Posts

Showing posts from September, 2015

"பிள்ளைகளை உயிர் போல் காப்போம்" கல்முனையில் விழிப்புணர்வு ஊர்வலம்

Image
பிள்ளைகளை உயிர் போல் காப்போம் , உங்கள் பிள்ளை பாதுகாப்பானவரா ? என்ற கருப் பொருளைக் கொண்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின்  சிறுவர் மற்றும் பெண்கள் செயற்குழு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் , ஸ்ரீ லங்கா இளைஞர் கழக  சம்மேளனத்துடன்  இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலமும் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்வும் இன்றுகாலை கல்முனை பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப் பட்டது. கல்முனை பிரதேச செயலாளர்  எம்  .எச்.முகம்மது கனி  தலைமையில் இடம் பெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் பிரதேச செயலக கணக்காளர் எம்.எம்.எம்.ஹுசைனுதீன் ,திவிநெகும தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் உட்பட  பிரதேச செயலக அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமான இவ்வூர்வலம் கல்முனை பொது சந்தையை சென்றடைந்து அங்கு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு நகர் ஊடாக ஊர்வலமாக செயலகத்தை சென்றடைந்தது .

பொத்துவில் காணிகளை விடுவிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை

Image
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்கும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ.வணிகசிங்கவுக்குமிடையேயான சந்திப்பு நேற்று (28) திங்கட்கிழமை அம்பாறை கச்சேரியில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது பிரதி அமைச்சர் ஹரீஸ் மருதமுனையிலுள்ள மோட்டுவட்டை சுனாமி வீட்டுத்திட்டத்திலுள்ள 81 வீடுகளை பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்கு உடன் வழங்குவதற்கு முறையான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபரைப் கேட்டுக் கொண்டார்.  மேலும் பொத்துவில் விவசாயிகளின் கரண்கோ காணியினை செய்கை பண்ணுவதற்கு விடுவிப்பது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்;;டதுடன் இவ்விடயம் சம்பந்தமாக அரசாங்க அதிபர் தலைமையில் பொத்துவில், லகுகல பிரதேச செயலாளர்கள் மற்றும் வனவள அதிகாரிகளை அழைத்து பேசிய பின்னர் இக்காணிகளை வழங்குவது சம்பந்தமாக இறுதி முடிவுக்கு வருவது என தீர்மானிக்கப்பட்டது.

கல்முனை கல்வி வலயத்தில் மூன்று அதிபர்களுக்கு பிரதீபா பிரபா விருது .

Image
கல்முனை கல்வி வலயத்தில் இவ்வருடம் பிரதீபா பிரபா விருது பெறுவதற்கு 03 அதிபர்களும் 09  ஆசிரியர்களும் தெரிவு செய்யப் பட்டுள்ளனர் . கல்முனை உவெஸ்லி கல்லூரி அதிபர் வே.பிரபாகரன், பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய அதிபர் ஜே.டேவிட் , மாளிகைக்காடு  அல்-ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நளீர் ஆகியோரே தெரிவு செய்யப் பட்ட அதிபர்களாவர் . இவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் சர்வதேச ஆசிரியர் தினமான ஒக்டோபர்  06 பண்டார நாயக்க  ஞாபகார்த்த  சர்வதேச  மாநாட்டு மண்டபத்தில் நடை பெறும் வைபவத்தில் வழங்கப் படவுள்ளது .  இவ்வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் . 

பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் முதலாவது அபிவிருத்திப் பணியை கற்ற பாடசாலையில் இருந்து ஆரம்பித்தார்

Image
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் பழைய மாணவனும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின்  20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில்  நிர்மாணிக்கப் பட்ட நவீன நுழைவாயில் நேற்று  திங்கட் கிழமை  திறந்து வைக்கப் பட்டது. கல்லூரியின் முதல்வர் அருட் தந்தை பிறைனர் செல்லர்  தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் விளையாட்டு  துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நுழை வாயிலை திறந்து வைத்தார்  இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண  கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் விசேட அதிதியாகவும் , கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் கௌரவ அதிதியாகவும்  மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வே.மயில் வாகனம்,பீ.எம்.வை.அரபாத், ஆகியோரும்     கல்முனை தமிழ் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் பீ.ஜெகநாதன், முன்னாள் கல்லூரி முதல்வர் அருட் சகோதரர் ஸ்டீவன் மத்தேயு ,பொறியியலாளர்களான பீ.ஹென்றி அமல்ராஜ்,ஜி.அருண் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும்  கலந்து கொள்ளவுள்ளனர். நிகழ்வில்  அதிதிகள் கௌரவிப்பும் ,நினைவு சின்னம் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது

கல்முனை பிரதேச விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையில் கலந்துரையாடல்

Image
( எஸ்.எம்.எம்.றம்ஸான்) அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்திலுள்ள கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, பொத்துவில் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள விளையாட்டு மைதானங்களை முதற்கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மேற்கொண்டு வருகின்றார். இதற்கமைய கல்முனை சந்தாங்கேணி, நற்பிட்டிமுனை, மருதமுனை மசூர் மௌலானா,சாய்ந்தமருதது,சம்மாந்து றை,அட்டாளைச்சேனை,பாலமுனை, ஒலுவில் மற்றும் பொத்துவில் விளையாட்டு மைதானங்கள் சகல வசதிகளுடன் கூடிய மைதானங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடல்கள் நேற்று சனிக்கிழமை(26) குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளில் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றன. இக்கூட்டங்களில்  விளையாட்டுத்துறை அமைச்சின் பொறியியலாளர் தம்மிக ரணசிங்க, குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர். இதேவேளை அபிவிருத்தி செய்யப்படவுள்ள ம

விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் ஹரீசினால் நிர்மாணிக்கப் பட்ட நுழைவாயில் திறப்பு விழா

Image
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப் பட்ட நுழை வாயில் நாளை (28) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப் படவுள்ளது . கல்லூரியின் பழைய மாணவனும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின்  20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில்  நிர்மாணிக்கப் பட்ட நவீன நுழைவாயில் நாளை திங்கட் கிழமை காலை10.00 மணிக்கு திறந்து வைக்கப் படவுள்ளது . கல்லூரியின் முதல்வர் அருட் தந்தை பிறைனர் செல்லர்  தலைமையில் இடம் பெறும் வைபவத்தில் விளையாட்டு  துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நுழை வாயிலை திறந்து வைக்கவுள்ளார் . இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண  கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் விசேட அதிதியாகவும் , கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் கௌரவ அதிதியாகவும்  மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வே.மயில் வாகனம்,எஸ்.எல்.ஏ.ரஹீம்,பீ.எம்.வை.அரபாத்,ஏ.எல்.எம்.முக்தார்  ஆகியோரும்  முன்னாள் கல்முனை பிரதேச செயலாளர் மங்கள விக்ரமாராட்சி, கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் ,உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரே.மோகனகுமார்  ஆகியோர்

முஸ்லிம் அரசியலின் தலைமைத்துவம் மீண்டும் கல்முனை மண்ணில் உதயமாகும் சாத்தியம்

Image
இலங்கையில் 20இலட்சம்முஸ்லிம்கள்வாழுகின்றார்கள்.இவர்களுள் மூன்றில் ஒருபகுதியினர் கிழக்கிலும் மூன்றில் இரண்டு பகுதியினர் கிழக்கிற்கு வெளியிலும் வாழுகின்றார்கள் . முஸ்லிம்கட்சி அரசியலைபொறுத்தவரை கிழக்கிற்கு வெளியில் வாழுகின்ற மூன்றில்இரண்டு பங்கு முஸ்லிம்களில் ஒருசிறிய பகுதியினரைத்தவிர பெரும்பான்மையானவர்கள் அதனை அங்கீகரிக்கவில்லை. அவர்கள் தேசியஅரசியலில் ஐக்கியதேசியகட்சி அல்லது ஸ்ரீ.ல.சு.கட்சியைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள் என்று  சம்மாந்துறையை சேர்ந்த கல்வியலாளர் ஏ.ஆதம் பாவா அறிக்கை யொன்றை வெளியிட்டுள்ளார் . அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது  இந்த விடயம் தொடர்பாக  மறுவார்த்தையில் கூறுவதானால்முஸ்லிம்கட்சிஅரசியல்கிழக்கில்தான் உயிர்வாழுகின்றது. கிழக்கில் இருந்து உதித்ததலைமைதான் முஸ்லிம்கட்சி அரசியலை நாட்டிற்கு அறிமுகப்படுத்திக்காட்டியது. அத்தலைமைமறைந்த போதும் முஸ்லிம்கட்சி அரசியலின் முக்கியத்துவம் கிழக்கில் மறைந்துவிடவில்லை. கிழக்கைப்பொறுத்தவரை எங்கிருந்து  தலைமைத்துவம் வருவது என்பதை ஒருபொருட்டாக கருதுவதில்லை. காரணம் தலைமைத்துவம்எங்கிருந்து வருகின்றது என்பதை

பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு வைபவம்

Image
(யு.எம்.இஸ்ஹாக் ) கிழக்கில் வரலாற்று சிறப்புமிக்க  பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு வைபவம் நேற்று வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணிக்கு இடம் பெற்றது. மகாபாரதக் கதையினை நினைவு கூரும் முகமாக 18 தினங்கள் நடை பெறும் இவ் ஆலய உற்சவம் கடந்த 8ஆம் திகதி திருக்கதவு திறத்தல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது. இவ் ஆலயத்தில் தருமர்,வீமர்,அருச்சுனன் நகுலன், சகாதேவன்,திரௌபதை,கண்ணன் என பரம்பரை வழிவந்த  தலைமுறையினர்  18 தினங்கள் கட்டுக்கு நின்று பக்குவமாய்  விரதம் இருந்து  இத் தீ மிதிப்பில்  ஈடு படுவர். மகாபாரத இதிகாசத்தில் இடம் பெற்ற  பாண்டவர்கள் வனவாசம் செல்லல், அருச்சுனன் பாசுபதம் பெறவேண்டி  தவம் செய்து தவநிலைக் காட்சி  அரவாணைப் பலி கொடுத்தல்  வைகுந்தம்  செல்வதைக் குறிக்கும்  வகையில் இங்கு சிகரமாய் தீ மிதிப்பு வைபவம் இடம் பெற்று வருகின்றது. 18 தினங்கள் ஆலயத்தில் தங்கி நின்று  பக்குவமாய் விரதம் அனுஸ்டித்து அம்மன் அருள் பெறுகின்றவர்கள் மாத்திரமே இங்கு தீ மிதிக்க அனுமதிக்கப் படுவர். இந்த வரையறைகளுடன் தீ மிதிப்பு வைபவம் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ பக்தி பரசவ

மக்காவில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை!முஸ்லிம் சமய மத விவகார அமைச்சர் அப்துல் ஹலீம்

Image
சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரின் மினா பிரதேசத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் இலங்கையர்கள் எவருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என முஸ்லிம் சமய  மத விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சவூதி அரேபிய அதிகாரிகளுடன் தொடர்ந்தும் தொடர்பு கொண்டு தகவல்களை சேகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். சம்பவத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். புனித மக்கா நகருக்கு அருகில் செய்தானுக்கு  கல்லெறியும் மினாவில் சன நெரிசலில் சிக்கி சுமார் 710 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

புனித மக்காவில் சன நெரிசல் 220 பேருக்கு மேல் வபாத்

Image
புனித மக்கமா நகரில் ஹஜ் கடமையின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட ஹஜ்ஜாஜிகள் 220 பேருக்கு மேல் சன நெரிசல் காரணமாக வபாத்தாகியுள்ளதாகவும் 500 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன... எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் அவன் கூறியிருக்கும் சிறந்த வாயிலின் மூலம் சுவர்க்கம் நுழைய பிரார்த்திப்போம்...  பிந்திய செய்தி மரணம் 310 ஐ தாண்டியுள்ளது 400 பேர் காயம் அடைந்துள்ளனர்