடும்பங்களுக்கு இலவச நீர் இணைப்பிற்கான பத்திரம் பயனாளிகளுக்கு  கையளிக்கப்பட்டது. அத்தோடு வாசிப்பு வாரத்தினை முன்னிட்டு நடைபெற்ற கட்

சாய்ந்தமருதில் நாளை திறக்கவிருந்த மீனவர் வாசிகசாலை திறப்பு விழாவினை நிறுத்துமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் உத்தரவு!

Image
சாய்ந்தமருதில் கல்முனை மாநகர சபையினால் கட்டி முடிக்கப்பட்ட மீனவர் வாசிகசாலைக்கு சபை அனுமதியின்றி தனிநபர் பெயர் சூட்டுவதையும் அதற்கான விழாவினையும் நிறுத்துமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.  இதற்கான நிறுத்தக் கடிதத்தினை முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் கையொப்பமிட்டு உள்ளுராட்சி ஆணையாளருக்கு உடனடி நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாசிகசாலைக்கு ஒரு மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய நிதியினை கல்முனை மாநகர சபை ஒதுக்கீடு செய்து இவ்வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு நாளை திறக்கப்படவிருந்த நிலையிலேயே மேற்படி இதன் திறப்பு விழா நிறுத்தப்பட்டுள்ளது.  இவ்வாசிகசாலைக்கு கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் வைக்கப்பட்டதை அடுத்தே மேற்படி சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.  இவ்வாசிகசாலை திறப்பு விழா நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதித

சாய்ந்தமருது அபிவிருத்தி பணிகள் வைபவம் மறுநாள் ஒத்திவைப்பு

Image
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தில் மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த வாசிக சாலை திறப்பு விழாவும், 100 வறிய குடும்பங்களுக்கு இலவச குடி நீர் இணைப்பு வழங்கும் நிகழ்வும்,  மாநகர சபை உத்தியோகத்தர் கௌரவிப்பும் மற்றும் வாசிப்பு வார பரிசளிப்பு நிகழ்வும் நாளை (22.05.2013) மாலை 3.00 மணியளவில் சாய்ந்தமருது பீச் பார்க் அருகாமையில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருந்த நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் நாளை (22.05.2013) நடைபெற உள்ள விசேட அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதனால் இந்நிகழ்வானது ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக எதிர்வரும் 23.05.2013 ம் திகதி வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு சாய்ந்தமருது பீச் பார்க் அருகாமையில் நடைபெற உள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

சாய்ந்தமருது அல் கமறூன் வித்தியாலயத்திற்குகல்முனைமுதல்வர்ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு

Image
சாய்ந்தமருது அல் கமறூன் வித்தியாலயத்திற்கு கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் நிதி ஒதுக்கீட்டில் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் எல்.கே.ஏ. அன்வர் தலைமையில் நேற்று (20.05.2013) காலை நடைபெற்றது. அல் கமறூன் வித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டியின் போது பிரத அதிதியாக கலந்து சிறப்பித்த மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபிடம் அதிபரினால் வித்தியாலயத்தின் தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அம்மகஜரிக் கேற்பவே குறித்த ஒலிபெருக்கி சாதனங்கள் முதல்வரினால் வழங்கிவைக்கப்பட்டது. புலமைப்பரிசில் பரீட்சையில் 70ற்கும் 100ற்கும் மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.   இதன்போது கல்முனை மாநகர முதல்வரின் சேவையினைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கெளரவித்து வாழ்த்துப் பாவும் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு கல்முனை கல்வி வலயத்திற்கு புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹசீம் அவர்களினை வரவேற்றும் அவரின் சேவையினை பாராட்டியும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

நற்பிட்டிமுனை ஆசிரியரின் மோட்டார் சைகள் கல்முனையில் களவு

Image
நற்பிட்டிமுனை ஆசிரியர் ஐயூப்கானின் EP  JG-9065  இலக்க  பெசன்  ப்ளஸ்  மோட்டார்  சய்கள் நேற்று களவு போய்  உள்ளது.  கல்முனை இலங்கை மின்சார சபையில் மின் கட்டணம் செலுத்த சென்ற இவர் முன் வாயிலில் சைகளை வைத்து விட்டு சென்று பணத்தை செலுத்தி விட்டு வந்து பார்த்த வேளை  சைகள் வைத்த  இடத்தில்  காணவில்லை . இது தொடர்பாக ஆசிரியர் கல்முனை பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் . ஒரு மாத காலத்துக்குள் கல்முனையில் மூன்று மோட்டார் சைகல்கள்  களவு பொய் உள்ளதாக  கல்முனை பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த EP  JG-9065  இலக்க  பெசன்  ப்ளஸ்  மோட்டார்  சைகள்   பற்றி தகவல் தெரிந்தவர்கள் 0776653852 இலக்க  தொலை பேசிக்கு தகவல் வழங்கவும் .

மட்டக்களப்பு வாகன விபத்தில் இருவர் பலி

Image
ஏறாவூர் மைலம்பாவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழரை மணியளவில் இவ்விபத்து நேரிட்டுள்ளது.   மோட்டார் சைக்கிள் வீதியில் மோதுண்டு தடக்கி விழுந்ததிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் பின்னால் அமர்ந்து சென்றவரும் வீதியில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் பட்டதில் பலியாகியுள்ளனர்.   ஏறாவூரைச் சேர்ந்த அஹமது லெப்பை முஹம்மது அஸ்மி மற்றும் பிச்சைக்குட்டி முஹம்மது றியாழ் ஆகிய இருவரே கொல்லப்பட்டுள்ளனர். சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.   இருவரும் ஏறாவூரில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.   மரணித்தவர்களில் ஒருவரான அஹமது லெப்பை முஹம்மது அஸ்மி என்பவர் மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையின் சிற்றூழியர் என்று தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்டெடுக்கப்பட்ட தாய்நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் அபகரிக்க இடமளியேன்!

Image
-யுத்த வெற்றி விழாவில் ஜனாதிபதி- வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலொன்றில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தவர்கள். அங்குள்ள மக்களின் இதயத்தைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மீட்டெடுக்கப்பட்ட தாய்நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் அபகரிப்பதற்கோ இன்றேல் நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் நான் இடமளிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து நடைபெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற  வைபவத்தில் அதிதிகளின் வருகைக்கு பின்னர் குதிரைப்படை மற்றும் மோட்டார் படையணிகள் புடைச்சூழ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் பிரதான மேடைக்கு வருதகை தந்தனர். அவர்களை பிரதமர் தி.மு.ஜயரட்னவும் அவரது பாரியாரும்- பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியாரும்; வரவேற்றனர். அதன் பின்னர் பாதுகாப்பு படைகளைச்சேர்ந்த 40 வீரங்கணைகள் தேசிய கீ

விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும் - எச்சரிக்கை சுவரொட்டிகள்!

Image
வீதியோரங்களில் நின்று விபசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீச்சு மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்து நீர்கொழும்பு நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக வைத்தியசாலை அருகில் கடந்த வாரம் இதே போன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டடிருந்தன.  இதனை தொடர்ந்து அப்பிரதேசத்தில் நடமாடி வந்த விபசாரிகளை குறைவடைந்த நிலையில் நேற்று வியாழக்கழமை இரவு முதல் மீண்டும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. நீர்கொழும்பு நகரின் ஹோட்டகளிலும், சட்டவிரோதமாக நடத்தப்படும் விபசார விடுதிகளிலும் பாதுகாப்புடன் பெண்கள் பலர் விபசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வீதியோரத்தில் நின்றபடி விபசாரத்திற்காக ஆண்களை அழைக்கும்; பெண்களுக்கு இந்த எச்சரிக்கையானது அவர்களை பெரிதும் அச்சம் கொள்ளச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. விபசாரத்தை ஒழிப்பதற்கு உடனடியாக ஒன்று சேருவோம், விபசாரிகளுக்கு இனிமேல் தண்டனை அசிட் ஆகும் போன்ற வாசகங்கள் சிங்களத்தில் எழுதப்பட்ட சுவரொட்டிகளே இனந்தெரியாத நபர்களால் அங்கு ஒட்டப்பட்டுள்ளன

கிழக்கு மாகண சபையின் மாவட்ட அபிவிருத்திக்கூட்டம்!

Image
கிழக்கு மாகண சபையின் மாவட்ட அபிவிருத்திக்கூட்டம்  இன்று திருகோணமலையில்லுள்ள பிரதம செயளாலர் காரியாலயத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மாகாணசபையினூடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களையும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களையும் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்து முதலமைச்சர்  கிழக்கு மாகாண அமைச்சரவையில் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கேற்ப கிழக்கு மாகாணத்தில் 3 மாவட்டங்களிலும் 4 மாதத்திற்கொருமுறை இவ்வாறானதொரு அபிவிருத்திக் கூட்டம் நடைபெறும். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டீ.எம். சரத் அபய குணவர்தண மற்றும் உயர் அதிகாரிகள், திருகோணமலை மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.