"சேகு மலைச்சோலையில் அகர ஆயுதம்(இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலக்குமான பொது வெளி)

'அகர ஆயுதம்' (இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலக்குமான பொது வெளி) எனும் நிகழ்ச்சித்திட்டத்தின்  5ஆவது அமர்வு இறக்காமம் மதினாபுரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் மிகு சேகு மலைச்சோலையில்.
(இவன் புதியவன்)

'அகர ஆயுதம்' எனும் அமைப்பு ஏற்பாடு செய்த  'அகர ஆயுதம்' (இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலக்குமான பொது வெளி) எனும் நிகழ்ச்சித்திட்டத்தின்  5ஆவது அமர்வு இறக்காமம் மதினாபுரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் மிகு சேகு மலைச்சோலையில்  மிகவும் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் 2015.05.30 சனிக்கிழமை இடம் பெற்றது,
மூத்த தொலைக்காட்சி, வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர் ஏ.எல் ஜபீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மூத்த கவிஞர் பாலமுனை பாரூக் கவியரங்கத்தலைமை வகித்ததோடு முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான, கவிஞர் சேகு இஸ்சதீன் (வேதாந்தி) அவர்கள் முன்நிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு நிந்தவூர் அகர ஆயுதம் கலை இலக்கிய அமைப்பின் தலைவரும் 'அகர ஆயுதம்'(இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலக்குமான பொது வெளி) எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதம செயட்பாட்டாளருமான இலக்கியன் முர்சித், 'அகர ஆயுதம்'(இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலக்குமான பொது வெளி) நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான செயற்பாட்டாளர்களான தொலைந்த கவி இப்றாகீம் அஹ்சன், வானொலி அறிப்பாளர், கவிஞர் எஸ்.ஜனூஸ், கவிஞர் கிரமத்தான் கலிபா ஆகியோருடன்.  
கிழக்கின் பல பாகங்களில் இருந்தும்; மூத்த, இளைய கலை, இலக்கிய வாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் கல்வியலாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் தமிழ், முஸ்லிம பலரும்; கலந்துகொண்டு சிறப்பித்தனர். 
இன்நிகழ்வுக்கான இணைப்பு நடவடிக்கைகளை பாடகர் றியாஸ்(அபிவிருத்தி உத்யோகத்தர்), கவிதாயினி பர்ஸானா றியாஸ் ஆகியோரது தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.
காலை வேலை சுய அறிமுகத்துடன் ஆரம்பமான இன்நிகழ்வில் பெருமளவு கவிதைப் பொழிவுகள், சிறப்பு சொற்பாழிவுகள், பாரம்பரிய கலை அம்சங்கள் (மாப்பிள்ளை பைத், நாட்டார் பாடல்கள்), அழகிய பாடல்கள், ஓரங்க நாடகங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் அற்புதமாய் இடம்பெற்றமை சிறப்பாகும்.  காலை ஆகாரம் மற்றும் பாரம்பரிய பகல் உணவும் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் இருதியில் 'அகர ஆயுதம்'(இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலக்குமான பொது வெளி) எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆறாவது அமர்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜுலை மாத இருதிப்பகுதியில் இடம்பெறும் என அதன் செயற்பாட்டாளர்களால் விக்கப்பட்டதோடு. அது தொடர்பில் மேலதிக தகவல்களிற்கு 'அகர ஆயுதம்' முகநூல் பக்கத்துடனோ அல்லது 0778486168 (பிரதம செயற்பாட்டாளர்-இலக்கியன் முர்சித்) எனும் அலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ள முடியும்




Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்