இலங்கையில் ஒரு இலட்சத்து 60,000 சிறுவர்களுக்கு பார்வைக் குறைபாடு!
இலங்கையில் சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் சிறுவர்களுக்கு பார்வைக் குறைபாடுகள் இருப்பதாக சுகாதார அமைச்சு நடாத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கண்களில் ஏற்படும் குளுகோமா, விழி வெண்படலம் உள்ளிட்ட பாதிப்புக்கள் காரணமாகவே இச்சிறுவர்கள் பார்வைக் குறைப்பாட்டு பிரச்சினைக்கு முகம் கொடுத்திருப்பதும் அந்த ஆய்வின் மூலம் கண்டறிப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான நிலையில் இந்நாட்டில் பார்வைக் குறைப்பாட்டுப் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ள சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கவென சுகாதார அமைச்சு விஷன் 2020 என்ற விஷேட வேலைத் திட்டமொன்றை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.
இத்திட்டத்தின் ஊடாக இற்றைவரை சுமார் 12 ஆயிரம் பேருக்கு சத்திர சிகிச்சை மூலம் விழி வெண்படலம் அகற்றப்பட்டு அவர்களுக்கு சீரான பார்வை மீண்டும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாக இத்திட்டத்தின் தலைவரும், சுகாதார அமைச்சின் மேலதிக செயலாள ருமான டொக்டர் பாலித மஹிபால கூறினார்.
Comments
Post a Comment