அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஆணிவேர் மிகப் பலமானது இந்த ஆணிவேரை யாராலும் அசைக்க முடியாது

பிரதித் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் 
(பி.எம்.எம்.ஏ.காதர்)
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஆணிவேர் மிகவும் பலமானது இந்த ஆணிவேரை யாராலும் அசைக்க முடியாது யார் எந்த மாயாஜாலங்களைக் காட்டினாலும்,யார் எத்தனை  பஞ்ஞ பூதங்களைக் கொண்டு வந்தாலும், இந்தச் சங்கத்தை அழிக்க முடியாது என சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார். 
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் விஷேட பொதுச் சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (27-03-2016)மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி  உரையாற்றிய போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார். 
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :- எமது சங்கத்தின் தலைவர் மீரா எஸ் இஸ்ஸடீன் சுகவீனமுற்றிருப்பதால் இன்றைய விஷேட பொதுச் சபைக் கூட்டத்திற்கு நான் தலைமைதாங்குகின்றேன் இக்கூட்டத்திற்கு பெரும் அளவில் உறுப்பினர்கள் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது.
இந்தச் சங்கம் பல தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டது இதையாராலும் இலகுவாக அழித்து ஒழித்து விடமுடியாது எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் சக்தியும்,பலமும் இந்தச் சங்கத்திற்கும்  சங்க உறுப்பினர்களுக்கும் இருக்கின்றது. 
சிலர் சுயநலத்திற்காக எமது சங்கத்தின் உறுப்பினர்கள் சிலரை கறிவேப்பிலையாகப் பயன்படுத்த முயற்சி செய்தார்கள் அதற்கு நாங்கள் துணை போகவுமில்லை இடம் கொடுக்கவுமில்லை,இடம் கொடுக்கப் போவதும் இல்லை . எமது சங்கத்தின் உறுப்பினர்கள் சுக போகங்களுக்கு அடிமைப்பட்டவர்களுமல்ல நிலைபிரள்பவர்களுமல்ல.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தை மிகவும் பலமாகக் கட்டியெழுப்பியதில் மீரா எஸ் .இஸ்ஸடீனின் பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.மீரா எஸ் இஸ்ஸடீனைப் போல் மிகவும் சுறு சுறுப்பாக யாராலும் இயங்க முடியாது என்பது உண்மையாகும்.
மேலும் இன்றைய நல்லாட்சியில் ஊடகவியலாளர்களின் உணர்வுகளையும்,கஷ்ட நஷ்டங்களையும் நன்றாகப் புரிந்து கொள்ளக் கூடிய ஒருவர் கயந்த கருணாதிலக ஊடக அமைச்சராக  வந்திருப்பது ஊடகவியலாளர்களுக்கு பெரும் பாக்கியமாகும். நேற்றுக்கூட தென்பகுதி ஊடகவியலாளர்களை வடபகுதிககு அழைத்துச் சென்றிறுக்கின்றார் அங்கு இருக்கின்ற ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்கின்றார் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியாலாளர்களுக்கு வீடுகளை நிர்மானிப்பதற்கான அடிக்கல்லையும் நட இருக்கின்றார்.
இருந்த போதிலும் ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற வகையில் மோட்டார் சைக்கிள் வழங்குவதாகத் தெரிவித்து விட்டு தற்போது வங்கிகள் ஊடாக கடன் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருப்பது இன்றைய நல்லாட்சியில் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கின்ற பெரும் அநீதியாகும் என்றார்.  



     

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்