Posts

Showing posts with the label Grow

கல்முனை மாநகர சபைக் கட்டிடமும் -நினைவு கல்லுகளும்

Image
1953 ஆம் ஆண்டு  கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பரினால்   கட்டப்பட்ட கல்முனை  பட்டின  சபைக்கான  கட்டிடம்  பட்டின சபைக்கும், பிரதேச சபைக்கும்,நகர சபைக்கும் ,மாநகர சபைக்கும் இடம் கொடுத்துள்ளது. ஆட்சி செய்தவர்கள் மாறினார்கள் தவிர  கட்டிடத்தில் மாற்றம் வரவில்லை . 1953 ஆம் ஆண்டு கட்டிடம்தான் 2016 லும்  சிறிய மாற்றமும்  இல்லாமல் உள்ளது .  கட்டிடம்  மாறுமோ அல்லது மாறியதோ அல்லது மாறவில்லையோ  அமர்ந்தவர்களின்  நினைவு பெயர் பொறிக்கப் பட்ட  கல்லுகள்  மாறி இருக்கின்றன .  கல்முனை மாநகர சபைக் கட்டிடத்தை சுற்றிவர 08 நினைவுக்கு கல்லுகள்  பொறிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

அளுத்கம அனர்த்தம் இடம் பெற்று ஓராண்டு பூர்த்தி !! ஹரீஸ் MP யின் ஆதங்கம்

Image
கடந்த வருடம் இதே போன்ற ஒரு நாளில் அளுத்கம நகரில் வசிக்கும் நமது சகோதர சகோதரிகளின் மீது அவர்களின் சொத்துக்களின் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்ட மறுநாள் அவ்விடத்தை சென்று பார்வையிட்ட போது அடைந்த துயரத்தை நினைக்கையில் என் மனம் இன்றும் கனக்கிறது. இதன் பின்னர் நடைபெற்ற எமது கட்சியின் உயர்பீட கூட்டத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ அரசிலிருந்து வெளியேற வேண்டுமென்று முதல் முதலில் காரசாரமாக விமர்சித்து வேண்டி நின்றதை நினைத்துப் பார்க்கிறேன். எமது கட்சியின் உயர்பீட கூட்டத்தின் பின்னர் நான் ஊடகங்களு க்கு வழங்கிய செவ்வியிலும் இதனை ஆணித்தரமாக வலியுறுத்தியிருந்தேன். இதன் ஒரு பகுதியை இங்கும் பகிர்ந்துகொள்கிறேன். கடந்த ஆட்சியின் மீது எம் மக்கள் அதிருப்தி கொள்ளவும் தற்போதைய ஆட்சி ஏற்படவும் காரணமாக இருந்த இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் இப்போதைய நல்லாட்சியிலாவது சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டி யதுடன் பாதிக்கப்பட்டு இன்றுவரை  மீளமுடியாது அல்லல்படுவோருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படவேண்டும்.

நற்பிட்டிமுனை நீர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது - மக்கள் நன்றி தெரிவிப்பு

Image
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக  நட்பிட்டிமுனையில்  நிலவிய  குடி நீர் பிரச்சினை வழமைக்கு திரும்பியுள்ளது. . மாதங்கள்  பல கடக்கும்  நீர் கிடைப்பதற்கு என்று கூறப் பட்ட நிலையிலும்  மிக அவசரமாக  குடிநீரைப்  பெறுவதற்கு  நடவடிக்கை எடுத்த   அனைத்து  அரசியல்  பிரமுகர்களுக்கும் , அதிகாரிகளுக்கும் , குறிப்பாக  எமது இந்தப் பிரட்சனையை  உலகறிய  செய்து  தீர்வுக்கு வழி  கோலிய  ஊடகங்கள்  ,ஊடகவியலாளர்கள்  அனைவருக்கும்  நற்பிட்டிமுனை அனைத்து  மக்களும்  நன்றி தெரிவித்துள்ளனர்  

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியால புகைத்தல் ஒழிப்பு தின ம்

Image
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய  மகா வித்தியாலய மாணவர்கள் ஒழுங்கு செய்த  சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தின  விழிப்பு  ஊர்வலம்   நேற்று  இடம் பெற்றது. இந்த நிகழ்வில்  சம்மாந்துறை  வலயக்கல்விப் பணிப்பாளர் சௌதுல் நஜீம் , பொது சுகாதாரப் பரிசோதகர் கே.எல்.ஹனிபா  உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்

நற்பிட்டிமுனை லோயர் தோட்டத்துக்கு மின்சார திட்டம் ஆரம்பித்து வைப்பு

Image
பல வருட காலமாக மின்சாரம் இல்லாமல் இருந்த  நற்பிட்டிமுனை  லோயர் தோட்ட  வீதிக்கு  இன்று  மின்சாரக் கம்பி  இணைக்கும் வேலைகள் ஆரம்பித்து வைக்கப் பட்டன . அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கல்முனை தொகுதி அமைப்பாளரும் ,கல்முனை மாநகர சபை  உறுப்பினரும் , சதோஷ  நிறுவனத்தின்  நிறைவேற்றுப் பணிப்பாளருமான சி.எம்.முபீத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கல்முனை தொகுதி இளைஞர்  காங்கிரஸ் அமைப்பாளரும்  அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில்  சமூக அபிவிருத்தி நிலையத்தின் தலைவருமான சி.எம்.ஹலீம் ஆகியோரால்  இப்பணி  ஆரம்பித்து வைக்கப் பட்டது. லோயர்  தோட்டத்தில் வசிக்கும் நற்பிட்டிமுனை மக்களின் வேண்டுகோளுக்கமைய  அமைச்சர் றிசாத் பதியுதீனின்  நிதி ஒதுக்கீட்டில்  இவ்வேளை திட்டம் முன்னெடுக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது . 

கண்ணுக்குத் தெரியாத அழகியை விட கண்ணுக்குத் தெரிந்த பேய் நல்லது போல்..

Image
ஏ.எச்.சித்தீக் காரியப்பர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த புதன்கிழமை அமைச்சரவை கூடியபோது சிறுபான்மை சமூம் சார்ந்த இரு விடயங்கள் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் சில முக்கிய விடயங்களை அங்கு சுட்டிக் காட்டியுள்ளனர். . அமைச்சர் ரவூப் ஹக்கீம் 20 ஆவது தேர்தல் சீர்திருத்தச் சட்டம் தொடர்பில் யதார்த்த நிலைமைகளை அங்கு எடுத்துக் கூறி, இந்தச் சட்டமூலத்தால் சிறுபான்மை இன மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதனை அவர் சுட்டிக்காட்டியதுடன் தான் ஒரு பொறுப்பு வாய்ந்த கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அதனை திருத்தங்கள் ஏதுமின்றி ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். முழுமையான உடன்பாடு எட்டப்படாத காரணத்தினால் புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தை மூடிமறைத்துச் செய்ய முடியாது எனவும் இன்னமும் சரியான தீர்மானம் மேற்கொள்ளப்படாத நிலையில், உரிய சட்டத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்க முடியாது என ஹக்கீம் தெரிவித்ததன் காரணமாக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் கடுமையான வாக்கு வாதத்திலும் ஈடுபட வேண்டிய நிலைமை...

மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசலின் மூன்றாவது மாடிக்கான கட்டிப்பணிகள் ஆரம்பம் நிதி உதவி வழங்கமாறு கோரிக்கை

Image
(பி.எம.;எம்.ஏ.காதர்) மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசலின் மூன்றாவது மாடிக்கான கட்டிப்பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.பள்ளிவாசலின் புதிய தலைவரும் ,உதவிக் கல்விப் பணிப்பாளருமான  ஏ.எல்.சக்காப் கட்டிப்பணியை ஆரம்பித்து வைத்தார். இதில் முன்னாள் தலைவர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.  சுமார் பத்துக் கோடி  ரூபா செலவில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள இப்பள்ளி வாசலின் கட்டிபணி அரைப்பகுதி  முடிவடைந்தள்ளது. இக் கட்டிடப் பணிக்கான அதிகமான நிதி மருதமுனை மக்களிடமிருந்தே  பெறப்பட்டுடள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  இந்நிலையில் மிகுதி வேலைகளை முடிப்பதற்கு இன்னும் பெரும் தொகைப் பணம் தேவையாக உள்ளது. ஆகவே தொண்டு நிறுவனங்கள், தனவந்தர்கள், வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற சகோதரர்கள் இப்பள்ளிவாசலின் கட்டிடப்பணிக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. உதவிகளை வழங்க விரும்புகின்றவர்கள் பண அன்பளிப்புக்களை 6105263 என்ற இலக்க  இலங்கை வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கலாம். அல்லது தலைவர் ஏ.எல்.சக்காப் 0714418225, பொரு...

"சேகு மலைச்சோலையில் அகர ஆயுதம்(இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலக்குமான பொது வெளி)

Image
'அகர ஆயுதம்' (இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலக்குமான பொது வெளி) எனும் நிகழ்ச்சித்திட்டத்தின்  5ஆவது அமர்வு இறக்காமம் மதினாபுரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் மிகு சேகு மலைச்சோலையில். (இவன் புதியவன்) 'அகர ஆயுதம்' எனும் அமைப்பு ஏற்பாடு செய்த  'அகர ஆயுதம்' (இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலக்குமான பொது வெளி) எனும் நிகழ்ச்சித்திட்டத்தின்  5ஆவது அமர்வு இறக்காமம் மதினாபுரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் மிகு சேகு மலைச்சோலையில்  மிகவும் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் 2015.05.30 சனிக்கிழமை இடம் பெற்றது, மூத்த தொலைக்காட்சி, வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர் ஏ.எல் ஜபீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மூத்த கவிஞர் பாலமுனை பாரூக் கவியரங்கத்தலைமை வகித்ததோடு முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான, கவிஞர் சேகு இஸ்சதீன் (வேதாந்தி) அவர்கள் முன்நிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு நிந்தவூர் அகர ஆயுதம் கலை இலக்கிய அமைப்பின் தலைவரும் 'அகர ஆயுதம்'(இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலக்குமான பொது வெளி) எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதம செயட்பாட்டாளருமான...

நாங்கள் வாக்களித்தவர்கள் நீர்வழங்கல் அமைச்சராக இருந்தும் நீரின்றி உயிர் துறக்கும் நிலையில் உள்ளோம். நற்பிட்டிமுனை மக்கள்

Image
நன்றி -TamilCNN நாங்கள் வாக்களித்தவர்கள்  நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக இருந்தும் குடிநீரின்றி உயிர்விடும் நிலையிலேயே எங்களது கிராம மக்கள் உள்ளனர். நீண்டகால பிரச்சனையாக இருக்கும் கல்முனை நற்பிட்டிமுனை பிரதேசத்தில் காணப்படும் குடிநீர்ப் பிரச்சனைக்கு இந்த அரசியல்வாதிகள் இன்றுரை ஒரு நிரந்தர தீர்வை காணாமல் உள்ளார்கள். இவ்வாறு கல்முனை நற்பிட்டிமுனை கிராம மக்கள் மிகவும் மனவேதனையுடன் கூறுகிறார்கள். கல்முனையின் மேற்கே உள்ள நற்பிட்டிமுனை மற்றும் சேனைக்குடியிருப்பு கிராமங்களில் நீர்ப்பிரச்சனை நீண்டகால தொடர்கதையாகவே இருந்துவருகிறது. இங்குள்ள கிணறுகளில் நீர் ஊறுவது குறைவு கிணறுகள் அனேகமாக வற்றியே காணப்படும். இக்கிராம மக்கள் நீர் இணைப்பு நீரையே பயன்படுத்திவருகின்றார்கள். கடந்த ஒரு வாரமாக நீர் இணைப்பு மூலமும் கிடைக்கும் நீரும் முற்றாக தடைப்பட்டுள்ளதால் இப்பிரதேச மக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள்… இவ்விடயம் தொடர்பாக இம்மக்கள் மேலும் கூறுகையில்……. நீரின்றி எங்கள் மக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றோம் நீண்டகாலமாக எங்களது நீர்ப்பிரச்சனை தீர்க்கப்ப...

முஸ்லிம் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து செயற்படும் ஒருவராக அமைச்சர் றிஷாட் பதியூதீன் திகழ்கின்றார்.

Image
ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் பாராட்டு (பி.எம்.எம்.ஏ.காதர்) இலங்கையில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டாலும்,முஸ்லிம்கள் அழிக்கப்பட்டாலும் வாய் மூடி மௌனிகளாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் இருக்கின்றார்கள்  இவர்களுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து செயற்படும் ஒருவராக அமைச்சர் றிஷாட் பதியூதீன் இருக்கின்றார் என அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதித்தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட ஊடவியலாளர் சம்மேளனத்தின் மாதாந்தக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(24-05-2015)நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலய ஆரம்பப்பிரிவு  ஆராதனை மண்டபத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் இரண்டாவது அமர்வாக நடைபெற்ற  நற்பிட்டிமுனை சி.எம்.முபீத், சி.எம்.ஹலீம் ஆகியோர் கௌரவிக்கப்பட்ட நிகழ்வில் விசேட உரையாற்றிய போதே ஊடகவியலாளர் சலீம் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :- ஊடகவியலாளர்களான நாங்கள் பக்கச்சார்பின்றி எல்லா அரசியல் வாதிகளுக்கும் செய்திகளை எழுதி வருகி...

இனிவரும் காலங்களில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 30 வீதம் ஒதுக்கீடு

Image
அமைச்சரவையில் தீர்மானம்  இனிவரும் காலங்களில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 30 வீதம் ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்றும் இந்த தீர்மானத்தின்படி மாகாண சபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.  இது குறித்து கடந்த 20 ஆந்  திகதி நடை பெற்ற அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திர கட்சியும் இந்த தீர்மானத்தை கொண்டுவந்துள்ளன .   இலங்கையில் நாடாளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி சபைகளிலும் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் இருந்தாலும் அது போதாது என்ற கருத்தே நிலவிவருகிறது. குறிப்பாக மாகாண சபைகளில் 6 சத வீத்திற்கும் மேலாக பெண்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவிவந்தது.  தற்போது இலங்கையிலுள்ள 9 மாகாண சபைகளிலும் 447 உறுப்பினர்கள் அங்கத்துவம் பெற்றுள்ள போதிலும் 5 சத வீதத்திற்கும் குறைவான பெண்களே அவற்றில் இடம்பெற்றுள்ளனர்.  குறிப்பாக 36 உறுப்பினர்களை கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையில் அமைச்சரான ஆரி...

சாய்ந்தமருதில் நடக்கக் கூடாது நடந்து விட்டது

Image
அன்மையில் சாய்ந்தமருது தோணா அபிவிருத்திக்காக முதற்கட்ட வேலை திட்டம் தொடங்கப்பட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரினால் தொடங்கிவைக்கப்பட்டு அவ்விடத்தில் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவுப் ஹக்கீம் ஆகியோரின் படங்களுடன் கூடிய பதாதை ஒன்றும் நடப்பட்டது. இப்பதாதையில் உள்ள றவுப் ஹக்கீமின் முகத்துக்கு கறுப்பு சாயத்தினால் மறைப்பு இடப்பட்டு கெட்ட வாக்கியம் ஒன்றும் இடப்பட்டுள்ளது. இதே வேளை பிரதமர், ஜனாதிபதியின் படங்களுக்கு எதுவும் இடம்பெறவில்லை. வேலை திட்டம் தொடங்கப்பட்ட அன்றும் அவ்விடத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய கட்டம் இன்று திறப்பு விழா

Image
யு.எம்.இஸ்ஹாக்  நிந்தவூர் பிரதேச சபையின் புதிய கட்டம் இன்று  வெள்ளிக்கிழமை  பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது  ஸ்ரீ .ல மு.காவின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும்  கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  கௌரவ அதிதியாகவும்  சிறப்பு அதிதிகளாக  கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.ஐ.மன்சூர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் மற்றும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபையின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், முதலமைச்சரின் செயலாளர்யு.எல்.ஏ.அஸீஸ் ,உள்ளுராட்சிஆணையாளர் எம்.வை.சலீம்  உட்பட  அதிகாரிகள்  பலர் கலந்து கொண்டார்கள்  இதே வேளை, நிந்தவூர் பிரதேச சபைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவும் இன்றைய தினம் திறந்து வைக்கப் பட்டது.