பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு வைபவம்

(யு.எம்.இஸ்ஹாக் )
கிழக்கில் வரலாற்று சிறப்புமிக்க  பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு வைபவம் நேற்று வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணிக்கு இடம் பெற்றது.

மகாபாரதக் கதையினை நினைவு கூரும் முகமாக 18 தினங்கள் நடை பெறும் இவ் ஆலய உற்சவம் கடந்த 8ஆம் திகதி திருக்கதவு திறத்தல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.

இவ் ஆலயத்தில் தருமர்,வீமர்,அருச்சுனன் நகுலன், சகாதேவன்,திரௌபதை,கண்ணன் என பரம்பரை வழிவந்த  தலைமுறையினர்  18 தினங்கள் கட்டுக்கு நின்று பக்குவமாய்  விரதம் இருந்து  இத் தீ மிதிப்பில்  ஈடு படுவர்.

மகாபாரத இதிகாசத்தில் இடம் பெற்ற  பாண்டவர்கள் வனவாசம் செல்லல், அருச்சுனன் பாசுபதம் பெறவேண்டி  தவம் செய்து தவநிலைக் காட்சி  அரவாணைப் பலி கொடுத்தல்  வைகுந்தம்  செல்வதைக் குறிக்கும்  வகையில் இங்கு சிகரமாய் தீ மிதிப்பு வைபவம் இடம் பெற்று வருகின்றது.

18 தினங்கள் ஆலயத்தில் தங்கி நின்று  பக்குவமாய் விரதம் அனுஸ்டித்து அம்மன் அருள் பெறுகின்றவர்கள் மாத்திரமே இங்கு தீ மிதிக்க அனுமதிக்கப் படுவர். இந்த வரையறைகளுடன் தீ மிதிப்பு வைபவம் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ பக்தி பரசவத்துடன் நிறைவு பெற்றது.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் உட்பட பிரதேச செயலாளர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்












Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி