Posts

Showing posts from November, 2017

சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

Image
நாட்டில் தற்சமயம் நிலவும் வலுவான காற்றுடன்கூடிய அடைமழையினால் 7 பேர் உயிரிழந்துள்ளார்கள். காலி கம்பஹா பதுளை மாவட்டங்களிலேயே இந்த உயிரிழப்புக்கள் இடமபெற்றுள்ளன.   13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையினால் நான்காயிரத்து 886 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆகும்.     இதுவரை ஐந்து பேர் காணாமற்போய்யுள்ளனர். 202 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.   பகுதியளவில் 3 ஆயிரத்து 236 வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. ஒன்பது பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு;ள்ளன. இவற்றில் 179 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 36 பேர் இவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.     இதேவேளை நுவரெலியா பிரதேசத்தில் 14 கிராமங்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு;ளளன. இங்கு 51 குடும்பங்களைச் சேர்ந்த 254 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மண்சரிவினால்,42 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என;று நுவரெலியா பிரதேச செயலாளர்  தெரிவித்தார்.  

மபாஹிர் மசூர்மொலானாவின் திரைக்கதை நெறியாழ்கையில் “பொம்பளங்க வேல”இஸ்லாமிய நாடகம்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தையொட்டி மபாஹிர் மசூர்மொலானாவின் நெறியாழ்கையில் தயாரித்து வழங்கும்“பொம்பளங்க வேல”இஸ்லாமிய நாடகம் நாளை வெள்ளிக்கிழமை (01-12-2017)மாலை பி.ப.4.35 மணிக்கு இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபன நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பாக உள்ளது. இறக்காமத்தைச் சேர்ந்த சிறந்த நாடக எழுத்தாளரும் நடிகரும், கலைஞருமான திருமதி பர்ஸானா றியாஸ் இந்த நாடகத்திற்கான கதையை எழுதியுள்ளார். சமூகத்தில் சீர்கெட்டிருக்கும் பெண்களின் அறியாமையினால் இடம் பெறும் தீய சம்பவங்களை கருப்பொருளாகக்  கொண்டே இக் கதை எழுதப்பட்டுள்ளது. இந்த நாடகத்தில் பல்துறைக் கலைஞரான திருமதி நெய் றஹீம் சஹீட், பிறை எப்.எம்.அறிவிப்பாளர் எஸ்.றபீக், நாடகத்தின் கதாசிரியர் பர்ஸானா றியாஸ், நடிகர் அஸ்வான் சக்காப் மௌலானா, முகம்மட் றியாஸ், யாழ் பரீத் ஜாபிர், விஜயா துரைசாமி, பரீட் பதீர், ஆகியோர் நடித்துள்ளனர்.   

மாணவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கு Unique Student Code, Finger Print

Image
அரசாங்க பாடசாலைகளுக்கு உள்வாங்ப்படும் அனைத்து மாணவர்களினதும் அடையாளத்தை உரிய முறையில் உறுதி செய்யவும் பரீட்சை நடவடிக்கையின் போதும் பரீட்சாத்திகளின் பரீட்சை நடவடிக்கைளை அதிகாரிகள் இலகுவாக அறிந்து கொள்வதற்கான நடைமுறையொன்று முன்மொழியப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பரீட்சை திணைக்களத்தின் நடவடிககைகளை மேலும் விரிவுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை முன்வைக்க புத்திஜீவிகளை கொண்ட குழுவொன்று நியமித்திருந்ததார்.இந்த குழுவினால் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.  பாடசாலைக்கு உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் அடையாளத்தை உறுதி செய்யும் இலக்கமொன்றை  (Unique Student Code)  அறிமுகம் படுத்தவும் அதனுடன் கைவிரல்( Finger Print) அடையாளத்தின் மூலம் ஆள் அடையாளத்தை உறுதி செய்து அதனுடாக கியூ ஆர்  QR குறியீடு ஒன்றை தயாரிப்பதற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கம் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்படும் முக்கிய வெட்டுப்புள்ளி பரீட்சைகளின் பயன்படுத்துவதற்கும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடாக முக்கிய வெட்டுப்புள்ளி பரீட்சைகளான தரம் 5 புலமைபரிசில் பரீட்சை கல

நீதிமன்றங்களுடைய வேலைப் பளுவைக் குறைப்பதற்கு மத்தியஸ்த சபைகள் துணைபுரிகின்றன

Image
நீதி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.மன்சூர்  PMMA.காதர்  முரன்பாடு முகாமைத்துவம் என்பது மிகப்பெரிய ஒரு கலை முரண்பாடு நல்லது  அல்லது கெட்டது என்பதைப் பார்க்க அதை கையாளுகின்ற விதத்தில்தான் அதன் வெற்றியும்  தோல்வியும்  இருக்கின்றது.தற்காலத்திலே முகாமைத்துவம் என்பது விஞ்ஞான ரீதியாக ஒரு ஆயூள் கலையாக வளர்ச்சி பெற்றிருக்கின்றது என நீதி அமைச்சின் மேலதிகச் செயலாளர்(நிருவாகம்)ஏ.மன்சூர் தெரிவித்தார். கல்முனை மத்தியஸ்த சபைக்கான உறுப்பினர்களை ஆட்சேர்ப்பதற்கான மத்தியஸ்த திறன்கள் மற்றும் உபாய மார்க்கங்கள் பற்றிய ஐந்து நாள் பயிற்சிப்பட்டறை திங்கள் கிழமை(27-11-2017)பிரதேச செயலக கூட்ட மண்பத்தில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயிற்ச்சி பட்டறையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தப் பயிற்சிப் பட்டறையில் கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம்.தமிழ்.சிங்கள சமூகங்களைச் சேர்ந்த  அறுபத்தாறு பேர் பங்குபற்றினார்கள்.இங்கு நீதிஅமைச்சின் கீழ் இயங்கும் மத்தியஸ்த ஆணைக்குழுவைச் சேர்ந்த மாவட்ட மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர்களான வ

தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் டிச. 15 வரை ஏற்கப்படும்

Image
தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் டிச. 15 வரை ஏற்கப்படும் தற்போது வேட்பு மனு கோரப்பட்டுள்ள, சட்ட சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தலில், தபால் மூலம் வாக்களிக்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை, குறித்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது. குறித்த முடிவுத் திகதி மீண்டும் நீடிக்கப்படாது எனவும், தபால் மூலம் வாக்களிக்க தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு ஆணையகம் மேலும் அறிவித்துள்ளது. 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரல் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு டிசம்பர் 13 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்தவும் டிசம்பர் 14 ஆம் திகதி வரை வேட்புமனு தாக்கல் செய்யவும் முடியும் என தேர்தல்கள் ஆணையகம் நேற்று (27) அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை, நிந்தவூர், திருக்கோவில், பொத்துவில் ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் இல்லை

Image
இன்று வெளியிடப்பட்ட 93 சபைகளுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் சபைகள்...... 1. நாமல் ஓயா பிரதேச சபை 2. தெஹியத்தகண்டிய பிரதேச சபை 3 பதியத்தலாவ பிரதேச சபை, 4. அக்கரைப்பற்று மாநகர சபை, 5. அட்டாளைச்சேனை பிரதேச சபை, 6.லஹுகல பிரதேச சபை, 7.கரைதீவு பிரதேச சபை, 8.சம்மாந்துறை பிரதேச சபை 9.அக்கரைப்பற்று பிரதேச சபை, 10.நாவிதன்வெளி பிரதேச சபை 11.இறக்காமம் பிரதேச சபை 12.ஆலையடிவேம்பு பிரதேச சபை உள்ளுராட்சி மன்றங்களுக்கான புதிய திருத்தச் சட்டத்தின் முறையில் நடைபெறும் தேர்தல் வேப்புமனு நியமனங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை 11 டிசம்பர் 2017 ஆம் திகதி தொடக்கம் 14 டிசம்பர் 2017 ஆம் திகதி நண்பகல்  12 மணியுடன் முடிவடையும். ஆனால் அம்பாரை மாவட்ட தமிழ் மொழி பிரதேசங்களான கல்முனை, நிந்தவூர், திருக்கோவில், பொத்துவில் ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் இல்லை.

இரண்டு மணித்தியால மழை கல்முனை நகரில் வெள்ளம் கரைபுரண்டது

Image
இன்று காலை(27) அம்பாறை மாவட்டத்தில் பெய்த பெரு மழையினால் கல்முனை நகரத்தின் பிரதான வீதிகள் பல வெள்ளத்தில் மூழ்கின.  இதன் காரணமாக கல்முனை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பொது மக்களுக்கு அசௌகரியமும் ஏற்பட்டன.  இன்று காலை 7.00 மணி தொடக்கம் 9.00 மணி வரையான இரண்டு மணித்தியாலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பெரு மழை பெய்ததது. இதனால் பல தாழ்ந்த பிரதேசங்கள் நீரில் மூழ்கின. கல்முனை பொலிஸ் நிலைய வீதி மற்றும் கல்முனை ஹிஜ்ரா வீதி என்பன முற்றாக வெள்ள நீர் பாய்ந்ததால் போக்குவரத்து சேவைகள் நெரிசல் காணப்பட்டதுடன் அரச  அலுவலகங்களுக்கு செல்லும் உத்தியோகத்தர்களும் பரீட்சைக்கு சென்ற மாணவர்களும் சிரமத்துடன் சென்றதை அவதானிக்க முடிந்தது.  இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசியதால் மின் தடையும் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேங்களிலும் ஏற்பட்டிருந்தன.

மருதமுனை நௌபல் எழுதிய “பச்சை இரத்தம் நீந்தும் காடு” கவிதை நூல் வெளியீடு

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) இலங்கை நிருவாகசேவை அதிகாரியான மருதமுனையைச் சேர்ந்த முகம்மதுத்தம்பி  முகம்மது நௌபல் எழுதிய “பச்சை இரத்தம் நீந்தும் காடு” கவிதை நூல் வெளியீடு எதிர் வரும் ஞாயிற்றுகிழமை(26-11-2017)காலை 9.35 மணிக்கு மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் கவிஞரும்ச,ட்டத்தரணியுமான ஏ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் நடைபெறவு ள்ளது. இதில் முதன்மை அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா,கௌரவ விருந்தினராக அரச சாகித்திய விருது பெற்ற கவிஞர் ஆசுகவி அன்புடீன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.நிகழ்ச்சி ஒ ழுங்கமைப்பு பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம், வந்தோரை வரவேற்றல் கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளர் கவிஞர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், நூல் அறிமுகம் கவிஞர் சோலைக்கிளி, நூல் விமர்சனம் பேராசிரியர் திரு யோகராசா, ஆய்வாளர் சிறாஜ் மசூர், கல்முனை பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ  உதவியாளர் எஸ்.எம்.றபாயூதின் நூலின் முதல் பிரதியைப் பெறவுள்ளர்.

தேர்தல் ஒத்திவைப்பு – நாளை கட்சித்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை

Image
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பில் நாளை கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இந்த கூட்டத்தில் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார். ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹசான் இதானகே எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இந்த வேளையில் - பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று குரல் எழுப்பினர். இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றமுடியாது என்றார். பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசேகர – பழையமுறைப்படி தேர்தல் நடத்தப்படவேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன - கூடிய விரைவில் தேர்தல் நடத்தப்படவேண்டும். சபாநாயகர் - என்னால் தேர்தல் நடத்த முடியாது. இது தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடத்தி எனது பொறுப்பை நிறைவேற்றுவேன்

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் விசேட ஒரு நாள் சேவை

Image
கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு இம்முறை தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் விசேட ஒருநாள் சேவையொன்று எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பத்தரமுல்ல இசுருபாயவில் அமைந்துள்ள ஆட்பதிவுத்திணைக்களத்தில் அன்றை தினம் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 வரை நடைபெறவுள்ளது. பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்காக மாத்திரம் இந்த விசேட சேவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் தபாலில் சேர்க்கப்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக பாடசாலை விண்ணப்பதாரிகள் சமூகமளிக்கத் தேவையில்லை . அவர்களின் பொறுப்பாளர்களான பெற்றோர் விண்ணப்பதாரரின் தகவலை  கிராமஉத்தியோகத்தரின் மூலம் உறுதிசெய்து வழங்கப்படும் அதிகாரக்கடிதத்தை திணைக்களத்திற்கு கொண்டுவருதல் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம்

Image
அண்மைக்காலமாக கல்முனை வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பில்  கணக்காய்வு  ஐய்ய  வினாக்கள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில்  அதனை எவ்வாறு தவிர்ப்பது ,அல்லது குறைப்பது எனவும்  ஐய்ய   வினாக்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது  என்பது தொடர்பாகவும்  கல்முனை வலய அதிபர்களுக்கு  விழிப்பூட்டும் கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம்  இன்று (23) வலயக்  கல்வி அலுவலக மண்டபத்தில் நடை பெற்றது. கல்முனை  வலயக்  கல்வி அலுவலக கணக்காளர்  றிஸ்வி யஹ்சரின்  நெறிப்படுத்தலில்  வலயக்கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில்  வலயக் கல்வி அலுவலக  மண்டபத்தில் இன்று முழு நாள் இடம் பெற்ற  செயமர்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் ,கிழக்கு மாகாண கணக்காய்வாளர் நாயகம் எச்.எம்.எம்.ரஷீட் ,பிரதம உள்ளக கணக்காய்வாளர் உட்பட மாகாண கணக்காய்வு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் . அதிபர்கள் ,பிரதி அதிபர்கள் ,பாடசாலை அபிவிருத்தி சங்கப்  பொருளாளர் என 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த விழிப்பூட்டல் செயலமர்வில்  பல்வேறுபட்ட ஐய்ய   வினாக்களுக்கான  விளக்கங்கள்

கல்முனையை 4ஆக பிரிக்க தமிழ் முஸ்லீம் தரப்பு உறுதி எல்லை பிரச்சினைக்கு தீர்வு இல்லை

Image
கல்முனை 4 சபைகளாக பிரிப்பது உறுதியாகிவிட்டது.தற்பொழுது நடைபெறும் பிரச்சினைகள் எல்லைப்பிரச்சினைகளாகும் - கல்முனை வடக்கு - தமிழா் பிரதேசம் கல்முனை முஸ்லீம் பிரதேசம். , - கல்முனை நகரம் ஆகிய எல்லைப்  பிரச்சினையே  நடைபெற்று வருகின்றன.  இப் பிரச்சினை சம்பந்தமாக இன்று (22) பி.பகல் 05.00 -07.00 மணிவரை எதிா்க்கட்சித் தலைவா் இரா சம்பந்தன் அவா்களின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எவ்வித தீா்மானமும்  எட்டவில்லை- மீண்டும் டிசம்பா் 10ஆம் திகதி இதே அரசியல் தலைவா்களுடன் கல்முனை பள்ளி வாசல் சம்மேளனம். தமிழா் மகா சபை பிரநிதிகள் ஒன்று கூடவுள்ளனா். தமிழா்கள் கல்முனை நகரம் எல்லை சம்பந்தமான  அவா்களது அறிக்கை அமைசச்சர்  ஹக்கீமிடமும் கையளிக்கப்பட்டது.முஸ்லீம்களது எல்லைகள் அறிக்கை இராசம்பந்தனிடம் இன்று கையளிக்கப்பட்டது.  இன்றைய சந்திப்பில் அமைச்சா் ரவுப் ஹக்கீம்,எதிா்கட்சித் தலைவா் இராசம்பந்தன் பிரதியமைச்சா் எச்.எம் ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான  சுமந்திரன், கோடிஸ்வரன் ,தேசிய காங்கிரஸ் தலைவா் ஏ.எல்.எம் அதாவுல்லா, தேசிய ஜக்கிய முன்னணித்  தலைவா் அசாத் சாலி ,வை.எம்.எ தலைவா் நபீல் ஆகியோரும்  கலந்து க