Posts

Showing posts with the label விபத்து

உழவு இயந்திரம் பனையில் மோதி 22 வயது வாலிபன் மரணம்

Image
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட் சவுக்கடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில்  நேற்று  (01) பிற்பகல் 4.30 மணியளவில் உழவு இயந்திரமொன்றில் அதிவேகமாக பயணித்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகாமையில் பனை மரமொன்றில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மட்டக்களப்பு, வாகரை பனிச்சங்கேணியைச் சேர்ந்த எஸ். சுரேஸ்காந் (22) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

நற்பிட்டிமுனை பிரதான வீதியில் சற்று நேரத்துக்கு முன்னர் இடம் பெற்ற பாரிய விபத்து மூவருக்கு பலத்த காயம்

Image

பெரியநீலாவணையில் கோரவிபத்து ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்!

Image
பெரியநீலாவணையில் பிரதான வீதியில் சற்றுமுன்னர் நடைபெற்ற கோரவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரு குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். உயிரழந்தவர் இப்பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற முறிவு வைத்தியர் என தெரிவிக்கப்படுகிறது . முற்சக்கரவண்டியும் பாரவூர்தியும் விபத்துக்குள்ளானதில் முற்சக்கர வண்டியில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்து இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்ககப்பட்டுளளனர். கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆழ்கடலுக்கு சென்ற வாழைச்சேனை மீனவர்கள் மூவரை காணவில்லை

Image
வாழைச்சேனையில் இருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவர் உட்பட படகினையும் காணவில்லை என வாழைச்சேனை பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.  வாழைச்சேனை ஹைறாத் துறையில் இருந்து கடந்த 30ம் திகதி பயணத்தை மேற்கொண்ட வாழைச்சேனையச் சேர்ந்த முகமது அலியார் முஸ்தபா, பிறைந்துறைச்சேனையை சேர்ந்த ஆதம்பாவா அமீர், ஓட்டமாவடியை சேர்ந்த ஆதம்பாவா முகம்மது புகாரி என்பவர்களே காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  மீன் பிடிப்பதற்காக ஹைறாத் துறையில் இருந்து கடந்த 30ம் திகதி இயந்திரப் படகில் மூன்று பேரும் சென்றுள்ளனர். மீன் பிடித்துக் கொண்டிருந்த சமயம் 6 ஆம் திகதி படகு பழுதடைந்துள்ளதுள்ளதாக படகு உரிமையாளரான வாழைச்சேனையைச் சேர்ந்த உசனார் காமிது லெப்பை என்பவருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர்.  அதன்பிற்பாடு இவர்களை காப்பாற்றும் முகமாக வாழைச்சேனை மீன்பிடி துறைமுக அலுவலகத்திற்கும், கடற்படை பிரிவினருக்கும், வாழைச்சேனை பொலிஸிலும் முறைப்பாடு செய்ததாக படகு உரிமையாளரான வாழைச்சேனையைச் சேர்ந்த உசனார் காமிது லெப்பை த...

ஆப்கானிஸ்தான் தலைநகரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 40 பேர் பலி - பலரின் நிலை கவலைக்கிடம்

Image
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  முஹமத் நபியின் பிறந்தநாள் ஆண்டுதோறும் மீலாதுன் நபி என்னும் பெயரில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டின் மீலாதுன் நபி கொண்டாட்டங்கள் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் விமான நிலையத்துக்கு செல்லும் வீதியில் உள்ள உரனஸ் திருமண மண்டபத்தில் இன்று மீலாதுன் நபி விழா பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.  மாலை சுமார் 6.15 மணியளவில் இங்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 60 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுடன் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.  தற்கொலைப்படை கைவரிசையாக கருதப்படும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும்...

கல்முனை நகருக்குள் காட்டு யானைகள்

Image
கல்முனை நகருக்குள் காட்டு யானைகள் புகுந்து மக்களுக்கு அச்சுறுத்தல் கட்டுப்படுத்துமாறு அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் மக்கள் கோரிக்கை விடுகின்றனர் . நேற்று இரவு (12) கல்முனையில் உள்ள விதைநெல் உற்பத்தி நிலையமொன்றை உடைத்து அங்கிருந்த விதை நெல்லை சேதப்படுத்திய சம்பவம் இடம் பெற்றுள்ளது.

மருதமுனை கடல் பரப்பில் மீன் பிடிக்கச் சென்ற கரவலைத் தோணி கடலில் மூழ்கியது

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) வங்காள விரிகுடா கடலில் இன்று(17-10-2017)கடும் காற்றும் கடல் கொந்தளிப்புமாக இருந்தது.மருதமுனை கடல் பரப்பில் மீன் பிடிக்கச் சென்ற மருதமுனையைச் சேர்ந்த மீனவர்கள் பயணித்த கரவலைத் தோணியொன்று காலை 11 மணியளவில் கடலில் மூழ்கியது அதில் பயணித்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள் பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் தோணியையும் அதில் பயனித்தவர்களையும் பொது மக்கள் 1.30 மணியளவில் கரைசேர்த்தனர்.கல்முனை பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து வந்து நிலைமைகளை அவதானித்தனர். 

இன்று பகல் கல்முனை பாண்டிருப்பு பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் 03 வாகனங்கள் பலத்த சேதம் மூவருக்கு படு காயம்

Image

துறைநீலாவணை மீனவர் முதலை கடித்ததில் படுகாயம்.!

Image
மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை 07ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கந்தன் சிவராசா(வயது 52) என்ற மீனவர் முதலை கடித்ததில் காயமடைந்த நிலையில் ,கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு வாவியில், நேற்று மாலை(31) தோணியில் இருந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த போது பாரிய முதலையொன்று தோணியை அடித்துடைத்து தோணியை 05 அடி உரத்துக்கு உயர்த்தி தோணியில் இருந்த தன்னை வீழ்த்தி கடித்ததாக அம்மீனவர் தெரிவித்தார். காலில் பலத்த காயங்களுக்குள்ளான அந்நபர் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஏனைய மீனவர்களால் காப்பாற்றப்பட்டு தற்போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ,அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கல்முனை அக்கரைப் பற்று பிரதான வீதியில் வாகன விபத்து

Image
கல்முனை அக்கரைப் பற்று பிரதான வீதியில் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலைக்கு அருகாமையில் 12.05மணிக்கு வாகன விபத்து இடம் பெற்றுள்ளது. கல்முனை நோக்கி வந்த லொறி ஒன்று மின் கம்பத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது . காயமடைந்த நிலையில் லொறி சாரதியும் உதவியாளரும் அஸ்ரப் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப் பட்டுள்ளனர்

கல்முனை ஸ்ரீ தரவப்பிள்ளையார் ஆலய செயலாளர் வரதன் வாகன விபத்தில் பலி

Image
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருதில் இடம்பெற்ற வாகன விபத்தில் கல்முனை -03ஆம் குறிச்சியை சேர்ந்த அப்புக்குட்டி வரதராஜன் (58)என்பவர் மரணமடைந்துள்ளார் . இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு 10.30மணிக்கு சாய்ந்தமருது பிரதான வீதியில் ரெட் சில்லி ஹோட்டலுக்கு முன்பாக இடம் பெற்றுள்ளது திருக்கோவிலில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியுடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி மோட்டார் சைக்களில் பயணிக்கும் போது நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. தலையில் ஏற்பட்ட பலமான காயத்தினால் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு வரதராஜன் என்பவர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதன் பின்னர் மரணமடைந்தார் . கல்முனை ஸ்ரீ தரவப்பிள்ளையார் ஆலயம் மற்றும் கல்முனை கண்ணகி அம்மன் ஆலயங்களின் அறப்பணி புரிகின்ற இவர் 03 பிள்ளைகளின் தந்தையாவார் . சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளதுடன் விசாரணை நடாத்தப் படுகிறது . இறந்தவரின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் வைக்கப் பட்டுள்ளது .

இன்று அதிகாலை சாய்ந்தமருதில் இடம் பெற்ற வாகன விபத்தில்

Image
சாய்ந்தமருது பிரதான வீதியில்  இடம்பெற்ற விபத்தில் மூன்று ஆண் குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதுடன் ஏனையோர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து பாலமுனை நோக்கி வந்த வேன் அக்கரைப்பற்றில் இருந்து மட்டக்களப்பு  நோக்கி வந்த கல்முனை டிப்போ பஸ்ஸூடன் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று அதி காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மேலும் பெண்கள் உட்பட 10 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் காயமடைந்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருதமுனையைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி கழுத்து நெரித்து கொலை

Image
  கல்முனை பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட மருதமுனையைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி இனந்தெரியாதோரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று(10) சனிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் மருதமுனையை சேர்ந்த 73 வயதான சீனித்தம்பி பாத்தும்மா என்பவராகும்.  இவரது சடலம் பெரிய நீலாவணைப் பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றில் இன்று(11) அதிகாலை 12.30 மணிக்கு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது கொலை செய்யப்பட்ட மூதாட்டி நேற்று நோன்பு நோற்றுள்ளார். நோன்பு திறப்பதற்கு அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்று பேரீத்தம் பழம் வாங்கி வந்ததை அயலவர்கள் கண்டுள்ளனர். வீட்டுக்கு வந்து நோன்பு திறந்தபின்னர் மஃரிப் தொழுகை நிறைவேற்றி விட்டு மீண்டும் அதே கடைக்கு வெற்றிலை வாங்கி வரச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதன் பின்னரே இவரை உறவினர்கள் தேடத் தொடங்கியுள்ளனர். இதே வேளை கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் பேரப் பிள்ளை முச்சக்கர வண்டியொன்றில் மூத்தம்மா சென்றதாக கூறுகின்றார். இதேவேளை அந்த மூதாட்டியின் கழுத்தில் 4 பவுண் ...

கோரிக்கையை செவிமடுக்காததால் அமைச்சர் தற்கொலை முயற்சி

Image
பிரதியமைச்சர் பாலித தெவரபெரும், தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  களுத்தறை மீகஹதென்ன பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குளறுபடிகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என அப்பாடசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர், பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார். குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தீர்வு வழங்காவிடின், தான் பதவி விலகப்போவதாக நேற்று (29) தெரிவித்திருந்த நிலையில், இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவருடைய கோரிக்கைகளுக்கு உரிய முறையில் பதில் கிடைக்காமையை அடுத்தே அவர் இவ்வாறு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை நகரில் வாகன விபத்து அதிகரித்துள்ளது

Image
கல்முனை நகரில்  வாகன விபத்து அதிகரித்துள்ளது தினமும் விபத்துக்கள் அதிகரித்துள்ளமையினால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொது  அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில்  நேற்று கல்முனை நகரின் மத்தியில் இடம் பெற்ற விபத்தைக் காணலாம் தெய்வாதீனமாக  இழப்புக்கள் எதுவும் இடம் பெறவில்லை .இன்று கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்றும் விபத்துக்குள்ளாகி உள்ளது.

இன்று காலை குருநாகலை தோரயாய எனுமிடத்தில் வாகன விபத்தில் ஒருவர் மரணம்

Image
ஜனாஸாவை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்  குருநாகலை தம்புல்லை வீதி தோரயாய பாடசாலை முன்பாக   வீடு வீடாக சென்று ஹதியா கேட்கும் நபர் ஒருவர் பாதையை கடக்கும் போது கெப் வண்டி மோதுண்டு ஸ்தலத்திலே உயிரிளந்துள்ளார். குறித்த நபரின் ஜனாஸா குருநாகலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அவரைப்பற்றி அறிந்துகொள்ள எந்த ஆவணமும் அவரிடம் இருக்கவில்லை எனவும், போலீசார் மேலதிக விசாரணைகள்  மேற்கொண்டு வருவதாகவும், பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.

கொஸ்கம முகாமின் ஆயுதக் கிடங்கில் தீ

Image
கொஸ்கம , சாலாவ இராணுவ முகாமில் பாரிய வெடிப்புச் சத்தத்துடன் தீ ஏற்பட்டுள்ளது. குறித்த இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கிலேயே குறித்த தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வெடிப்புச் சத்தம் கேட்டவுடன், பிரதேசவாசிகள் அங்கிருந்து அகன்றதாகவும் அச்சத்தம் பல கிலோ மீற்றர் தூரம் வரை கேட்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, குறித்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட சேதம் தொடர்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை, பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி களுஅக்கல வரை அவிஸ்ஸாவளை - களுஅக்கல வீதி மூடப்பட்டுள்ளதோடு, அவிஸ்ஸாவளை - கொழும்பு வீதி அவிஸ்ஸாவளையில் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிய இணைப்பு கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தினால் அதனைச் சூழ 8 மீற்றர் தூரத்தில் வசிப்போரை அந்த இடங்களிலிருந்து அகன்று செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்டுள்ள தீவிபத்தினால் ஒரு புறம் கலுஅக்கல வரையும் மறுபுறம் அவிஸ்ஸாவலை வரை வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த வெடிப்பு ச...

குருக்கள்மட வீதி வளைவில் மோட்டார் சைக்கல் விபத்து ஒருவருக்கு காயம்

Image
கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கல் குருக்கள்மட  வீதி வளைவில் சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்தில்  மோதி விபத்து இடம் பெற்றுள்ளது   சாரதி கழுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார். 

மூதூரில் வாகன விபத்து வாலிபர் ஒருவர் மரணம்

Image
இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் மூதூர் மத்திய கல்லூரி மைதானத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதியில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் மீது வேகமாக சென்ற  பஸ் ஒன்று மோதியதில் ஒரு இளைஞன் மரணமடைதுள்ளதாக  மூதூர் பொலிசார் தெரிவிக்கின்றனர் . கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற பஸ்ஸே  இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது . விபத்தை அடுத்து  அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது  உடன் ஸ்தலத்துக்கு சென்ற பொலிசார் நிலைமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் . மரணித்த இளைஞனின் சடலம் மூதூர் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளது . சாரதி  கைது செய்யப் பட்டுள்ளதுடன்  விபத்து தொடர்பாக மூதூர் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . காயமடைந்த மற்ற இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்