உழவு இயந்திரம் பனையில் மோதி 22 வயது வாலிபன் மரணம்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட் சவுக்கடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில் நேற்று (01) பிற்பகல் 4.30 மணியளவில் உழவு இயந்திரமொன்றில் அதிவேகமாக பயணித்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகாமையில் பனை மரமொன்றில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மட்டக்களப்பு, வாகரை பனிச்சங்கேணியைச் சேர்ந்த எஸ். சுரேஸ்காந் (22) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
Comments
Post a Comment