சி.எம். முபீத்தின் முயற்சியால் நற்பிட்டிமுனை ஆலயடி வடக்கு வீதி நிர்மாணம்
நற்பிட்டிமுனை ஆலயடி வடக்கு வீதியில் வசிக்கும் மக்களின் நீண்டகாலக் கனவாகவும், தாகமாகவும் இருந்த ஆலயடி வடக்கு வீதிக்கு 5 மில்லியன் ரூபா நிதியில் கொங்றீட் வீதி அமைப்பதற்கான முதற்கட்ட வேலைத் திட்டங்கள் நேற்று முன்தினம் (27) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த வீதியின் அவல நிலை குறித்து கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளர்களின் ஒருவருமான நற்பிட்டிமுனை சி.எம்.முபீத் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து அமைச்சரினால் இந்த வீதிக்கான முதற்கட்ட நிதியாக 50இலச்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளர்களின் ஒருவருமான சி.எம்.முபீத் இந்த வீதிக்கான வேலை திட்ட்ங்களை ஆரம்பித்து வைத்தார்
Comments
Post a Comment