கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர் பத்திரிகை ஒன்றுக்கு எதிராக நஷ்டஈட்டுக் கோரிக்கை!
கிழக்கு மாகாண சபையின் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எம்.மன்சூர் இலங்கையில் புதிய வாராந்தப் பத்திரிகை ஒன்று பொய்யான தகவல்களை மக்களுக்கு வழங்கி தனது கௌரவத்திற்கும், மானத்திற்கும் பங்கமேற்படுத்தியுள்ளது. இதனால் குறிப்பிட்ட பத்திரிகை ரூபா 500 மில்லியன் நஷ்ட ஈடாகத் தர வேண்டுமென்று கோரி தனது சட்டத்தரணி மூலம் கடிதமொன்றினை ( டுநவவநச ழக னுநஅயனெ) ஒன்றினை குறிப்பிட்ட பத்திரிகை நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
குறிப்பிட்ட பத்திரிகை ஒன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரை மறைமுகமாகக் சுட்டிக் காட்டும் வகையில் தகவல்களை வெளியிட்டு இருந்தன. அதில் பிரதியமைச்சர் ஒருவரின் விருந்து உபசாரத்திற்கு சென்ற அமைச்சர் மது போதையில் இருந்ததாகக் தெரிவித்திருந்தது. இதனாலேயே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment