கல்முனை பொதுச் சந்தைக்கு பொருத்தமான இடம் தற்போதைய அமைவிடமே.


(அகமட் எஸ். முகைடீன்)



கல்முனை பொதுச் சந்தையினை வேறு இடத்தில் அமைப்பதனைவிட குறித்த சந்தையினை புணர்நிர்மாணம் செய்வதே சாலச் சிறந்ததாக காணப்படுவதாக கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தினர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்து அப்பணியினை விரைவுபடுத்தி செய்துதருமாறும் கேட்டுக்கொண்டனர். 

நகர திட்டமிடல் அமைச்சினால் கல்முனை பொதுச் சந்தையினை புணர் நிர்மாணம் செய்வதா அல்லது வேறு இடத்தில் புதிதாக அமைப்பதா என்பது தொடர்பாக கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தினரின் நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அறிந்து கொள்ளும்வகையிலான சந்திப்பு ஒன்றை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஏற்பாடு செய்திருந்தார். இதன்போதே குறித்த வர்த்தக சங்கத்தினர் மேற்கண்டவாறு வேண்டிக்கொண்டனர்.    

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் கல்முனை அலுவலகத்தில் இன்று (12) சனிக்கிழமை இரவு நடைபெற்ற மேற்படி சந்திப்பில் மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், நீர் வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றகுமத் மன்சூர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், ஏ.எம். றினோஸ், கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.பி. ஜமால்தீன் ஹாஜியார், செயலாளர் ஏ.எல். கபீர் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் விருப்பிற்கு அமைவாகவே எம்மால் குறித்த வேலைத்திட்டத்தை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் புணர்நிர்மாணப் பணியினை விரைவில் ஆரம்பிக்க தேவையான நடவடிக்கையினை மேற்கொள்வதாக இதன்போது தெரித்தார். அத்தோடு அதற்கான ஏற்பாடுகளை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.  

கல்முனை பொதுச் சந்தையினை புணர்நிர்மானம் செய்யும்வகையில் குறித்த சந்தைக்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் உரிமையாளருடனான உடன்படிக்கையுடன் தற்காலிக கூடாரங்களை அமைத்து சந்தை நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்