Posts

Showing posts with the label சுதந்திர

71வது தேசிய தின நிகழ்வு நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில்

Image
71வது தேசிய தின நிகழ்வு நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் அதிபர் வை.எல்.பஸீர்  தலைமையில் நேற்று நடை பெற்றது அமைச்சர் றிசாத் பதியுதீனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் சி.எம்.ஹலீம் தேசிய கோடி ஏற்றி மரக்கன்று நடுவதையும் கல்லூரி ஆசிரியர்களையும் காணலாம் 

நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஸன் சுதந்திர தின விழா

Image
70வது சுதந்திர தினத்தை அபிமானத்துடன் கொண்டாடும் வகையில் நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஸன் நிறுவனம் ஏற்பாடு செய்த சுதந்திர தின விழா அல்-கரீம் பவுண்டேஸன் தையல் பயிற்சி நிலையத்தில் இன்று நடை பெற்றது. அல்-கரீம் பவுண்டேஸன் தலைவர் சீ.எம்.ஹலீம் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் சமாதான புறாவும் அங்கு பறக்கவிடப்பட்டது. 70வது சுதந்திர தின நினைவாக மரக்கன்றுகளும் நட்டுவைக்கப்பட்டதுடன் தையல் பயிற்சி நிலையத்தில் பயிற்ச்சியை நிறைவு செய்த 40 யுவதிகளுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில் நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய பிரதி அதிபர் திருமதி ஏ.முனாஸீர் பிரதம அதிதியாக கலந்து கொன்டு சுதந்திர தின சிறப்புரை நிகழ்த்தினார். அவர் அங்கு உரையாற்றுகையில் சுதந்திர தினத்திலே நாங்கள் அனைவரும் நாட்டுப்பற்றுமிக்கவர்களாக இருக்க வேண்டும். எமது தேசியக் கீதம் இசைக்கப்படுகின்ற போது தேச உணர்வு கொண்டவர்களாக பெற்றோர்கள் இருக்கின்ற போதுதான் எதிர்கால சந்ததியினர் எங்களைத் தொடர்ந்து வருகின்ற எமது பிள்ளைகளை நாட்டுப்பற்றுமிக்க பிள்ளைகளாக உருவா...

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

Image
 முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மறிச்சிக்கட்டி மக்களின் பிரச்சினை  அரசியல் கண்கொண்டு பார்க்க வேண்டியதோ ,கட்சிகள் நிறங்கள்  சார்பாக பார்க்க வேண்டிய விடயமோ அல்ல . இது ஒரு சமுதாயத்தின் உரிமைப்  பிரச்சினை மறிச்சிக்கட்டியில் இன்று ஏற்பட்டிருக்கும் ஆபத்து இந்த நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லீம்களையும் பாதிக்கக்கூடியது .எமது போராட்டத்திற்கு   தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்குகின்ற அதே வேளையில் முஸ்லீம் அரசியல் தலைமைகள் கட்சி நிறம் பார்த்து பிரித்து செயற்ப்படுவது சமுகத்திற்கே   வெட்க கேடான விடயம் . இவ்வாறு முசலி பிரதேச அபிவிருத்தி குழு ஆலோசகர் M.L.S.அலிகான் ஷரீப் தெரிவித்தார் மறிச்சிக்கட்டியில் கடந்த 20 நாட்களாக இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம்கள் பலர் இணைந்து கொண்டனர் . கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் C.M.முபீத் தலைமையில் சென்ற குழுவினர் அந்த மக்களுடன் இணைந்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர் . அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அலிக...

கல்முனையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலக   சுதந்திர தின விழா    கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் .அப்துல் ஜலீல் தலைமையில் 69வது சுதந்திர தின விழா நடை பெற்றது . கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை   சுதந்திர தின விழா  இலங்கையின் 69ஆவது சுதந்திர தின நிழ்வுகள் இன்று கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நடை பெற்றது  வைத்திய அத்தியட்சகர் டாக்டர்  ஏ.எல்.எப்.ஏ.றஹ்மான் தலைமையில்.ந்டை பெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்கள் தாதியர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .இதே வேளை இவ்வைத்தியசாலையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு   கல்முனை மக்கள் வங்கி கிளையால் வங்கிக்கணக்கு புத்தகங்கள் வழ்ங்கி வைக்கப்பாட்டதுடன் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன இந்நிகழ்வில் மக்கள்  வங்கியின் பிராந்திய உதவி முகாமையாளர் ஏ.அஸீஸ் உட்பட   ஊழியர்களும் கலந்து கொண்டனர்  கல்முனை பிரதேச செயலக  சுதந்திர தின விழா  69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினா...

கல்முனையில் நடை பெற்ற மே தின நிகழ்வு

Image
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மே தின விழா  இன்று காலை சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் இடம் பெற்றது.  கல்முனை வை.எம்.சி.ஏ. முன்பாக ஆரம்பித்த மே தின ஊர்வலம் களமுனை நகர் ஊடாக சென்று வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் பொதுக் கூட்டமும் நடை பெற்றது. திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கோடீஸ்வரன் ,கிழக்கு மாகான சபை உறுப்பினர்களான எம்.ராஜேஸ்வரன்,ஆரிப் சம்சுதீன் ,கல்முனை மாநகர சபை முன்னாள் எதிர்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன்  உட்பட  சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர்கள் அங்கத்தவர்கள் என் பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர். ஆயுட்கால தலைவரான சங்க தலைவர்  லோகநாதன் உட்பட ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் அங்கு கௌரவிக்கப் பட்டதுடன் மே தினக் கோரிக்கை பிரகடனமும் வெளியிட்டு வைக்கப் பட்டன .

மருதமுனை பரக்கத் ஜவுளி நிலையத்தில் சுதந்திர தின விழா

Image
பீ.எம்.எம்.ஏ.காதர்  இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தையொட்டி மருதமுனை பறக்கத் நிறுவனம் ஏற்பாடுசெய்த சுதந்திர தின நிகழ்வூ இன்று வியாழக்கிமை(04-02-2016)காலை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.ஐ.அப்துல் பரீட் தலைமையில் மருதமுனையில் நிறுவனத்தின் முன்பாக நடைபெற்றது.இங்கு பிரதம அதிதியாக் கலந்து  கொண்டார்  இந்த நிகழ்வில் விஷேட அதிதிகளாக கல்முனை பிரதேச செயலக சிரேஷ்ட நிவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,மருதமுனை அன்நஹ்லா அறபுக் கல்லுரி அதிபர் அஷ்செய்க் ஏ.அபுஉபைதா மதனி,தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசறவியல் துறை விரிவுரையாளர் எம்.எம்.பாஸில்,சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.றபாயூதீன் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பிரதி நிதிகள் உள்ளிட்ட தமிழ்,முஸ்லிம் மக்கள் பெரும் அளவில் கலந்து கொண்டனர்.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நடை பெற்ற சுதந்திர தின வைபவம்

Image

கல்முனை மாநகர சபையில் இடம் பெற்ற சுதந்திர தின வைபவம்

Image

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசாலில் இடம் பெற்ற சுதந்திர தின வைபவம்

Image