Posts

Showing posts from September, 2012

கல்முனை பிரதேச கலாசார விழா; 12 பிரமுகர்களுக்கு கௌரவம்!

Image
கல்முனை பிரதேச செயலக கலாசார பேரவை ஏற்பாடு செய்திருந்த விஷேட கலாசார விழா இன்று சனிக்கிழமை காலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கலாசார உத்தியோகத்தர் திருமதி வ.பற்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவ்விழாவில் ஊடகம், இலக்கியம், சமூக சேவை, விளையாட்டு, மருத்துவம் ஆகிய துறைகளில் பங்களிப்பு செய்த 12 பேர் சிறப்பு அதிதிகளாக அழைக்கப்பட்டு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். *யூ.எம்.அதீக் சோலைக்கிளி (இலக்கியம்) *எம்.எம்.ஏ.காதர் (இலக்கியம்) *எம்.எச்.எம்.முஹைதீன் (சமூக சேவை) *ஏ.எல்.இப்ராஹீம் (மருத்துவம்) *எம்.ஐ.எம்.முஸ்தபா (விளையாட்டு) *எம்.பி.அபுல் ஹசன் (இலக்கியம்) *ஏ.எம்.பி.எம்.ஹுசைன் (சமூக சேவை) *பி.எம்.எம்.ஏ.காதர் (ஊடகம்) *ஏ.ஆர்.நிஹ்மத்துல்லா  (இலக்கியம்) *யூ.எம்.இஸ்ஹாக் (ஊடகம்) *எஸ்.எல்.ஏ.அசீஸ் (ஊடகம்) *ஏ.எல்.ஏ.நாசர் (சமூக சேவை) ஆகியோரே பாராட்டி கௌரவிக்கப்பட்ட பிரமுகர்களாவர். இதன்போது ‘முனைமலர்’ எனும் சிறப்பு மலரும் வெளியிட்டு வ

சுகாதார அமைச்சராக மன்சூர்; விவசாய அமைச்சராக நஸீர் அஹமட்; வீதி அமைச்சு மீண்டும் உதுமாலெப்பைக்கு!

Image
கிழக்கு மாகாண அமைச்சர்களின் சத்தியப் பிரமான வைபவம் இன்று மதியம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம் எஸ் உதுமாலெவ்வை, சுதந்திரக் கட்சி உறுப்பினர் விமலவீர திசாநாயக்க ஆகியோர் தாம் முன்னர் வகித்த அமைச்சு பதவிகளுக்கு மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். எம் எஸ் உதுமாலெவ்வை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாண, மின்சார, நீர் வழங்கல் அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். விமலவீர தஸ்ஸநாயக்க மீண்டும் கல்வி மற்றும் காணி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அதேவேளை முஸ்லிம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சு பதவிகளுக்கு ஹாபிஸ் நஸீர் அஹமட், எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஹாபிஸ் நஸீர் அஹமட்- விவசாய, நீர்ப்பாசன, கால்நடைகள் அமைச்சராகவும் எம்.ஐ.எம். மன்சூர் – சுகாதார, விளையாட்டு, தொழில் நுட்பக் கல்வி அமைச்சராகவும்  சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அதேவேளை முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் நிதி திட்டமிடல் அமைச்சராக சத்தியப்

முஹம்மது நபியை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்துக்கு எதிராக கல்முனையில் ஹர்த்தால், ஆர்ப்பாட்டம்

முஹம்மது நபி (ஸல்) அவர்களை சித்தரிக்கும் விதத்தில் அமெரிக்கர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்   நாளை புதன் கிழமை  அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான   பிரதேசங்களில் ஹர்த்தாலும், ஆர்ப்பாட்டமும் நடை  பெறவுள்ளது 

ஜனாதிபதியின் ஆலோசகராக சந்திரகாந்தன்

Image
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத்!

Image
கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக  முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான நஜீப் ஏ. மஜீட்  நியமிக்கப்பட்டுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் 30 ஆம் திகதிக்கு முன்

Image
தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார நேற்று தெரிவித்தார். மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்ட மூன்று மாகாணங்களிலும் தேர்தல் காரணமாக விடைத்தாள் திருத் தும் பணிகள் முழுமையாக நிறைவடைய வில்லை. அவ்வாறு முழுமையடையாத விடைத்தாள்கள் அடங்கிய பக்கற்றுக்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு வரவழைத்து திருத்தும் பணிகளை முன்னெடுத்து வருகிறோம். 30 ஆம் திகதிக்கு முன்னதாக பெறுபேறுகள் வெளியிட்டு வைக்கப்படு மெனவும் அவர் கூறினார். அத்துடன் நடந்து முடிந்த பரீட்சை வினாத்தாளோ அதன் ஒரு பகுதியோ அல்லது வினாக்களோ எந்தவொரு சந் தர்ப்பத்திலும் பரீட்சைக்கு முன்னர் வெளியாகவில்லையென்பது பொலிஸ் விசாரணைகளினூடாக உறுதியாகியிருப்பதாக வும் பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக் காட்டினார். முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்குரிய பிரதேசங்களில் சி.ஐ.டி. யினர் விரிவான விசாரணைகளை நடத்திய பின்னரே இத்தீர்மானத்தை அறிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் மற்றும் சி.ஐ.டி. பணிப்பாளர் ஆகியோர் கையொப்பம் இட்டு ஒன்பது பக்க அறிக்கையொன

அம்பாறை மாவட்ட முஸ்லிம் பகுதிகளில் ஹர்தாலுக்கு அழைப்பு

இஸ்லாத்தையும், இறைத்தூதரையும் நிந்தனை செய்யும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து இன்று 18 அம்பாறை மாவட்ட முஸ்லிம் பகுதிகளில் கடை அடைப்புச் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய வாலிப அமைப்பினரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய உணர்வுகள் நம்பிக்கைகள் கொச்சைப்படுத்தப்படும் போது முஸ்லிம்கள் கோழைகளாக இருக்கமாட்டார்கள். அமெரிக்க மேற்கத்திய நாடுகளின் இஸ்லாமிய குரோதப்போக்கை வன்மையாக கண்டிக்க என்னுமொரு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை அமீர் அலிக்கு வழங்காவிடின் அரசு பாரிய விளைவை எதிர்நோக்கும்:

Image
சுபைர் முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிடின் அதன் விளைவை அரசாங்கம் எதிர்நோக்கும் என கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், "கிழக்கு மாகாண முதலமைச்சரை தெரிவு செய்யும் நடவடிக்கை தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் எமது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்க கட்சியின் பிரதான பங்காளிக் கட்சியாக இருந்து அரசாங்கத்திற்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவளித்து வருகின்றது. அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான எமது கட்சியானது அரசாங்கத்தின் கூட்டு கட்சியாக இருந்து வருவதுடன் கடந்த ஜனாதிபதி தேர்தல் உட்பட ஏனைய அனைத்து தேர்தல்களிலும் அரசாங்கத்தின் வெற்றிக்காகவும் அரசாங்கத்தின் ஸ்த்திர தன்மைக்காகவும் பாடுபட்டு அரசாங்கத்தை வலுவடைய செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டது. கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரைக்கும் அகில இலங்ககை முஸ்லிம் காங்கி

கல்முனையில் இஸ்லாமிய அடிப்படையில் ‘ஹிமாயா பீச் றிசோட்’ எனும் புதிய ஹோட்டல்

Image
கல்முனை வாடிவீட்டு வீதியில் முழு இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த ‘ஹிமாயா பீச் றிசோட்’ எனும் பெயரிலான முதலாவது ஹோட்டல் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள புதிய உறுப்பினரும் கல்முனை அல்-ஹாமியா அரபிக் கல்லுரி நிர்வாக சபைத் தலைவருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் கலந்து கொண்டார். அத்துடன் இந்நிகழ்வில் விசேட அதிதியாக கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் உட்பட ஊர்ப் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். கல்முனைப் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக இருந்து வந்த குறையான இந்த ஹோட்டல் முற்றிலும் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த உணவு வகைகள், இஸ்லாமிய சூழலுக்கு அமைவாக தங்குமிடம், அனாச்சாரங்கள் அற்ற விழாக்கள் மற்றும் நிகழ்வுகளை நடாத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த நிகழ்வுக்காண அழைப்பிதழில் போதைவஸ்து, மதுபாவனைகள் முற்றாக தடை செய்யப்பட்ட இடமாக இதனைக் குறிப்பிடப்பட்டிருந்தது. கல்முனை ஹிமாயா ட்ரவல்ஸ் உரிமையாளர் அல்-ஹாஜ் மௌலவி எம். நபார் அவர்களின் மற்றுமொரு சேவையே இந்த புதிய உதயமாகும்.

அம்பாறை பிரதேசத்தில் நாளை மின்வெட்டு

Image
அம்பாறை கிரிட் உப மின் நிலையத்தின் திருத்த வேலைகள் காரணமாக நாளை (16) ஞாயிற்றுக்கிழமை அம்பாறை, கல்முனை ஆகிய மின் பொறியியலாளர் பிரிவுகளில் மின் விநியோகம் தடைப்படுமென அம்பாறை பிராந்திய மின் பொறியியலாளர் தெரிவித்தார். அம்பாறை நகர், கெமுனுபுர, கொண்டவட்டுவான், பிறகான, நாமல் ஓயா, இங்கினியாகல, உகண, கொணாகொல்ல, இறக்காமம், அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், பாணமை, தீகவாபி, மல்வத்த, வளத்தாப்பிட்டி, சம்மாந்துறை, கல்முனை, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, பாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை, நிந்தவூர், காரைதீவு, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பெரியநீலாவணை, நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களில் மின்தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மட்டக்களப்பு மின் பொறியியலாளர் பிரதேசங்களிலும் அன்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகளுக்கான போனஸ் உறுப்பினர்கள் பெயர் அறிவிப்பு. கிழக்கிலிருந்து ஒரு தமிழர்.

Image
நடைபெற்று முடிந்து வடமத்திய, கிழகக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு கிடைத்த 6 போனஸ்  ஆசனங்களுக்கான உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 6 போனஸ் ஆசனங்கள் கிடைத்தன. ஒரு மாகாணத்திற்கு 2 ஆசனங்கள் வீதம்  குறித்த 6 ஆசனங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் தேர்தல்கள் ஆணையாளருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் அனுப்பி வைத்துள்ளார்.  அநுராதபுரம் மாவட்டத்திற்கு சுசில் குணரத்னவும் பொலன்னறுவை மாவட்டத்திற்கு ஜெயந்த மாரசிங்கவும். வடமத்திய மதகாண  சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கேகாலை மாவடடத்திலிருந்து ஆனந்த மில்லங்கொடவும், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து அநுரபிரிய நமிந்தவும், சப்ரகமுவ மாகாண சபைக்கு சுதந்திர கூட்டமைப்பின் போனஸ் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு  மகாண சபைக்கு அமபாறை மாவட்டத்திலிருந்து டி.எம்.ஜயசேனவும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து துரையப்பா நவரட்னராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அ

மு.கா வின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் நாமே ஆட்சியமைப்போம்:கெஹெலிய

Image
அரசாங்கத்தின் கதவு சிகையலங்கார நிலையத்தின் கதவைப் போன்றதாகும். அக் கதவினூடாக எவர் வேண்டுமானாலும் வரலாம்; யார் வேண்டுமானாலும் சென்றுவிடலாம். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரும் வந்துசெல்வர். இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் ௭ன்பதில் ௭வ்விதமான சந்தேகமும் இல்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றி ஆட்சியமைக்க முடியாது ௭ன்றில்லை ௭ன்று அமைச்சரவைப்பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். விருப்பு வாக்குமுறைத் தேர்தல் ௭ன்பதனால் பேரப்பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆட்சியமைப்பதாயின் யாரும் சும்மா வரமாட்டார்கள் அதற்காகக் கேட்டதை ௭ல்லாம் கொடுக்கவும் முடியாது ௭ன்றும் அவர் கூறினார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ௭ழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னதாக ஊடகவியலாளர்கள் மூன்று மாகாண சபைகளுக்குமான முதலமைச்சர்கள் யார்? கிழக்கு மாகாண சபையில் அரசாங்கம் ஆட்சியமை

முதலமைச்சர்களை தெரிவுசெய்ய குழு நியமனம்

Image
இடம்பெற்று முடிந்த மூன்று மாகாணங்களுக்கான முதலமைச்சர் நியமனங்கள், போனஸ் உறுப்பினர்கள் தொடர்பாகவும் விசேடமாக கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பது தொடர்பாகவும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்று நீண்ட நேரம் அலரி மாளிகையில் கூடி ஆராய்ந்துள்ளது. இட ம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் அமை ச்சர்களான பஷில் ராஜபக்ஷ, டலஸ் அழகப்பெரும, சுசில் பிரேம்ஜயந்த, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர் . கிழக்கு மாகாண முதலமைச்சரை தெரிவு செய்வதற்கு அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, சுசில் பிரேம ஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோரை உள்ளடக்கி குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. மேற்படி முதலமைச்சர்களை தெரிவுசெய்ய நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் கிழக்கு முதலமைச்சர் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் , அகில இலங்கை மக்கள் காங்கிரசும் தத்தமது கட்சி சார்பான நபர்களின் பெயர்களை வழங்கியுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவிக்கு ஹாபீஸ் நஸீரை சிபாரிசு செய்துள்ளது. அதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அமீர் அலியையும்

இலங்கையில் ஒரு இலட்சத்து 60,000 சிறுவர்களுக்கு பார்வைக் குறைபாடு!

Image
இலங்கையில் சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் சிறுவர்களுக்கு  பார்வைக் குறைபாடுகள் இருப்பதாக சுகாதார அமைச்சு நடாத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கண்களில் ஏற்படும் குளுகோமா, விழி வெண்படலம் உள்ளிட்ட பாதிப்புக்கள் காரணமாகவே இச்சிறுவர்கள் பார்வைக் குறைப்பாட்டு பிரச்சினைக்கு முகம் கொடுத்திருப்பதும் அந்த ஆய்வின் மூலம் கண்டறிப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் இந்நாட்டில் பார்வைக் குறைப்பாட்டுப் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ள சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கவென சுகாதார அமைச்சு விஷன் 2020 என்ற விஷேட வேலைத் திட்டமொன்றை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தின் ஊடாக இற்றைவரை சுமார் 12 ஆயிரம் பேருக்கு சத்திர சிகிச்சை மூலம் விழி வெண்படலம் அகற்றப்பட்டு அவர்களுக்கு சீரான பார்வை மீண்டும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாக இத்திட்டத்தின் தலைவரும், சுகாதார அமைச்சின் மேலதிக செயலாள ருமான டொக்டர் பாலித மஹிபால  கூறினார்.

பிள்ளையானே முதலமைச்சர்.

Image
புதிதாக அமையப்போகும் மாகாண சபையின் முதலமைச்சாராக இரண்டாவது தடவையாகவும் பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தனே நியமிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வாட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. கிழக்கின் முதலமைச்சராக தமிழர்  ஒருவரே இருக்கவேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிவிருப்பின்பேரில் பிள்ளையான எவ்வித தடங்கலும் இன்றி நியமிக்கப்படுகின்றார் என அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றது.  முஸ்லிம் முதலமைச்சர் என கூச்சலிட்ட முஸ்லிம் காங்கிரஸ்காரர் மத்தியில் இரு கபினட் அமைச்சுக்களும் 3 பிரதி அமைச்சுக்களும் மாகாண சபையில் இரு அமைச்சுக்களும் கோரியுள்ளதுடன் மாகாண சபையில் போனஸ் ஆசனம் ஒன்றையும் கோரி நிற்கின்றனர் என அவ்வட்டாரங்கள் மேலும் கூறுகின்றது.
Image
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை அமைப்பதற்கு எந்த தரப்புடன் இணைந்து கொள்வது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டம் தீர்மானம் எதுவுமின்றி கலைந்துள்ளது.. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி தொடக்கம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்று இக்கூட்டம் இன்று மாலை ஏழு மணியளவில் முடிவுக்கு வந்துள்ளது. நாளை காலை மீண்டும் ஒரு கலந்துரையாடல் இடம்பெறும் என்று அறிவிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் தவிசாளர், செயலாளர் நாயகம் உட்பட எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஏழு உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான நிசாம் காரியப்பர் ஆகியோருடன் எஸ்.எச்.ஆதம்பாவா உட்பட உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

15 முஸ்லிம் பிரதிநிதிகள் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு

Image
இதுவரையிலும் வெளியாகியுள்ள விருப்பு வாக்குகளுக்கு அமைவாக கிழக்கு மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள அம்பாறை ,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளை அவர்கள் பெற்றுள்ள விருப்பு வாக்குகளுடன்  தருகிறோம்   திருகோணமலை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா நான்கு என்ற அடிப்படையில் மொத்தமாக 08 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 07 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.  இதன் பிரகாரம் மொத்தமாக 15 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர், அதேவேளை தமிழ் பிரதிநிதிகள் மொத்தமாக 12 பேர் தெரிவாகியுள்ளனர், சிங்கள பிரதிநிதிகள் மொத்தமாக 07  பேர் தெரிவாகியுள்ளனர் (போனஸ் ஆசனங்கள் பற்றிய விபரம் இடத்தில் உள்ளடக்கப் படவில்லை) திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள். அமைச்சர் நஜீப் அப்துல் மஜீட்- 11,726 -UPFA ரம்ழான் அன்வர்- 10,904 -SLMC ஹசன் மௌலவி- 10,123-SLMC இம்ரான் மஹ்ரூப்- 10, 048-UNP மட்டகளப்புமாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள்  . அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி 21,271-UPFA பொற

அம்பாறை மாவட்ட விருப்பு வாக்குகளின் விபரம்

Image
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக முன்னாள் மாகாண அமைச்சர் விமலவீர திசாநாயக்க 31815 வாக்குகளையும் முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை 24,033 வாக்குகளையும் டி.வீரசிங்க 20,922 வாக்குகளையும் ஆரிப் சம்சுதீன் 19,680 வாக்குகளையும் ஏ.எம்.அமீர் 19,671 வாக்குகளையும் பெற்று மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர். இதேவேளை,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஆதம்பாவா தவம், 32,330, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் 22,357 வாக்குகளையும் , சம்மாந்துறை ஐ.எம்.எம். மன்சூர் 21759 வாக்குகளையும் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் 18,327 வாக்குகளையும் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆத்துடன் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கிழக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தயா கமகே 41,064 வாக்குகளையும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரதாஸ கலபதி 20,459 வாக்குகளையும் மஞ்சுளா பெர்னான்டோ 14,897 வாக்குககளையும் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  இதற்கு மேலதிகமாக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் தவராஜா கலையரசன் 12,122 வாக்குகளையும் ஐ. முருகேசு 10,812 வாக்குகளையும் பெற்று

கிழக்கில் எக்கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாது!

Image
கிழக்கு மாகாணசபையின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபை தேர்தலில் இரண்டு போனஸ் ஆசனங்கள் உட்பட அதிகூடிய 14 ஆசங்களை  ஐக்கிய மக்கள் சுதந்திரக்  கூட்டணி பெற்றுள்ளது. அம்பாறை- மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது. இதேவேளை- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.            மொத்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்  கூட்டமைப்பு  200044 வாக்குகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 193827 வாக்குகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 132917 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 74901 வாக்குகளையும் தேசிய சுதந்திர முன்னணி 9522 வாக்குகளையும் பெற்றுள்ளது

அம்பாறை மாவட்டத்தை ஐ.ம.சு.கூ கைப்பற்றியது

Image
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை   மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 92,530 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 83,658 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக்  கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 48,028 ஆசனங்களைக் கைப்பற்றி 3 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 44,749  வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. 

கிழக்கு தேர்தல் கல்முனையில் அமைதியாக நடை பெறுகிறது

Image
வாக்களிப்பிற்காக.....  

அரச தொழில் நுட்ப சேவைக்கு ஆட்சேர்ப்பு

அரச தொழில் நுட்ப சேவைக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்காக திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள் ளன. அரச தொழில் நுட்பசேவையில் 3ம் தரத்திற்கு இந்த ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதுடன் விண்ணப்ப முடிவுத் திகதி செப்டம்பர் 24ம் திகதியென பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சு தெரி வித்தது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன் திறந்த போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுவோருக்கான தகைமைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனடிப்படையில் விண்ணப்பதாரி 18-30 வயதிற்கு உட்பட்டவராகவும் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம் உட்பட 6 பாடங்களிலும் க. பொ. த. உயர் தரத்தில் மூன்று பாடங்களில் சித்தியெய்தியவராகவும் இருக்க வேண்டும். அத்துடன் மொரட்டுவ அல்லது அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில் நுட்பத்தில் டிப்ளோமாப் பட்டம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

மறுஅறிவித்தல் வரை தற்போது அமுலில் உள்ள மின்சாரத் தடை இடைநிறுத்தம்

Image
மறுஅறிவித்தல் வரை தற்போதுள்ள மின்சாரத் தடை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் நாளை மறுதினமும் மின்தடை ஏற்படாது. அதற்குமேல் மின்சாரம் துண்டிக்கவேண்டிய தேவையேற்பட்டால், அறிவிக்கப்பட்ட பின்னரே மின்சாரம் துண்டிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.