Posts

Showing posts from July, 2015

பொத்துவிலில் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக கூச்சல் தேர்தல் பிரச்சாரத்தில் சற்று முன் பெரும் அமளிதுமளி

Image
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுகின்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பொத்துவிலில் இன்று (31)நடை பெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் சற்று முன் பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளன. இந்த அமளி துமளியானது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப்ஹக்கிம் அவர்களின் பொத்துவில் வருகையினை எதிர்த்து எழுந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கலவரத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பொத்துவில் ஊடகவியலாளர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ரவூப்ஹக்கிம் அவர்களின் மெய்ப்பாதுகாவலரால் தாக்கப்பட்ட நிலைமையில் பொத்துவில் சட்டத்தரணி ஒருவர் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை  ரவூப் ஹக்கீம் மேடையில் பேச முற்பட்டபோதே கற்கள் மற்றும் முட்டைகளை கொண்டு எறிந்து கூக்குரல் இட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொத்துவிலில் அரசியல் வரலாற்றில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இவ்வாறான எதிர்ப்பு ஏற்பட்டமை இம்முறைதான் என்ப

ஏமாற்று அரசியல் நிலைக்க இடமளிக்காமல் அதற்கான மாற்றத்தை நோக்கிய ஆரம்ப பயணத்துக்கு இத்தேர்தல் மூலம் பாதையமைக்க வேண்டும்.

Image
தபால் மூல வாக்களர்களிடம் வேட்பாளர் சிராஸ் மீராசாஹிப் உருக்கமான வேண்டுகோள்! அறிவுபூர்வமான ஒரு இயக்கமாக எமது சமூகத்திற்கான மாற்று அரசியலை வடிவமைக்கும் பெரும் போராட்டத்தை நாம் வென்றெடுக்கும் மிகப் பொருத்தமான ஒரு தொடக்கமாக இத்தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும். இதனை முன்னெடுக்கும் தார்மீகப் பணியை சரியாகச் செய்யக்கூடியவர்கள் புத்திஜீவிகளும் அரச பணிபுரியும் கல்விச் சமூகமுமே ஆகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் மயில் சின்னத்தில் போட்டியிடும் 5 ஆம் இலக்க வேடபாளர் சிராஸ் மீராசாஹிப் பத்திரிகையாளர்களிடத்தில் கருத்து தெரிவித்தார். தபால்மூல வாக்களர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் செய்தி என்ன? எனக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இத்தேர்தலை ஒரு வேட்பாளரை வென்றெடுப்பதற்கான தேர்தல் என்ற குறுகிய நோக்கில் நான் பார்க்கவில்லை. இதனை சமகால முஸ்லிம் அரசியலில் ஒரு மாற்றுச் சிந்தனையை உருவாக்கும் போராட்டத்தின் தொடக்கமாகவே நான் பார்க்கின்றேன். சமூகக் கட்சி என்ற பெயரால் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றும் அரசியலைச் செய்துவரு

சிராஸ் மீராசாஹிபை ஆதரித்து சாய்ந்தமருது 12 ஆம் குறிச்சியில் மகளிர்களுக்கான கருத்தரங்கு

Image
திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் ஐந்தாம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபை  ஆதரித்து சாய்ந்தமருது 12 ஆம் குறிச்சியில் மகளிர்களுக்கான கருத்தரங்கு நேற்று மாலை நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் ஏ.எம்.யுனைதீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள்  என பலரும்  கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் பஷிலை சிறைக்கு சென்று சந்தித்தவர் அமைச்சர் றிசாட்

Image
முன்னாள் எம் .பீ  ஹரீஸ் தெரிவிப்பு  முன்னாள் அமைச்சர் பஷிலுடன் நெருங்கிய உறவைக் கொண்டவர் அமைச்சர் றிசாட். அவர் பஷில் ராஜபக்ஷ சிறையிலிருக்கும் போது மறைமுகமாக சிறைக்குச் சென்று சந்தித்த ஒரே ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாகும். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சார கருத்தரங்கு நேற்று (29) புதன்கிழமை சாய்ந்தமருது கடற்கரை வீதியில் இடம்பெற்றது. மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.நஸார்தீன், எம்.ஹமீட், சாய்ந்தமருது விளையாட்டுக் கழக சம்மேளன பொருளாளர் ஏ.எல்.ஆப்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் போராளிகளும், ஆதரவாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், முன்னாள் அமைச்சர் பஷிலை மறைமுகமாக சி

இம்மாதத்தில் இரண்டு பௌர்ணமி இன்று நீலநிலா

Image
வானில் ஒரே மாதத்தில் இரண்டு பெளர்ணமி தோன்றும் அரிய நிகழ்வான "புளூ மூன்" என்ற நிகழ்வு இன்று (31) நடைபெறவுள்ளது. ஒரு மாதத்தில் 2 பெளர்ணமி நிகழ்கிறபோது 2வது பெளர்ணமி "நீல நிலவு" அதாவது புளூ மூன் என அழைக்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2ஆம் திகதி முழு நிலவு வானில் தோன்றியது. இன்று  மீண்டும் பெளர்ணமி வருகிறது. நிலவு முழு நிலவாக தோன்றும். இதுவே நீல நிலவு அழைக்கப்படும். நீல நிலவு என்று கூறினாலும் நீல நிறத்துக்கும், நிலவின் நிறத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஒரே மாதத்தில் 2 பெளர்ணமி வருவது அதாவது நீல நிலவு வருவது அபூர்வமானது. 

கொழும்பில் தேர்தல் கலவரம் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Image
கொழும்பில் தேர்தல் கலவரம்  துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி யான சம்பவம்  இடம் பெற்றுள்ளது  கொழும்பு ப்ளூமணெ்டல் வீதியில் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு வேன்களில் வந்த சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.   துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனையடுத்து காயமடைந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   மேலும் இருவர் அதி தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2010ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த நிதியில் மருதமுனை பிரதேசத்க்கு உதவி செய்தவர் அமைச்சர் றிஷாட்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை பிரதேசத்திலே 2010ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த நிதியில் பண உதவி செய்து மக்களை ஆதரித்தவர் அமைச்சர் றிஷாட் பதியூதீன் ஆவார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மருதமுனை வேட்பாளர் சித்தீக் நதீரை ஆதரித்து நேற்று(29-07-2015) மருதமுனை ஹாஜியார் வீதியில் இடம் பெற்ற கருத்தரங்கில் விஷேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் இவ்வாறு தெரிவித்தார். ஏ.ஆர்.இஹ்சான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் வேட்பாளர் சித்தீக் நதீர் கலந்த கொண்டார்.சிறப்பு அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மருதமுனை மத்திய குழுவின் தலைவர் சம்சுல் அமான் அவருடன் இணைந்து கொண்ட இன்னும் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இங்கு றஹ்மான் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:- அப்போது வெள்ளத்தால் பாதிக்கப

வீட்டை அடிப்படையாகக் கொண்டு முன்பள்ளி சிறார்களின் வளர்ச்சி

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர்   சிறுவர்   விவகார இராஜாங்க அமைச்சின் அனுசரணையுடன் கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த வீட்டை அடிப்படையாகக் கொண்டு முன்பள்ளி சிறார்களின் வளர்ச்சி எனும் தொனிப்பொருளிலான  பெற்றோர்களுக்கான கருத்தரங்கு இன்று நடை பெற்றது. கல்முனை இக்பால் சனசமுக நிலையத்தில் பிரதேச செயலாளர்  எம்.எச்.எம்.கனி தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்  என் கனேஸ்வரன் வளவாளராகக்கலந்து கொண்டு உரையாற்றினார்  இந்நிகழ்வில் பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ சிறுவர்  அபிவிருத்தி உதவியாளர் எம்.எச்.ஸம்ரினா சியாம்  மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல் முஸ்பிரா நஸீர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களான ஓ.கே.எப். ஷரீபா. எம்.எஸ். ஸரீனா.எம்.தஹ்லான் உட்பட பலர் கலந்து கொண்டனர்

சாய்ந்தமருது திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு!

Image
சாய்ந்தமருது திவிநெகும (சமுர்த்தி) வங்கியின் பின்புற வேலி தனிநபர் ஒருவரினால் உடைக்கப்பட்டு வங்கி முகாமையாளர் அச்சுறுத்தப்பட்ட சம்பத்தைக் கண்டித்து சாய்ந்தமருது திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் வங்கி உத்தியோகத்தர்களும் இன்று (30) வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனா.  சாய்ந்தமருது திவிநெகும வங்கிக்கு சொந்தமான பின்புற வளவினை தனிப்பட்ட நபரொருவர் தன்னுடைய வளவு என உரிமைகோரிக்கொண்டு வளவின் பின்புற சுற்றுவேலியினை உடைத்தெறிந்து  அத்துமீறி உள்ளே புகுந்து வங்கி வளவினுள் நடப்பட்டிருந்த மரக்கண்டுகளையும் சேதப்படுத்தியுள்ளார். இன்று காலை கடமைக்கு சென்ற வங்கி முகாமையாளர் தனிநபர் ஒருவர் வங்கி வளாகத்திற்குள் அத்துமீறி நின்றதையும், வேலி உடைக்கப்பட்டதையும் கண்டு அவரிடம் நியாயம் கேட்க சென்றவேளை அந்த தனிநபர் தகாத வார்த்தை பிரயோத்தை பயன்படுத்தி முகாமையாளரை அச்சுறுத்தியுள்ளார்.  இச்சம்பவம் தொடர்பாக முகாமையாளர் பிரதேச செயலாளருக்கு முறையிட்டுள்ளார். இச்சம்பவத்தினை கல்முனை பொலிஸில் முறையிடுமாறு பிரதேச செயலாளர் வழங்கிய ஆலோசனைக்கமைவாக கல்முனை பொலிஸில் முகாமையாளரினால் முறைப்பாடு செய்ய

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களின் ஏ.எல்.தின விழாவும்,எழுவான் நினைவு மலர் வெளியீடும்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களின் ஏ.எல்.தின விழா இன்று (29-07-2015) அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும்,முதல் பொறியியல் துறை பட்டதாரியுமான எம்.ஏ.முகம்மட் இப்திகார் அபூபக்கர்  கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக கல்முனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளரும் , ஷம்ஸ் மத்திய கல்லூரி  அபிவிருத்தி சபை உறுப்பினருமான ஏ.ஆர்.எம்.சாலிஹ் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக பிரதி அதிபர் எம்.எம்.எம்.முஷர்ரப் மற்றும் அதிதிகளாக பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள்,பகுதித் தலைவர்கள் உள்ளிட்ட  ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்த கொண்டனர். இங்கு எழுவான் என்ற பெயரில் ஏ.எல்.தின நினைவு  மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன. 

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் உயர்தர மாணவர் தின விழா

Image
கல்முனை  உவெஸ்லி உயர்தர பாடசாலையில்  இவ்வருடம் உயர்தர பரீட்சை எழுதும்  மாணவர்கள் ஏற்பாடு செய்த A /L  தின விழா  கல்லூரி அதிபர் வீ.பிரபாகரன் தலைமையில் திங்கட் கிழமை  பெற்றது . நிகழ்வில் பிரதம அதிதியாக  கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம்.வை.அரபாத்  கலந்து கொண்டு சிறப்பித்தார் . கௌரவ அதிதிகளாக  கல்முனை தமிழ் பிரிவு கோட்டக்கல்வி  அதிகாரி பொ .ஜெகநாதன் ,காரைதீவு வைத்திய அதிகாரி  எம்.ஏ.பிரசாத் ,உவெஸ்லி உயர்தர பாடசாலை பிரதி அதிபர் எஸ்.கலையரசன் , துரவந்தியமேடு அ .த .க .பாடசாலை அதிபர் ந.தியாகராசா , உவெஸ்லி உயர்தர பாடசாலை உதவி அதிபர் எஸ்.   தேவச்சந்திரா , பாண்டிருப்பு மகா விஷ்ணு  வித்தியாலய முன்னாள் அதிபர்  சோ .கோவிந்தராஜா , உவெஸ்லி உயர்தர பாடசாலை பகுதி தலைவர் திருமதி பொ .ருத்ரா ஆகியோரும்  மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் , பழைய மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர் . மாணவர் தின விழாவின்  சிறப்பம்சமாக கண்ணோட்டம்  என்ற  சிறப்புமலர் வெளியிட்டு வைக்கப் பட்டதுடன், ஆசிரியர்கள் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வுகளும் , மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன .

கல்முனை சுகாதார தொண்டர்கள் திருமலையில் ஆர்ப்பாட்டம்

Image
ஏ.எல்.ரபாயிடீன் பாபு  கல்முனையிலிருந்து  வந்து சுகதார தொண்டர் ஊழி யர்கள் திருகோணமலையில் கிழக்கு மாகாண பேரவை செலகத்துக்கு முன்னால்   ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் .  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்  பணிமனைக்குட்பட்ட  வைத்தியசாலைகளில்   1994ஆம்  ஆண்டு முதல் நீண்டகாலமாக  தொண்டர் அடிப்படையில் சுகதார ஊழி யர்களாக  கடமையாற்றும்  தமக்கு நிரந்தர நியமனம் கோரி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர் .   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்  பணிமனைக்கு முன்னால்  கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் செய்து  வந்த சுகதார தொண்டர் ஊழி யர்கள்   கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கிழக்கு மாகாண  சபைக்கு முன்னால்  அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்  . கிழக்கு முதலமைச்சரிட மும்  ஆளுநரிடமும்  இவர்கள் நியாயம் கோரி வந்துள்ளதாக  தெரிவிக்கின்றனர் . 

முஸ்லிம் காங்கிரஸ் மகளிர் பிரிவு பணிப்பாளர் சல்மா ஹம்சா, ஹிஸ்புல்லாஹ்வை ஆதரிக்க தீர்மானம்!

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மகளிர் பிரிவின் கிழக்கு மாகாண அமைப்பாளரும், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சா எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை ஆதரிக்க தீர்மானித்துள்ளார். முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் உடன் பிறந்த சகோதரியான இவர் கடந்த பல தேர்தலில் ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிராகவே செயற்பட்டு வந்தார். இந்த நிலையில் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்கு இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையிலேயே அவர், தனது சகோதரரான ஹிஸ்புல்லாஹ்விற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார். இது தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் தனக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஹிஸ்புல்லாஹ்வின் வெற்றிக்காக பிரசாரம் செய்யவள்ளதாகவும் சல்மா ஹம்சா தெரிவித்தார்.

எனது வெற்றியின், முக்கிய பங்காளி றிசாத் பதியுதீன் - ஜனாதிபதி மைத்திரி

Image
-கிளிநொச்சியிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா- 1978  ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் முதன் முறையாக வடக்கிலிலும்,கிழக்கிலும்  உள்ள அதிகளவான மக்கள் வாக்களித்தது எனக்கே  என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் றிசாத் பதியுதின் எனது வெற்றியின் முக்கிய பங்காளியாவார் என்றும் கூறினார். கிளிநொச்சியில் மொத்த விற்பனை நிலையத்தை இன்று மாலை திற்நத வைத்து உரைாயற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் ஜனாதபதி மைத்திரிபால சிறிசேன தமதுரையில் கூறியதாவது, அமைச்சர் றிசாத் பதியுதீன் எனது நெருங்கிய நண்பவராவார்.அவருக்கு எந்த அமைச்சை கொடுத்தாலும் அதனை திறம்பட செய்யக் கூடியவர்.அரசாங்த்தின் திட்டங்களை உரிய முறையில் முன்னெடுக்கும்  ஒரு சிற்நத அமைச்சர் என்பதை இங்கு நான் கூறிக் கொள்ளவிரும்புகின்றேன். நான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 6 மாதங்கள் தான் ஆகின்றது.இந்த 6 மாதங்களுக்குள் பாரிய மாற்றங்களை செய்துள்ளேன்.குறிப்பாக வடக்கிலும்,கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் வாழும் மக்கள் அச்சமற்ற சூழலில் வாழ்வதற்கு வசதிகளை செய்து கொடுத்துள்ளேன். அது மட

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 171 பேர் கைது

Image
தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 171 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  இதுவரை தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டமை குறித்து 77 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.   மேலும் பொலிஸ் தலைமையகத்தின் தேர்தல் முறைப்பாட்டு பிரிவுக்கு 79 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் 86 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் கூறியுள்ளது.   அத்துடன் தேர்தல் திணைக்களத்திற்கு இதுவரை 549 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இவற்றில் கொழும்பிலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.  

இ.போ.ச சொத்துக்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தத் தடை

Image
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் ஊழியர்களை எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என, உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.  இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தனவுக்கே அமைச்சர் இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளார்.   இதன்படி இபோச பஸ்களில் வேட்பாளர்களின் போஸ்டர்களை ஒட்டுதல் மற்றும் ஊழியர்களின் கடமை நேரத்தில் அவ்வாறான பணிகளுக்காக அனுப்புதல் போன்றன தடைசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.   கடந்த காலங்களில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் ஊழியர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதால், பயணிகள், ஊழியர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   மேலும் கடந்த காலங்களில் அரசியல் கூட்டங்களுக்காக அனுப்பப்பட்ட பஸ் வண்டிகளுக்கான கட்டணம் கிடைக்கப் பெறாமையால் போக்குவரத்துச் சபைக்கு வறுமானம் குறைவடைந்ததாக கூறப்படுகின்றது.   இதனால் எந்தவொரு அரசியல் ஊர்வலத

ராஜித, அர்ஜுன, ஹிருணிகா உள்ளிட்ட ஐவர் சுதந்திர கட்சியில் இருந்து நீக்கம்!

Image
நல்லாட்சிக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.   அதன்படி, இம்முறை தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிடும் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, எஸ்.பி.நாவின்ன, எம்.கெ.டி.எஸ்.குணவர்த்தன ஆகியோரின் கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டுள்ளது.   மேலும் ஹிருணிகா பிரேமச்சந்திரவும் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.   இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உரியவர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

கலாநிதி பட்டம் பெற்ற அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையத்தால் கௌரவிப்பு

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்;) மருதமுனை தாறுல் ஹூதா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர்; அஷ்செயக் எம்.எல்.முபாறக் மதனி கலாநிதி பட்டப்படிப்பைப் ப+ர்த்தி செய்ததை கௌரவிக்கும் முகமாக மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு  கடந்த ஞாயிற்றுக்கிழமை(26-07-2015) இஸ்லாமிய பிரச்சார மையத்தின்  அலுவலகத்தில் நடைபெற்றது. தாறுல் ஹூதா மகளிர் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்செய்க் ஆர்.நுவீஸ் மக்கி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எம்.எல்.முபாறக் மதனியின் தந்தையான அபூபக்கர் மசூத்லெப்பை(சாஹூல்ஹமீட் பையில்வான்)  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். விஷேட அதிதியாக  மருதமுனை தாறுல் ஹூதா மகளிர் அரபுக் கல்லூரியின் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் மற்றும் அதிதிகளாக கல்லூரியின் பிரதி அதிபர் அஷ்செய்க் ஏ.எல்.ஏ.எஸ்.எம்.முபாறக் பாரி>கல்லூரியின் செயலாளரும்>பிரச்சார மையத்தின்  உப தலைவருமான ஆசிரியர் எம்.பகுறுதீன்> பிரச்சார மையத்தின் செயலாளர் அஷ்செய்க் எஸ்.எச்எம்.முஜீப் சலபி உள்ளிட்ட விரிவுரையாளர்கள் மையத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இங்கு அஷ்செய்க் எம்.எல்.முபாறக் ம

இந்திய குடியரசுத் தலைவரின் மறைவுக்கு முதலமைச்சர் விடுத்துள்ள அனுதாபச் செய்தி

Image
இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானியாக வும், தொழில் நுட்ப வல்லுநராகவும், குடியரசுத் தலைவராகவும், பாரத மண்ணின் சாதி, மத பேதங்களற்ற முறையில் அனைத்து மக்களாலும் விஞ்ஞானி அப்துல் கலாம் என்று அழைக்கப்பட்டவருமான  ஏ. பீ. ஏ. கலாம் தனது 84 வது வயதில் மரணம் அடைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையும், அதிர்ச்சியும் அடந்தேன் என்று கிழக்கு மாகாண முலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது அநுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இளைஞர்கள் மத்தியில் அவருக்கு பெருமதிப்பிருந்து வந்தது. அவருடைய எளிமையான வாழ்க்கையும் அவரது எளிமையான பேச்சும் எல்லோரையும் கவரக் கூடியது. 'எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில்' என்ற அவர் கூற்றும்  'கனவு காணுங்கள்'  அந்தக் கனவை நனவாக்கப் பாடுபடுங்கள்  என்ற உரையும் இன்னும் அதன்பால் இளைஞர்களை ஈர்த்துள்ளது. உலகம் போற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமின் மறைவு இலங்கை, மக்களுக்கு மாத்திரமல்ல உலக மக்களுக்கும் பெரும் பேரழிப்பாகும் அவர் உலக மக்கள் மனங்களிலும்

அப்துல் கலாம் காலமானார்

Image
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இன்று திங்கட்கிழமை இரவு காலமானார்.  மேகாலயா மாநிலம், ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து இந்திய ராணுவ மருத்துவர்கள் விரைந்து சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் காலமானார்.  இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள

கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் தனது ஆதரவாளர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்தார்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் எந்த வித நிபந்தனைகளும் இன்றி உத்தியோகபூர்வமாக  இணைந்து கொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசித் தலைவரும்,அமைச்சருமான  றிஷாட் பதியுதீன் நேற்று (27-07-2015)நள்ளிரவு  12.30 மணிக்கு றஹ்மானின் இல்லத்திற்கு வருகை தந்த போதே றஹ்மான் இணைந்து கொண்டார்.அமைச்சர் றிஷாட் பதியுதீன் இஸட்.ஏ.எச்.றஹ்மானுக்கு மாலை அணிவித்து வரவேற்று கட்சியில் இணைத்துக் கொண்டார்.   இவருடன் முன்னூற்றுக்கும் மேற்பட்ட அவரது முக்கிய ஆதரவாளர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசித் தலைவரும் ,அமைச்சருமான  றிஷாட் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இணைந்து கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும்,தேசியப் பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வேட்பாளர்களான மருதமுனையைச் சேர்ந்த  சித்தீக் நதீர்,சம்மாந்துறையைச் சேர்ந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில்,அக்கரைப்பற்ற