மருதமுனை நௌபல் எழுதிய “பச்சை இரத்தம் நீந்தும் காடு” கவிதை நூல் வெளியீடு
(பி.எம்.எம்.ஏ.காதர்)
இலங்கை நிருவாகசேவை அதிகாரியான மருதமுனையைச் சேர்ந்த முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல் எழுதிய “பச்சை இரத்தம் நீந்தும் காடு” கவிதை நூல் வெளியீடு எதிர் வரும் ஞாயிற்றுகிழமை(26-11-2017)காலை 9.35 மணிக்கு மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் கவிஞரும்ச,ட்டத்தரணியுமான ஏ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் நடைபெறவு ள்ளது.
இதில் முதன்மை அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா,கௌரவ விருந்தினராக அரச சாகித்திய விருது பெற்ற கவிஞர் ஆசுகவி அன்புடீன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.நிகழ்ச்சி ஒ ழுங்கமைப்பு பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம்,
வந்தோரை வரவேற்றல் கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளர் கவிஞர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், நூல் அறிமுகம் கவிஞர் சோலைக்கிளி, நூல் விமர்சனம் பேராசிரியர் திரு யோகராசா, ஆய்வாளர் சிறாஜ் மசூர், கல்முனை பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.றபாயூதின் நூலின் முதல் பிரதியைப் பெறவுள்ளர்.
Comments
Post a Comment