Posts

Showing posts with the label கல்வி

கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் ஜலீல் ஓய்வு பதில் பணிப்பாளராக புவனேந்திரன் கடமை ஏற்பு

Image
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் தற்காலிக பதில் கல்விப்பணிப்பாளராக  பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் இன்று  (16) கடமை பொறுப்பேற்றார் . வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய எம்.எஸ்.அப்துல் ஜலீல் நேற்று (15) ஓய்வு பெற்றதையடுத்து நிரந்தர வலயக்கல்விப்பணிப்பாளர் நியமிக்கும் வரை பதில் பணிப்பாளராக செயற்படும் வண்ணம்  பொறுப்புக்கள் கடமைகளை ஓய்வு பெற்ற  முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல்  பிரதிக்கல்வி பணிப்பாளர்   எஸ்.புவனேந்திரனிடம் கையளித்தார் . கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப்  பணிப்பாளராக  கடமையாற்றிய  காரைதீவை சேர்ந்த  எஸ்.புவனேந்திரன் கடந்த காலத்தில் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் பிரதிக்கல்விப்பணிப்பாளராக கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வியற்கல்லூரி மாணவ ஆசிரியர்கள் தொற்று நோய் பாதிப்புக்குள்ளாகி இருந்தால் அறிவிக்குமாறு கோருகிறார் யாழ் கல்வியற்கல்லூரி பீடாதிபதி

Image
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரிரியில்  கல்வி கற்கும் மாணவ ஆசிரியர்கள்  தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால்  தெரியப்படுத்துமாறு கோருகிறார்  யாழ்ப்பாணம் கல்வியற்கல்லூரி பீடாதிபதி  சுப்பிரமணியம் பரமானந்தம். தற்போதைய அசாதாரண சூழ்நிலையில்  தோற்று நோய்  காரணமாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரிரியில்  கல்வி கற்கும் மாணவ ஆசிரியர்கள்,அவர்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தங்களது பாடநெறிப் பொறுப்பு விரிவுரையாளர்களூடாகவோ அல்லது ஏனைய   விரிவுரையாளர்களினூடாகவோ  அல்லது நேரடியாகவோ என்னுடன் தொடர்பு கொள்ளு மாறு  யாழ்ப்பாணம் கல்வியற்கல்லூரி பீடாதிபதி  சுப்பிரமணியம் பரமானந்தம்  அறிவித்துள்ளார். மேலும்  உங்களது சக மாணவர்கள்  அல்லது அவர்களின் குடும்பம்  பாதிப்புக்குள்ளாகி இருந்தால்  அது தொடர்பாகவும் ஏனைய  மாணவ ஆசிரியர்களும் தகவலை வழங்கலாமென பீடாதிபதி  சுப்பிரமணியம் பரமானந்தம் அறிவித்தல் விடுத்துள்ளார்  

மத்திய வங்கி, வணிக வங்கிகள், காப்புறுதி , திறைசேரி அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு

Image
மத்திய வங்கி, வணிக வங்கிகள், காப்புறுதி சேவைகள் மற்றும் திறைசேரி ஆகியவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அத்தியாவசிய சேவைகளாக அறிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சுகாதாரம், பாதுகாப்பு, பொலிஸ், பொருட்கள் விநியோகம், சுங்கம், மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவை பிற அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊரடங்கு உத்தரவின் போது, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், அவற்றின் கிளைகள் மற்றும் திறைசேரியை குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் திறந்து வைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டீ.லக்ஷமனுக்கு இன்று எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அதேபோல், ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர், பிரதான பணியாளர்கள் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவை சேவைத் தேவையின் படி ஒவ்வொரு நாளும் முழுநேர சேவையில் ஈடுபட்டுள்ளதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாளை நள்ளிரவுடன் மேலதிக வகுப்புக்கள் நடத்த தடை

Image
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் - டியுசன் வகுப்புகள், மீட்டல் பயிற்சிகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் அனைத்தும் நாளை நள்ளிரவுடன் தடைசெய்யப்படுகின்றன. இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளார். இதுதொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் பொலிஸாருக்கோ அல்லது 1911 எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பை ஏற்படுத்தி அறிவிக்கமுடியும். க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் இரண்டாம் திகதி நாடாளவிய ரீதியில் நான்காயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆரம்பமாகிறது. இம்முறை ஏழு இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இந்த பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

Image
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் (15) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைவாக இவ்வாறு பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (14) பாடசாலை நேரத்தின் பின்னர் தேர்தல் நடவடிக்கைகளுக்காக கிராம உத்தியோகத்தர்களுக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கல்வியியற் கல்லூரிக்கு தெரிவானோருக்கு நற்பிட்டிமுனையில் பாராட்டு

Image
நற்பிட்டிமுனை மண்ணில்  கல்வி மேம்பாட்டுக்கு உதவிவரும் அல் -கரீம்  பவுண்டேசன்  அமைப்பு  முதற்தடவையாக  நற்பிட்டிமுனையில் கல்விக்கல்லூரிக்கு  தெரிவான 05 ஆசிரிய பயிற்சி மாணவர்களை  கெளரவிக்கும் நிகழ்வு  கல்முனை ஜெயா ஹோட்டலில் நடை பெற்றது . நற்பிட்டிமுனையில்  தரம் ஐந்து புலமைப்பரீட்சை ,சாதாரண மற்றும் உயர் தரப்பரீட்சைகளிலிலும் பல்கலைக்கழகம் செல்வோரையும்,உயர்பதவி பெறுவோரையும்  பாராட்டி  கெளரவிக்கின்ற  நிகழ்வை தொடர்ந்து இவ்வருடம் முதல் கல்விக்கல்லூரிக்கு  தெரிவானவர்களையும்  பாராட்டுகின்ற நிகழ்வு இன்று 12.10.2019 சனிக்கிழமை  இடம் பெற்றன அல் -கரீம் பவுண்டேசன்  அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் இடம் பெற்ற  இந்த பாராட்டு விழாவில்  நற்பிட்டிமுனையை சேர்ந்த  05 மாணவர்கள் பாராட்டப்பட்டனர்  எம்.எஸ்.எம்.சஜீர் (I C T  -ஆங்கில மொழி ) பஸ்துன்ரட்ட  கல்லூரி  ,களுத்துறை. எச்.எம்.எம்.சஜான் ( கணிதம் - தமிழ் மொழி ) வவுனியா கல்லூரி  எம்.ஐ.பார்ஹத் பார்ஹான ( கணிதம்- ஆங்கில மொழி ) யாழ்ப்பாணம்  கோப்பாய் கல்லூரி  ஏ.சாஜிதா (உணவு தொழில் நுட்பம் -தமிழ் மொழி) தர்காநகர்  கல்லூரி  எம்.என்.றுஸ்

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது

Image
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் தொண்டராசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவை மூன்றாம் வகுப்பு இரண்டாம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 25 ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நடைபெறவிருந்த நேர்முகப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் இதன்போது தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் நேர்முகப் பரீட்சைக்கு கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள் மறு அறிவித்தல் வரையும் இதனை கருத்தில் கொள்ளுமாறும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ. கே.ஜி. முத்து பண்டா மேலும் குறிப்பிட்டார். அத்துடன் கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முகப் பரீட்சைக்கான திகதி மீண்டும் அறிவிக்கப்படும் எனவும் தொண்டர் ஆசிரியர்கள் கவலைப்பட தேவையில்லை எனவும் மேலும் அவர் கூறினார்.

நற்பிட்டிமுனை நபீஸா ஆசிரியை ஓய்வு !! அல் -கரீம் பவுண்டேஷன் பாராட்டு !!!

Image
35 வருடம் ஆசிரியத் தொழிலை  புனிதமாக  நிறைவேற்றி  ஓய்வு பெற்ற  நற்பிட்டிமுனை ஆசிரியை  திருமதி   எஸ்.என்.எச்.முகம்மட் (Nafeesa Teacher) அவர்களின் சேவையை பாராட்டி நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன்  ஏற்பாட்டில் சேவை நலன் பாராட்டு விழாவும் ,கல்வி சமூக சேவைக்கான தேசாபிமானி விருது வழங்கும் விழாவும்  ஆசிரியை நபீசாவின்  இல்லத்தில் இடம் பெற்றது . கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அல் -கரீம் பவுண்டேஷன்  ஸ்தாபகருமான  சி.எம். முபீத்தின்  ஏற்பாட்டில் அல் -கரீம் பவுண்டேஷன்  தலைவர் சி.எம்.ஹலீம்  தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில் அல் -கரீம் பவுண்டேஷன்  செயலாளர்  யு.எல்.எம்.பாயிஸ் , ஆலோசகரும் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகாவித்தியாலய  ஆரம்பப் பிரிவு அதிபருமான திருமதி ஏ.முனாஸிர் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் நபீஸா ஆசிரியையின் கணவர் ஹயாத் முகம்மட் அவரது புதல்வர்கள்  அவரது குடும்பத்தினர்கள்  கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி  வாழ்த்துப்பா வாசித்து  வாழ்த்து மடல் வழங்கி  தேசாபிமான பட்டம் சூட்டி ,நினைவு பரிசு வழங்கி வைத்தனர் .

மீண்டும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரீ.எம்.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Image
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரீ.அப்துல் நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த நியம ன ம் மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ்வினால் இன்று வியாழக்கிழமை வழங்க ப்பட்டுள்ளது. இதுவரை காலமும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயற்பட எம்.ஐ.எம்.மன்சூர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.  

இன்று ஆளுநர் செயலகத்தில் பட்டதாரி (Bachelor of Education) ஆசிரியர் நிரந்தர நியமனம் ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் வழங்கி வைத்தார்

Image
இன்று ஆளுநர் செயலகத்தில் பட்டதாரி (Bachelor of Education) ஆசிரியர் நிரந்தர நியமனம் ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் வழங்கி வைத்தார் . அன்மையில் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றி நியமனம் வழங்கப்படாதிருந்த  நிலையில் தற்போதைய ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் விஷேட பணிப்புரைக்கு அமைய மீண்டும் தகுதி அடிப்படையில் சுமார் 19 B.Ed பட்டதாரிகளுக்கு இன்று ஆளுநர் செயலகத்தில் ஆசிரியர்  நிரந்தர நியமன   கடிதங்களை கிழக்கு ஆளுநர் வழங்கி  வைத்தார்  இந்த 19 நியமனத்தில் 18 தமிழ் பட்டதாரிகளும் ஒரு சிங்கள பட்டதாரியும் உள்வாங்கப்பட்டாதோடு இந்த நியமனங்கள் உரியவர்களின் மாவட்டத்தில் வழங்கப்பட்டதும்  குறிப்பிடத்தக்கது.

நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் போதைக்கு எதிரான நடவடிக்கை

Image
ஜனாதிபதியின் விசேட திடத்தின் கீழ் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட  போதை ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் நிகழ்வான இன்று  வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் விழிப்புணர்வு செயலமர்வு இடம் பெற்றது லாபிர் வித்தியாலய அதிபர் வை.எல்.பஷீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலையில் நடைபெற்ற போதை ஒழிப்பு திட்டத்தின்  நடை பெற்ற  நிகழ்வில்  ஊடகவியலாளர்களுக்கு  விழிப்புணர்வு பிரசுரங்கள்  வழங்கப்பட்டன . அதிபர் உட்பட பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் . நேற்று வியாழக்கிழமை அரசியல் பிரமுகர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது  

நற்பிட்டிமுனை கமு/லாபிர் வித்தியாலயத்தில் நடை பெற்ற போதைப்பொருள் தடுப்பு வாரத் தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்,

Image

வெள்ளத்தில் மூழ்கும் கல்முனை மாமாங்க வித்தியாலயத்துக்கு விடிவு

Image
வெள்ளத்தில் மூழ்கும் கல்முனை மாமாங்க வித்தியாலயத்துக்கு விடிவு கிடைத்துள்ளது . கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயம் கடந்த வாரம் வெள்ளத்தில் மூழ்கி கிடந்தது . இந்த செய்தி கல்முனை நியூஸ் இணையத்தளத்தில்  வெளிக்கொண்டுவரப்பட்டது . இந்த செய்திக்கு பலன் கிடைத்துள்ளது . கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்லூரி அதிபர் ஆகியோர் எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக  அம்பாரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பாடசாலையில் ஏற்படும் வெள்ளத்தை தவிர்க்க வடிகால் அமைப்பதற்கு 2.0மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளார் . பாராளுமன்ற உறுப்பினருக்கும் ,வலயக்கல்விப்பணிப்பாளருக்கும் கல்லூரி அதிபருக்கும் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கும் இந்த செய்தியை ஊடகங்களுக்கு வெளிக்கொண்டுவந்த  கல்முனை நியூஸ் இணையத்தளத்துக்கும் பெற்றோர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர் 

நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் இடம் பெற்ற தரம் -1 வித்தியாரம்ப விழா அதிபர் வை.எல்.பஷீர் தலைமையில் நடை பெற்றது .

Image

கல்முனை மாமாங்க வித்தியாலயத்தில் வெள்ளம் மாணவர்கள் சிரமம்

Image
கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையினால் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயம் முற்றாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது . இதனால் இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கும்  கல்வி பயில்வதற்கு சிரமப்படுகின்றனர் . சுனாமி அனர்த்தத்தின் போது  முற்றாக அழிந்த இப்பாடசாலை புதிய கட்டிடங்களுடன்  தற்போது இயங்குகின்றது. மழை  ஓய்ந்திருந்த போதிலும் வெள்ளநீர் வடிந்தோட  வடிகால் வசதி இல்லாமையினால் பாடசாலை வளாகம் முழுவதும் நீர் தேங்கி காணப்படுகின்றது . இதன் காரணமாக பாடசாலைக்கு மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. தொடர்ந்து நீர் தேங்கிக் காணப்படுவதால் பாடசாலை சூழலில் டெங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் நோய் பரவும் சந்தர்ப்பமும் அதிகம் காணப்படுகிறது. வெள்ள நீர் தேங்கியுள்ள இப்பாடசாலையின்பால் கல்முனை மாநகர சபை ,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,கல்முனை வலயக்கல்வி அலுவலகம்  கவனம் செலுத்த வேண்டிய அவசிய தேவை ஏற்பட்டுள்ளது . கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ,சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் வலயக்கல்வி  பண

நற்பிட்டிமுனை அல் -அக்ஸாவை அழகுபடுத்தும் சிரமதானம்

Image
நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக பதவியேற்றுள்ள பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் முதல் நடவடிக்கையாக  பாடசாலையை அழகு படுத்தும் சிரமதானப்பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்லூரியின் பிரதி அதிபர் வீ.எம்.ஸம்ஸம் தலைமையில் பழைய மாணவர் சங்க செயலாளர் சி.எம்.ஹலீம் நெறிப்படுத்தலில் உறுப்பினர்களால்  இன்று (15) இந்த சிரமதானப்பணி நடை பெற்றது