Posts

Showing posts with the label நற்பிட்டிமுனை

நற்பிட்டிமுனை முஸ்லிம் பிரதேசத்திற்கான விவாகப் பதிவாளராக இக்பால் நியமனம்

Image
நற்பிட்டிமுனை முஸ்லிம் பிரதேசத்திற்கான விவாகப் பதிவாளராக ஓய்வு பெற்ற  சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்   சேகு இப்றாலெவ்வை முகம்மது இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார்    அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட பதிவாளர் திரு. துமிந்த திசாநாயக்க முன்னிலையில் 2019. 11.20 ஆம் திகதி சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டதை காணலாம் 

நற்பிட்டிமுனை பிரதான வீதியில் சற்று நேரத்துக்கு முன்னர் இடம் பெற்ற பாரிய விபத்து மூவருக்கு பலத்த காயம்

Image

நற்பிட்டிமுனை ரெயின்போ முன்பள்ளி மாணவர்களில் விடுகை விழா

Image
நற்பிட்டிமுனை ரெயின்போ முன்பள்ளி மாணவர்களில் விடுகை விழா நாளை 15.12.2018 சனிக்கிழமை நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. ரெயின்போ கல்லூரியின் நிருவாகிகளான லாபீர் வித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் நடை பெறும் இந்த நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபை கல்முனை டிப்போ முகாமையாளர் வெள்ளைத்தம்பி ஜஹுபர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார் . கல்முனை பிரதேச செயலக முதியோர் சங்க செயலாளர் ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எல்.எம்.ஜலாலுதீன்  கெளரவ அதிதியாகவும் , நற்பிட்டிமுனை  ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் மௌலவி ஜெ.எம்.ரிஷான் ,லாபிர் வித்தியாலய அதிபர் வை.எல்.ஏ.பஷீர் ,அம்பாறை மாவட்ட முன்பள்ளி கல்வி பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் மௌலவி ஐ.எல்.அனீஸ் ,குழந்தைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்  திருமதி எம்.எச்.சம்ரினா ,லாபிர் வித்தியாலய பிரதி அதிபர் சி.எம்.நஜீப் ,லாபிர் வித்தியாலய பகுதி தலைவரும்  நற்பிட்டிமுனை  ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளருமான    எம்.எல்.எம்.அஸ்ரப் ,  லாபிர் வித்தியாலய பகுதி தலைவர் மௌலவி எம்.ரீ...

நற்பிட்டிமுனையில் கைக்குண்டு மீட்ப்பு

Image
நற்பிட்டிமுனை  பழைய   மின்சார சார சபை  வீதியில்  இன்று   ஞாயிற்றுக்   கிழமை காலை கைக்குண்டு ஒன்று  கண்டுபிடிக்கப்படுள்ளது  நற்பிட்டிமுனை யில் உள்ள  குறுக்கு வீதி யில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைக்குள்  மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு கல்முனை பொலிஸாரால் மீட்க்கப்படுள்ளது . கல்முனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த கல்முனை பொலிஸார்  கைக்குண்டை மீட்டுள்ளனர் .

கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினர் றபீக், முதல்வர் ஏ.எம்.றகீப் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்..!

Image
கல்முனை மாநகர சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பான புதிய உறுப்பினர் ஏ.எல்.றபீக் இன்று செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.நவாஸ், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அஹ்சன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர். கல்முனை மாநகர சபையின் சுதந்திரக் கட்சி உறுப்பினராக பதவி வகித்து வந்த இசட் ஏ.எச்.ரஹ்மான், மீண்டும் பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டதைத் தொடர்ந்து, உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார். அவ்வெற்றிடத்துக்கே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரின் பரிந்துரையின் பேரில் றபீக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் நற்பிட்டிமுனை வட்டாரத்தில் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நற்பிட்டிமுனைக்கு அடித்தது யோகம்

Image
கல்முனை மாநகர சபை உறுப்பினராக இருந்த மருதமுனை ரகுமான் IP  பதவி விலகியதையடுத்து அந்த வெற்றிடத்துக்கு  ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் கல்முனை மாநகர சபைக்கு போட்டியிட்ட  நற்பிட்டிமுனையை சேர்ந்த ஏ.எல்.ரபீக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் 

சக்கர நாற்காலி வழங்கி வைப்பு

Image
நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் சமூக சேவை பிரிவினால் நற்பிட்டிமுனையில் வலது குறைந்த ஒருவருக்கு சக்கர நாற்காலி அன்பளிப்பு செய்யப்பட்டது.    நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் தலைவர் சி.எம்.ஹலீம்  நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் ஆலோசகரும் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய ஆரம்பப் பிரிவு அதிபருமான திருமதி ஏ.முனாஸிர் ஆகியோர் சக்கர நாற்காலி வழங்கி வைப்பதைக் காணலாம் 

நற்பிட்டிமுனை லங்கா சதொசவில் பரிசு வழங்கல்

Image
லங்கா சதொச நிறுவனத்தின் உதவியுடன் ஹேமாஸ்  நிறுவனம் நடத்திய போட்டி நிகழ்ச்சியில் வெற்றிஈட்டிய  வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கும் வைபவம் நற்பிட்டிமுனை  ​ லங்கா சதொச விற்பனை நிலையத்தில்  அம்பாறை மட்டக்களப்பு பிரதேச முகாமையாளர்  றிபாஸ் எம்.கலீல் தலைமையில் இன்று  (17) நடை பெற்றது. . பரிசு பெறுபவர்களையும் , முகாமையாளர் ஐ.எல்.நாஸர் ,உதவி முகாமையாளர் ஏ.எச்.எம்.பிர்னாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சி.எம். முபீத்தின் முயற்சியால் நற்பிட்டிமுனை ஆலயடி வடக்கு வீதி நிர்மாணம்

Image
நற்பிட்டிமுனை ஆலயடி வடக்கு  வீதியில் வசிக்கும் மக்களின் நீண்டகாலக் கனவாகவும், தாகமாகவும் இருந்த ஆலயடி வடக்கு   வீதிக்கு 5 மில்லியன் ரூபா நிதியில் கொங்றீட் வீதி அமைப்பதற்கான  முதற்கட்ட வேலைத் திட்டங்கள்   நேற்று முன்தினம்  (27) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வீதியின் அவல  நிலை குறித்து கல்முனை மாநகர சபை முன்னாள்  உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளர்களின் ஒருவருமான நற்பிட்டிமுனை சி.எம்.முபீத் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம்  விடுத்த வேண்டுகோளை அடுத்து அமைச்சரினால் இந்த வீதிக்கான முதற்கட்ட நிதியாக 50இலச்சம்  ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது  கல்முனை மாநகர சபை முன்னாள்  உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளர்களின் ஒருவருமான சி.எம்.முபீத் இந்த வீதிக்கான  வேலை திட்ட்ங்களை ஆரம்பித்து வைத்தார் 

கிழக்கு ஆளுநருக்கு சமூக சேவையாளர் நற்பிட்டிமுனை ஹலீம் வாழ்த்து

Image
கிழக்கு மாகாண ஆளுனராக  ரோஹித போகொல்லாகம பதவியேற்றபின்னர் ஆளுநர்  அலுவலகத்துக்கு சென்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான  றிஷாத் பதியுதீனின் இணைப்பாளரும் ,சமூகசேவையாளருமான நற்பிட்டிமுனை சி.எம்.ஹலீம்  ஆளுநருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்

அதிபர் ஜெஸ்மினாவுக்கு வீடு தேடிச் சென்ற சேவை நலன் பாராட்டு !!

Image
நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் ஓய்வு பெற்ற நற்பிட்டிமுனை லாபிர்  வித்தியாலய அதிபர்  திருமதி ஜெஸ்மினா ஹாரீஸ் அவர்களுக்கு நடை பெற்ற  சேவை நலன் பாராட்டு விழா அவரது தெஹிவளை வீட்டி ல்  நடை பெற்றது . நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில் அமைப்பின் செயலாளர்  யு.எல்.எம்.பாயிஸ்  உட்பட அமைப்பின் அங்கத்தவர்களும்  நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகாவித்தியாலய பிரதி அதிபர் வீ.எம்.ஸம்ஸம் ,ஆசிரியை கே.எல்.குழந்தையும்மா ,நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய ஆசிரியர் எம்.எல்.அஷ்ரப் ஆகியோரும் மாணவர்களும் பெற்றோர்களும்  நிகழ்வில் கலந்து கொண்டனர்

நற்பிட்டிமுனை சிறுவர்கள் பாராளுமன்றத்தை பார்க்கும் அரிய வாய்ப்பு

Image
கடந்த வருடம் ஐந்தாம் தர புலமை பரீட்சையில் சித்தி பெற்ற நற்பிட்டிமுனை மாணவர்களுக்கு நற்பிட்டிமுனை அல் - கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் கெளரவிப்பு நிகழ்வு அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் 2016.11.08 நடை பெற்ற போது அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்வி ராஜாங்க அமைச்சர் வீ . ராதா கிருஷ்ணன் மாணவர் களுக்கு நினைவு சின்னம் வழங்கி வைத்தார் . அவர் அன்று அந்த நிகழ்வில் உரையாற்றும் போது நற்பிட்டிமுனை சாதனை மாணவர்களுக்கு எனது பரிசாக பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தையும் அன்றய தினம் பாராளுமன்றில் மதிய உணவையும் வழங்கி கெளரவிப்பேன் என்றும் அதற்கான ஏற்பாட்டினை தம்பி ஹலீம் ஏற்பாடு செய்யும் படியும் வாக்குறுதி வழங்கினார் . கல்வி ராஜாங்க அமைச்சர் வழங்கிய வாக்குறுதி கடந்த திங்கட் கிழமை (17)நிறைவேற்றப் பட்டுள்ளது . " நற்பிட்டிமுனை சாதனையாளர்களின் பாராளுமன்றம் நோக்கிய பயணத்தில் " சாதனை மாணவர்கள் 10 பேரும் அவர்களது பெற்றோர்களும் ,உறவினர்களும் ,ஆசிரியர்கள் மற்றும் நற்பிட்டிமுனை அல் - கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில்...

நெற்பிட்டிமுனையின் வரலாறும் பண்பாட்டியலும் நூல் வெளியீட்டு விழா

Image
(யு.எம்.இஸ்ஹாக் ) நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய அதிபர் கவிஞர்  எம்.எல்.ஏ.கையூம் எழுதிய நெற்பிட்டிமுனையின்   வரலாறும் பண்பாட்டியலும்  நூல் வெளியீட்டு விழா  நாளை மறுதினம்  சனிக்கிழமை (05) நற்பிட்டிமுனை  அல் -அக்ஸா மகா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நடை பெறவுள்ளது . நற்பிட்டிமுனை நம்பிக்கையாளர் சபை தலைவரும் அட்டாளைச் சேனை  கல்வியற்கல்லூரி  விரிவுரையாளருமான மௌலவி ஏ.எல்.நஸீர் கனி தலைமையில்  நடை பெறவுள்ள  நூல் வெளியீட்டு விழா வைபவத்தில்  கிழக்கு மாகாண  கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  நூலை வெளியிட்டு வைக்கவுள்ளார் . நூலின் முதல் பிரதியை நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின்  தலைவரும்  சமூக சேவையாளருமான சி.எம்.ஹலீம் பெற்றுக் கொள்வார் . நிகழ்வில் கெளரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல் , மட்டக்களப்பு  கல்வியற் கல்லூரி பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் ,அடடாளைச்சேனை கல்வ...