கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் தொண்டராசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவை மூன்றாம் வகுப்பு இரண்டாம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 25 ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவிருந்தது.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நடைபெறவிருந்த நேர்முகப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் நேர்முகப் பரீட்சைக்கு கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள் மறு அறிவித்தல் வரையும் இதனை கருத்தில் கொள்ளுமாறும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ. கே.ஜி. முத்து பண்டா மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முகப் பரீட்சைக்கான திகதி மீண்டும் அறிவிக்கப்படும் எனவும் தொண்டர் ஆசிரியர்கள் கவலைப்பட தேவையில்லை எனவும் மேலும் அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்