நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஸன் சுதந்திர தின விழா
70வது சுதந்திர தினத்தை அபிமானத்துடன் கொண்டாடும் வகையில் நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஸன் நிறுவனம் ஏற்பாடு செய்த சுதந்திர தின விழா அல்-கரீம் பவுண்டேஸன் தையல் பயிற்சி நிலையத்தில் இன்று நடை பெற்றது.
அல்-கரீம் பவுண்டேஸன் தலைவர் சீ.எம்.ஹலீம் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் சமாதான புறாவும் அங்கு பறக்கவிடப்பட்டது.
70வது சுதந்திர தின நினைவாக மரக்கன்றுகளும் நட்டுவைக்கப்பட்டதுடன் தையல் பயிற்சி நிலையத்தில் பயிற்ச்சியை நிறைவு செய்த 40 யுவதிகளுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டன.
இந்த வைபவத்தில் நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய பிரதி அதிபர் திருமதி ஏ.முனாஸீர் பிரதம அதிதியாக கலந்து கொன்டு சுதந்திர தின சிறப்புரை நிகழ்த்தினார்.
அவர் அங்கு உரையாற்றுகையில் சுதந்திர தினத்திலே நாங்கள் அனைவரும் நாட்டுப்பற்றுமிக்கவர்களாக இருக்க வேண்டும். எமது தேசியக் கீதம் இசைக்கப்படுகின்ற போது தேச உணர்வு கொண்டவர்களாக பெற்றோர்கள் இருக்கின்ற போதுதான் எதிர்கால சந்ததியினர் எங்களைத் தொடர்ந்து வருகின்ற எமது பிள்ளைகளை நாட்டுப்பற்றுமிக்க பிள்ளைகளாக உருவாக்க முடியும்.
இந்த நாடு சீராக இருக்க வேண்டும் இலஞ்ச ஊழல்கள் அற்ற நாடாக இருக்க வேண்டும் , இந்த நாட்டில் மனிதர்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்பதற்காக இந்த நாட்டின் தலைவர் ஜனாதிபதி தனது நேரத்தையும் ,காலத்தையும் செலவிட்டு வருகின்றார் என்று பிரதி அதிபர் திருமதி ஏ.முனாஸீர் தொடர்ந்து கருத்து தெரிவித்தார்.
நிகழ்வில் அல் -கரீம் பவுண்டேஷன் ஆலோசகர்கள் , அங்கத்தவர்கள் உட்படபாடசாலை அதிபர்கள் , தையல் பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment