கடும்போக்கை கைவிட்டால் மஹிந்தவல்ல, எந்த மாப்பிள்ளைக்கும் மாலைகட்ட தயார்!!!
சுகைப் எம்.காஸிம் புயலடித்து ஓய்ந்த பின்னர் நிலவும் அமைதிக்கு, நாட்டின் அரசியல் திரும்பியுள்ளது.இந்தப் புயலுக்குள் எத்தனை பட்சிகள் சிக்கின, எவ்வகைப் பறவைகள் மாய்ந்து வீழ்ந்தன, எந்த மிருகங்கள் இருப்பிடமிழந்தன. இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான பொருத்தமான நேரமே இது. மேற் சொன்ன அஃறிணையை, உயர்திணையாக எடுத்துக் கொண்டு ஆராய்ச்சிக்குச் செல்வதே இக்கட்டுரையின் சுருக்கம்.தேசிய அரசியலில் ஏற்பட்ட இழுபறிக்குள் சிறுபான்மை அரசியற் கோட்பாடுகளே முதலாவதாக சிக்கிச் சிதறின. பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பங்களில், தேசிய கட்சிகளுடனுள்ள உறவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு சிறுபான்மைக் கட்சிகளும் செயற்பட்டமை பலரது அவதானத்தையும் ஈர்த்தது. சமூக அபிலாஷைகள் பாதிப்புற்றாலும் இக்கட் சிகளுடனுள்ள மரபு வழி உறவுகள் பாதிக்கப்ப டக் கூடாதென்பதிலே காய்கள் நகர்த்தப்பட்டன. இதிலிருந்த கவனம் சில தலைவர்களை ஐ.தே, கட்சியின் அடிமட்டத் தொண்டனாகத் தரமிறக் கியதையும் புயலுக்குள் துலங்கிய மின்னல்கள் காட்டின. மஹிந்த தரப்பு விசுவாசிகள் கடும் போக்கிற்குச் சார்பான சமூக உரிமைகளையும், ரணில் தரப்பு விசுவாசிகள் மிதவாதப் போ...