Posts

Showing posts from March, 2016

எமது மனச்சாட்சியுடன் நாங்கள் முரண்படவில்லையென்றால் நம்மில் சமாதானம் நிலைத்திருக்கும்

Image
கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் (பி.எம்.எம்.ஏ.காதர்,யு.எம்.இஸ்ஹாக் ) ஒவ்வொரு மனித மனங்களிலும்  முரண்பாடுகள் இல்லையென்றால் சமாதானம் தானாக வந்து விடும் எமது மனச்சாட்சியுடன் நாங்கள் முரண்படவில்லையென்றால் நம்மில் சமாதானம் நிலைத்திருக்கும் என கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார். இலங்கை சமாதானக் கற்கைகள் நிலையத்தினால் மருதமுனைனையைச் சேர்ந்த எம்.ஐ.ஏ.பரீட்(பறகத் டெக்ஸ்)ஏ.அப்துல் ஹமீட்(தோழர் இஸ்மாயில்)ஆகியோர் சமூக சேவையின் ஊடாக சமாதானத்திற்குப் பங்களிப்புச் செய்தமைக்காக “சமாதான தூதுவர்” விருது வழங்கிய நிகழ்வு  செவ்வாய்க்கிழமை(29-03-2016) இரவு  மருதமுனையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை சமாதானக் கற்கைகள் நிலையத்தின் பிரதம நிறைவேற்றும் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ்.தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விஷேட அதிதியாக அட்டாளைச்சேனை  ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் அஷ்செய்க் எப்.எம்.அகமதுல் அன்சார் மௌலானாவும் கலந்து கொண்டார். மேலும் அதிதிகளாக கல்முனை பிரதேச செயலக

மூஸா கண்ட சாமிரியும், முஸ்லிம் காங்கிரஸ் கண்ட ஹக்கீமும்.

Image
மூஸாவின் அல்லாஹ்வைக் காண வேண்டும் என்பதற்காக பிர்அவ்ன் தன்னைத் தானே கடவுளாக்கிக் கொண்ட எகிப்தில் பிரமிட்டுக்களைக் கட்டினான். இறை கட்டளைப்படி அந்த அற்பன் மூஸாவைப் பின் தொடர கடலில் மூழ்கடிக்கப்பட்டான்.அல்ஹம்துலி ல்லாஹ் ஆணவம் அழிந்தது. எல்லாவற்றையும் இனிதே முடித்த நபி மூஸா இறைவனின் தரிசனத்தைக் காண தூர்சினா மலையடிவாரத்தைச் சென்றடைந்தார். அசரீயாக ஒரு குரல், மூஸாவே என்ன அவசரம்| என் இறைவனைக் காண வேண்டும் என்ற ஆவல்' என்றார் மூஸா. நீர் இங்கே வந்து விட்டாய் உன் சமூகத்தார் காளைக் கன்று ஒன்றை இதுதான் மூஸாவின் கடவுள் என வழிபடுகின்றனரே என்று இறைவன் கூற நபி மூஸா கடுங்கோபத்துடன் மீண்டும் திரும்பி வருகின்றார். அவரின் தம்பி நபி ஹாறூனின் தலையைப் பிடித்து இழுத்து நடந்தது என்ன என்று கேட்கின்றார். என் தாயின் மகனே! என் மீது கோபம் கொள்ளாதே, நான் எவ்வளவோ சொல்லியும் சாமிரிதான் இந்த காரியத்தைச் செய்தான் என்றார். மூஸா சாமிரியைத் தேடிச் சென்றார். சாமிரியே உன் காரியம் என்ன என்று கேட்டார். நீங்கள் போனதன் பின் பிர்அவ்னின் பொக்கிஷங்கள், ஆபரணங்கள் சிலதை எடுத்து மூட்டப்பட்ட தீயில் தூத

சத்திர சிகிச்சை நிபுணர் Dr.சமீம் வருகையால் மீண்டும் பொலிவுறும் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலை

Image
(யு.எம்.இஸ்ஹாக்)  அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் கடந்த வருடம் கிழக்கு மாகாண சுகாதார, அமைச்சராக பதவி வகித்த போது ஒதுக்கப்பட்ட நிதி மூலம் நிர்மாணிக்கப்பட்ட மற்றும் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பின்வரும் கட்டிடங்கள் திறந் து வைக்கப்படவுள்ளது. 01. வெளி நோயாளர் பிரிவுக்கட்டிடம்   02. மருந்துக் களஞ்சியம்   03. இயன் மருத்துவ அலகு   04. தாதியர் விடுதிக் கட்டிடம்   05. மூடிய நடைபாதை   06. அம்பியுலன்ஸ் வண்டித் தரிப்பிடமும், சாரதி விடுதியும் இதற்கு மேலதிகமாக கடந்த வருடம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின்  விடா முயற்சினால் மத்திய சுகாதார அமைச்சு நிதி மூலம் 400 இலட்சம் பெறுமதியில் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்வரும் மருத்துவ உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 01. Endoscope   02. Laparoscope   03. Colonoscope   04. X - Ray - CR System   05. Modern Dental Chair " எழுச்சித் தருணங்கள்" என்ற இரு வைபவங்களும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற

எப்.ஏ. கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டித்தொடரில் கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம் 3 : 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி

Image
அகில இலங்கை உதைபந்தாட்டச்  சங்கம் தேசிய ரீதியில் பதிவு செய்யப்பட்ட உதைபந்தாட்டக் கழகங்களுக்கிடையே நடாத்திவரும்  எப்.ஏ. கிண்ண  உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டித்தொடரின் 475 போட்டியானது கல்முனை பிர்லியன்ட் விளையாட்க் கழகத்திற்கும் ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்க் கழகத்திற்குமிடையே மட்டக்களப்பு பல்கழைக் கழக மைதானத்தில் நேற்று (27) மாலை நடைபெற்றது. இப்போட்டியில்  கல்முனை பிர்லியன்ட் விளையாட்க் கழகம் 3 : 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1 : 1 என்ற கோல் அடிப்படையில் சம நிலையில் இருந்தபோதும் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் கல்முனை பிர்லியன்ட் அணி சார்பாக சௌஜான் அடுத்தடுத்து பெற்றுக் கொடுத்த கோலின் மூலம் கல்முனை பிர்லியன்ட் விளையாட்க் கழகம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது. கல்முனை பிர்லியன்ட் விளையாட்க் கழகத்தின் 25 வருட கால பயணத்தில் முதன் முறையாக  எப்.ஏ. கிண்ண  உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டித்தொடரின் ஆறு சுற்றுத் தொடரில் வெற்றிபெற்றுள்ளமையும் அதன் மூலம் தேசிய ரீதியில் உள்ள 32 முன்னணி உதைபந்தாட்ட அணிகள் பங்பற்றும்  சுழரனெ க ழக 32

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஆணிவேர் மிகப் பலமானது இந்த ஆணிவேரை யாராலும் அசைக்க முடியாது

Image
பிரதித் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம்  (பி.எம்.எம்.ஏ.காதர்) அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஆணிவேர் மிகவும் பலமானது இந்த ஆணிவேரை யாராலும் அசைக்க முடியாது யார் எந்த மாயாஜாலங்களைக் காட்டினாலும்,யார் எத்தனை  பஞ்ஞ பூதங்களைக் கொண்டு வந்தாலும், இந்தச் சங்கத்தை அழிக்க முடியாது என சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விஷேட பொதுச் சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (27-03-2016)மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி  உரையாற்றிய போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.  இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :- எமது சங்கத்தின் தலைவர் மீரா எஸ் இஸ்ஸடீன் சுகவீனமுற்றிருப்பதால் இன்றைய விஷேட பொதுச் சபைக் கூட்டத்திற்கு நான் தலைமைதாங்குகின்றேன் இக்கூட்டத்திற்கு பெரும் அளவில் உறுப்பினர்கள் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது. இந்தச் சங்கம் பல தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டது இதையாராலும் இலகுவாக அழித்து ஒழித்து விடமுடியாது எத்தகைய பி

ஊடகவியலாளர்களுக்கு அரசு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் கல்முனை மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Image
நல்லாட்சி அரசாங்கத்தில்  ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கள் , வீட்டுத்திட்டம்  வழங்குவதற்கு  ஊடக அமைச்சினால்  சுற்றுநிருபம் வெளியிடப் பட்டது . அதன்படி  தீர்வை அற்ற  சலுகை  அடிப்படையில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபை இன்று  (28) நடை பெற்ற  மாதாந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது . அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் சம்மேளனத்தின் உப தலைவர்   கலா பூசணம்   ஏ.எல்.எம்.சலீம்  தலைமையில்  இன்று காலை கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி நிஸாம் காரியப்பரை சந்தித்து ஊட்டகவியலாள ர்களுக்கு  அநீதி  இழைக்கப் பட்டுள்ளதை தெரிவித்து   விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த தீர்மானம் மாநகர முதல்வரினால் இன்று மாலை இடம்பெற்ற சபை அமர்வில் விசேட பிரேரணையாக  சமர்ப்பிக்கப்பட்டு சபை உறுப்பினர்களால் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு  தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது . கல்முனை மாநகர சபையில் எடுக்கப் பட்டுள்ள  இத் தீர்மானத்தினை எழுத்துமூலமாக ஜனாதிபதி , பிரதமர்  மற்றும்  ஊடகத்துறை அமைச்சர் ஆகியோருக்கு  உடனடியாக 

ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைகள் கடன் வேண்டாம் சலுகை வேண்டும்! "அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் களத்தில்"

Image
வங்கி கடன் மூலம் ஊடகவியலாளர்களுக்கு  மோட்டார் சைக்கள் வழங்குவதற்கு  ஊடக அமைச்சு  எடுத்திருக்கும் நடவடிக்கைகளை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி இன்று நடை பெறவுள்ள  கல்முனை  மாநகர சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப் படவுள்ளது . இதற்கான பிரேரணை  இன்று நடை பெறும்  அமர்வில் மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பரினால்  முன் வைக்கப் படவுள்ளது.  இந்த பிரேரணை பிரதிகளை ஜனாதிபதி ,பிரதம மந்திரி ,ஊடக அமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாக மாநகர முதல்வர் தெரிவித்தார் . அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்துக்கமைய இப்பிரேரணைக்கான  கோரிக்கை  சம்மேளனத்தின் உப தலைவர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் ,செயலாளர் எஸ்.எல்.ஏ.அஸீஸ் ,பொருளாளர் யு.எம்.இஸ்ஹாக் ஆகியோரால் இன்று மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரிடம் வழங்கி வைக்கப் பட்டது . இன்று மாலை நடை பெறவுள்ள மாநகர சபை அமர்வில் முதல்வரினால் இப்பிரேரணை சபைக்கு சமர்ப்பிக்கப் பட்டு தீர்மானம் நிறைவேற்றப் படவுள்ளது. வரிசலுகை அடிப்படையில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கள்  வழங்குவதாக ஆரம்பத்தில் ஊடக

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விஷேட பொதுச்சபைக்கூட்டம்! ஆர்வத்துடன் கலந்து கொண்ட அங்கத்தவர்கள் !!

Image
அம்பாறை   மாவட்ட   ஊடகவியலாளர்   சம் மேளனத்தின் விஷேட பொதுச்சபைக்கூட்டம் இன்று  27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மருதமுனை பொது நூலக மண்டபத்தில் இடம் பெற்றது . அம்பாறை   மாவட்ட   ஊடகவியலாளர் சம்மேளனத்தின் உப  தலைவர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம்   தலைமையில்  இடம் பெற்ற  இவ் விஷேட பொதுச் சபைக் கூட்டத்தில்  சம்மே ளனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், அங்கத்தவர்கள் நலனோம்பல் விடயங்கள் தொடர்பாகவும் விஷேடமாக கலந்தாலோசிக்கப் பட்டு எதிர்கால நலன் கருதி சம்மேளனத்தின் யாப்பு மாற்றம் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப் பட்டது. சம்மேளனத்தின் செயலாளர் எஸ்.எல்.ஏ.அஸீஸ் ,பொருளாளர் யு.எம்.இஸ்ஹாக்  உட்பட  சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் 35க்கும் மேற்படாவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்ததுடன் எடுக்கப் பட்ட தீர்மானங்களுக்கும் ஆதரவு வழங்கினர் .  

கல்முனை செலான் வங்கிக் கிளையில் வங்கியின் 28வது ஆண்டு விழா

Image
செலான் வங்கியின் 28ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கல்முனை கிளை ஏற்பாடு செய்த நிறைவு விழா நிகழ்வு மிக சிறப்பாக இன்று வியாழக் கிழமை இடம் பெற்றது . கல்முனை கிளை வங்கி முகாமையாளர் திருமதி இன்னோசென்டியா பிறேமினி மோகன்ராஜ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வங்கி ஊழியர்கள்  அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

கட்டாரில் "கல்முனை மாநகரம்" உள்ளூராட்சியும், சிவில் நிருவாகமும் வரலாற்று ஆவணப்பதிவு நூல் வெளியீடு!

Image
கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையத்தின் ( Gulf Federation for Kalmunai - GFK ) ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ. எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய "கல்முனை மாநகரம்" உள்ளூராட்சியும், சிவில் நிர்வாகமும் எனும் வரலாற்று ஆவணப்பதிவு நூல் வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை 1 8 ஆம் திகதி மாலை 6:00 மணியளவில் கட்டார் டோஹாவில் அமைந்துள்ள பிரண்ட்ஸ் கல்ச்சரல் சென்டரில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. தென்கிழக்கின் தலைநகராக இன்று அறியப்படும் கல்முனை மாநகரானது வெள்ளையன் ஆட்சி செய்த காலம் தொட்டு இன்று வரைக்கும் பல சிவில் நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அலகாக பிரகடணப்படுத்தப்பட்டு நிருவாகங்கள் நடந்து வந்துள்ளன என்பதை பல புகைப்படங்களோடும், இற்றைப்படுத்தப்பட்ட பல தரவுகளோடும் வெளிக்கொணர்ந்த்திருக்கிறது இந்நூல். கல்முனை மாநகரம் ஏலவே கரவாகுப்பற்றாக குறிக்கப்பட்டு சனிட்டார் போர்ட் , லோகல் போர்ட் , பட்டின சபை , பிரதேச சபை, நகர சபை, ஈற்றில் மாநகர சபையாக உருவெடுத்த வரையில் சகல சிவில் நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களையும் அதன் நிர்வாக கட்டமைப்பையும் இன்னும் பல விடயங்களையும் உள்ளடக்கியத

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விஷேட பொதுச்சபைக் கூட்டம்

Image
அம்பாறை   மாவட்ட   ஊடகவியலாளர்   சம் மேளனத்தின் விஷேட பொதுச்சபைக்கூட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மருதமுனை பொது நூலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. அம்பாறை   மாவட்ட   ஊடகவியலாளர் சம்மேளனத்தின்  தலைவர் கலாபூசணம்  மீரா எஸ். இஸ்ஸடீன் தலைமையில்  இடம்பெறவுள்ள இவ் விஷேட பொதுச்சபைக்கூட்டத்தில்  சம்மே ளனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், அங்கத்தவர்கள் நலனோம்பல் விடயங்கள் தொடர்பாகவும் விஷேடமாக கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக   சம்மேளனத்தின்  பொதுச் செயலாளர்   எஸ்.எல்.அஸீஸ் தெரிவித்தார்.

தாய்க்குலத்தை கௌரவித்த கல்முனை திவிநெகும சமுக அபிவிருத்திப் பிரிவு

Image
(அப்துல் அஸீஸ்) சர்வதேச மகளிர் தின வாரத்தினை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலக திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவினால் நடாத்தப்பட்ட துறைசார்  மகளீர் கெளரவிக்கும் நிகழ்வு சமீபத்தில்   கல்முனை பிரதேச செயலக  மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கல்முனை பிரதேசத்தில் உள்ள மகளீர்களில் சிறந்த முயற்சியாள பெண்,  சிறந்த சமூக சேவையாற்றும் பெண், ஆரோக்கியமான வயோதிபப்  பெண்,  முன்மாதிரியான தாய்,  வாழ்வில் முன்னேற்றகரமான பெண் ஆகிய துறைசார்ந்த பெண்கள் கெளரவிக்கப்பட்டனர். திவிநெகும முகாமைத்துவப்பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீறா  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  கல்முனை பிரதேச செயலாளர்  எம்.எச்.முகமட் ஹனி,  திவிநெகும தலைமைப்பீட  முகாமையாளர் எ.ஆர்.எம்.சாலிஹ்,  திவிநெகும திட்ட  முகாமையாளர் எ.எம்.எஸ். நயீமா,  திவிநெகும வங்கி-வலய  முகாமையாளர் எம்.எம்.எம்.முபீன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் யு.எல்.முஸ்பிறா, சிறுவர் மேன்பாட்டு  உத்தியோகத்தர் ஒ.கே.சரிபா உட்பட திவிநெகும அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.