மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களின் ஏ.எல்.தின விழாவும்,எழுவான் நினைவு மலர் வெளியீடும்
(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களின் ஏ.எல்.தின விழா இன்று (29-07-2015) அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும்,முதல் பொறியியல் துறை பட்டதாரியுமான எம்.ஏ.முகம்மட் இப்திகார் அபூபக்கர் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதியாக கல்முனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளரும் , ஷம்ஸ் மத்திய கல்லூரி அபிவிருத்தி சபை உறுப்பினருமான ஏ.ஆர்.எம்.சாலிஹ் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக பிரதி அதிபர் எம்.எம்.எம்.முஷர்ரப் மற்றும் அதிதிகளாக பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள்,பகுதித் தலைவர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்த கொண்டனர்.
இங்கு எழுவான் என்ற பெயரில் ஏ.எல்.தின நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
Comments
Post a Comment