Posts

Showing posts from August, 2017

உள்ளூராட்சிச் ச​பை தேர்தல் டிசம்பர் மாதம் 09ஆம் திகதி?

Image
உள்ளூராட்சிச் ச​பை தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். புதிய வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கு தமது பெயரை பதிவு செய்து கொள்வதற்கு மக்கள் அக்கறை செலுத்துவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே வாக்காளர் இடாப்பு குறித்து மக்கள் அதிகளவில் சிந்திப்பதில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அரசியல் நிலை, அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையின்மை போன்ற காரணங்களால் இந்த நிலை உருவாகியிருக்கக் கூடும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்

கல்முனை பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.

Image
(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில்இன்று (17) வியாழக்கிழமை காலை கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அன்வர்தீன், வலயக்கல்வித் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ,மாநகர ஆணையாளர் ஜே .லியாகத் அலி ,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. இராஜதுரை, சமூர்த்தி தலமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர். சாலிஹ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர். அமீர், ஏ.எல்.எம். முஸ்தபா, எம்.எஸ். உமர் அலி,  உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், கிராம சேவகர்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் விளக்கமளித்தனர்.  மேலும் தனியார் நிறுவனத்தினால் கல்முனை மாநகர பிரதேசத்தில் வழங்கப்படுகின்ற கேபில் தொலைக்கா

நிலைமாற்று நீதிப் பொறிமுறை தொடர்பானஉப குழு பயிற்சி செயலமர்வு

Image
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சமூக சமய பொறுப்பாளர்கள் மற்றும் உள்ளுர் அரசியல் பிரமுகர்களுக்கான நிலைமாற்று நீதிப் பொறிமுறை தொடர்பான இலங்கை சமாதான தேசியப் பேரவையின் 18வது உப குழு பயிற்சி செயலமர்வு  நேற்றும்இ இன்றும் அம்பாறை ரெறல் வதிவிட விடுதியில் நடை பெற்றது.  இலங்கை சமாதான தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் “சமயங்களினூடாக நல்லிணக்கம்காணல்” எனும் கருப் பொருளைக் கொண்டதாக இலங்கையில் இடம் பெற்ற முரண்பாடுகளின் பின்னர் ஏற்படவேண்டிய நல்லிணக்கத்திற்காகவும் சமூக ஒத்திசைவிற்காகவும் சமயங்களுக்கிடையில் மக்களுடன் மக்கள் இணைந்து செயற்படுவதனை வலுப்படுத்தல் முரண்பாடுகளின் காரணமாக மூன்று தசாப்தங்களாக பிளவு பட்டுள்ள மக்கள் பிரிவினர் ஒருவரை ஒருவர் சந்தித்து கலந்துரையாடும் வகையில் செயற்பட ஆதரவு  வழங்குவதன் மூலம் கடந்த காலங்களில் ஏற்பட்டுவிட்ட மாறாத கசப்புணர்கவுளை தொடர்ந்தும் நிலைபெறச் செய்யாது அவர்களிடையே ஆழ்ந்த புரிந்துணர்வை பேணி வளர்த்தல் சகிப்புத் தன்மை, மற்றும் ககோதரத்துவம் இஒத்துழைப்பு என்பவற்றின் மூலம் பன்மை வாத தேசியத்துவ அடையாளத்தை வளர்க்கவும் பயனுள்ள வகையில் பெறுமானங்களை பகிர்ந்து க

கல்முனை பொதுச் சந்தைக்கு பொருத்தமான இடம் தற்போதைய அமைவிடமே.

Image
(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை பொதுச் சந்தையினை வேறு இடத்தில் அமைப்பதனைவிட குறித்த சந்தையினை புணர்நிர்மாணம் செய்வதே சாலச் சிறந்ததாக காணப்படுவதாக கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தினர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்து அப்பணியினை விரைவுபடுத்தி செய்துதருமாறும் கேட்டுக்கொண்டனர்.  நகர திட்டமிடல் அமைச்சினால் கல்முனை பொதுச் சந்தையினை புணர் நிர்மாணம் செய்வதா அல்லது வேறு இடத்தில் புதிதாக அமைப்பதா என்பது தொடர்பாக கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தினரின் நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அறிந்து கொள்ளும்வகையிலான சந்திப்பு ஒன்றை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஏற்பாடு செய்திருந்தார். இதன்போதே குறித்த வர்த்தக சங்கத்தினர் மேற்கண்டவாறு வேண்டிக்கொண்டனர்.     விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் கல்முனை அலுவலகத்தில் இன்று (12) சனிக்கிழமை இரவு நடைபெற்ற மேற்படி சந்திப்பில் மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், நீர் வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சரின் இணைப்புச்

மருதமுனையில் மனாரியன் 99 ஏற்பாட்டில் மாபெரும் இரத்தான நிகழ்வு

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான மனாரியன் 99 அமைப்பு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இரத்தான முகாம் அண்மையில்(2017-08-05)மருதமுனை அல்-மதீனா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.இதில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப்  பொறுப்பான டாக்டர் என்.ரமேஷ்,  டாக்டர் எம்.எம்.அறபாத் முகம்மட் , மனாரியன் தலைவர் எம்.எம்.எம்.எம்.பஸீல் , செயலாளர் பி.எம்.கலாமுடீன்  ஆகியோருடன் உறுப்பினர்கள்,  மற்றும்  தாதி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். 

கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை

Image
கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் நாளை முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் மேக மூட்டம் நிலவும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.  திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்நறுவை, அம்பாறை மாவட்டங்களில் 50 மில்லிமீற்றர்களை தாண்டிய மழைவீழ்ச்சி பதிவகலாம் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

சமுர்த்தி சிறுவர் கெகுலு கழகங்களுக்கிடையிலான கலை கலாசார போட்டிகள் - 2017

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரிவினால் நடாத்தப்படும் சமுர்த்தி சிறுவர் கெகுலு கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட கலை,கலாச்சாரப் போட்டிகள் அண்மையில் கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் சமுர்த்தி சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் எம்.சாலிஹ் தலைமையில் நடைபெற்றது. கல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவில் உள்ள 31சிறுவர் கழகங்களிலிருந்து தெரிவு  செய்யப்பட்ட சிறுவர்களுக்கான வலயமட்டப் போட்டிகள் நடாத்தப்பட்டு அதில் தெரிவு  செய்யப்பட்ட  சிறுவர்களுக்கான பிரதேச மட்டப்போட்டிகளே அண்மையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் பாடல் நட்டார்  பாடல், பேச்சு, அறிவிப்பு, சித்திரம்சி,றுவர்  கதை எழுதுதல்உ,ரைநடை எழுதுதல், செய்யூள் எழுதுதல், நடனம், குறுநாடகம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன இதில் 115 சிறுவர்கள் பங்குபற்றினார்கள் இச்சிறுவர்களிருந்து 1ஆம் இடங்களைப் பெற்ற 30 சிறுவர்கள் மாவட்ட மட்டப் போட்டிக்குத் தெரிவு  செய்யப்பட்டுள்ளனர். இச் சிறுவர்கள்  இம்மாதம் (ஆகஸ்ட்) 26ஆம்  திகதி அட்டாளைச்சேனையில் நடைபெறவுள்ள மாவட்ட மட்

கவிஞர் மருதமுனை ஜமீலின் “அவன் பையில் ஒழுகும் நதி” கவிதை நூல் வெயீடு

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனையைச் சேர்ந்த கவிஞர் ஜமீல் எழுதிய கவிதைகளின் தொகுப்பான “அவன் பையில் ஒழுகும் நதி”நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(23-07-2017)மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் புயல் காவியம் தந்த மர்ஹூம் மஜீத் அரங்கில் நடைபெற்றது. இதில் கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ் தலைமையுரையாற்றினார்.பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சட்டத்தரணியும் நிருவாக சேவை அதிகாரியுமான ஏ.எம்.அப்துல் லத்தீப் நூலின் முதன்மைப் பிரதியை வர்த்தகர் எம்.எச்.எம்.தாஜூதீனுக்கு வழங்கினார்.விஷேட அதிதி பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம், இலக்கிய அதிதி எழுத்தாளர் உமாவரதராஜன் ஆகியோர் விஷேட பிரதிகள்  ஹம்ஸா மஜீட்டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி ஆகியோருக்கு வழங்கினார்கள் அதிக அளவிலான எழுத்தாளர்களும், கவிஞர்களும் கலந்து கொண்டனர்.

நான்காவது தெற்காசிய கராதே சம்பியஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற சௌந்தரராஜா பாலுராஜ்

Image
தெற்காசிய கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய நான்காவது தெற்காசிய கராதே சம்பியஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தொடர்ச்சியாக 3 தங்கப் பதக்கங்களை வென்று கல்முனை சேனைக்குடியிருப்பை  சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் இலங்கை கராத்தே வரலாற்றில் புதிய சாதனை படைத்தார்.  இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் முதன் முறையாக நடைபெற்ற 4ஆவது தெற்காசிய கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (05) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. இதில் ஆண்களுக்கான சிரேஷ்ட பிரிவில் காட்டா(Kata) போட்டியில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் சௌந்தரராஜா பாலுராஜ் தங்கப் பதக்கம் வென்றார்.  முன்னதாக 2014ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய கராத்தே தோ சம்பின்ஷிப்பில் அவர் தங்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச கறுப்புப் பட்டியைக் கொண்டவரும் (Internatinal Black Belt 5 th  dann), வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிய நடுவராக தெரிவாகியுள்ளவருமான (Sensei) எஸ்.முருகேந்திரனின் கீழ் பாலுராஜ் பயிற்சிகளை முன்ன

ஒரு சட்டகத்துக்குள் எந்தக் கலைஞனும் தன்னைப் பொருத்திக் கொள்ளும் போது ஏற்படும் பாதிப்புகள் கவிஞர் ஜமீலுக்கும் நிகழ்ந்தன

Image
 எழுத்தாளர் உமாவரதராஜன் பீ.எம்.எம்.ஏ .காதர் வாழ்வனுபவங்கள் மூலம்  அலாதியான சில படைப்புகளை குழந்தைகளின் உலகம் பற்றிய படப்பிடிப்புகளைத்  தந்த அதே வேளை குழந்தைகளை எப்போதும் எல்லாக் கோணங்களிலும்  படம் பிடிக்க முயலும் வலிந்தெழுதும் ஒரு போக்கும்  கவிஞர் ஜமீலையும் பற்றிக்கொண்டது என எழுத்தாளர் உமா வரதராஜன் தெரிவித்தார். மருதமுனை ஜமீல் எழுதிய கவிதைகளின் தொகுப்பான“அவன் பையில் ஒழுகும் நதி” நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை(23-07-2017)மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் எழுத்தாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்றது இங்கு இலக்கிய அதிதியாக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது-நண்பர்  ஜமீல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கவிஞர் .இது அவருடைய ஏழாவது நூல் . ஐந்தாவதாக வெளிவரும் கவிதைத்தொகுப்பு  ஏற்கனவே வெளிவந்த அவருடைய கவிதைத் தொகுப்புகள் பெரும்பாலும்  குழந்தைகளை  மையமாகக் கொண்டவை .  .நாளடைவில்'குழந்தைகள் உலகக் ' கவிஞர் என்று  முத்திரை குத்தப் பட்டு விட்டார் .அந்த  முத்திரையை அவரும்

தாய்ப்பாலுக்கு நிகர் உலகில் எதுவும் இல்லை

Image
வைத்திய அதிகாரி எம்.ஏ.சி.எம். பஸால்   குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டாமல் புட்டிப்பால் வழங்குவதன் மூலம் உலகத்தில் வருடாந்தம் 08 மில்லியன் குழந்தைகள் மரணமடைவதாகவும் , உலகில் குழந்தைகளுக்கான நோய்  எதிர்ப்பு சக்தி கொண்ட மருந்து தாய்ப்பாலை தவிர வேறு எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தாய் சேய் நல  வைத்திய அதிகாரி எம்.ஏ.சி.எம். பஸால்  தெரிவித்தார். நிலைபேறான  தாய்ப்பாலூட்டலை  ஊக்குவிப்போம் என்ற தொனிப்பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட  உத்தியோகத்தர்களுக்கான விழிப்பூட்டல்  செயலமர்வு  இன்று  (09) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.அலாவுதீன் தலைமையில் நடை பெற்து.   தாய் சேய் நல  வைத்திய அதிகாரி எம்.ஏ.சி.எம். பஸால் , கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டனர் . தேசிய தாய்ப்பாலூட்டல் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில் வளவாளராக கலந்து கொண்டு தாய் சேய் நல  வைத்திய அதிகாரி எம்.ஏ.சி.எம். பஸால் தொடர்ந்து உரையாற்றுகையில் குழந்தைகளுக்

கபொத உயர்தர பரீட்சை நாளை செவ்வாய்கிழமை ஆரம்பம்

Image
 மூன்று இலட்சத்து 15 ஆயித்து 227 பரீட்சார்த்திகள் இம்முறை கபொத உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர். விசேட தேவைகளைக் கொண்ட 260 பேர் இம்முறை பரீட்சைகளுக்கு தோற்றுகின்றனர். பரீட்சை காலை 8.30க்கு ஆரம்பமாகவுள்ளது. பரீட்சார்த்திகள் காலை எட்டு மணியளவில் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சமூகம் அளிக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.      பரீட்சைக்கான அனுமதி அட்டையுடன் தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டு என்பனவற்றை கொண்டு வருவது கட்டாயமாகும். பரீட்சைக்கு சமூகமளிக்க முன்னர் நேர காலத்துடன் அனுமதி அட்டையை பரிசோதனை செய்வதுடன் தாம் விண்ணப்பித்துள்ள பாடம் மற்றும் மொழி கையெழுத்து உறுதி செய்யப்பட்ட விடயங்கள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமாயின் அது தொடர்பாக பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.   இம்முறை பரீட்சையின் போது பரீட்சார்த்திகள் ஸ்மாட் கைக்கடிகாரம், கையடக்க தொலைபேசி, இலத்திரனியல் உபகரணங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுகின

கல்முனையில் நடை பெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா

Image
கல்முனையில் நடை பெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று புதன் கிழமை கல்முனை உவெஸ்லி கல்லூரி நல்லதம்பி மண்டபத்தில் நடை பெற்றது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வு மர்ஹூம் ஏ.எல்.எம்.பளீல் அரங்கில் நேற்று (02) கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைம ையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இறுதி நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் கௌரவ விருந்தினராகவும் ,திகாமடுள்ள மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கே.கோடீஸ்வரன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் சிவப் பிரியா வில்வரத்தினம் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சு செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர் கிழக்குமாகாணத்தில் பல்துறை சார்ந்தவர்களான உலகறிந்த எழுத்தளர்கள் உமா வரதராஜன், சோலைக் கிளி, அரசரெத்தினம் உட்பட 12 பேருக்கு கிழக்குமாகாண வித்தகர் விருதும், 09 பேருக்கு சிறந்த தமிழ் இலக்கிய நூல் விருதும்,10 இளங் கலைஞர்களுக்கான விருதும், 07 அரச உத்த