Posts

Showing posts with the label General

பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்

Image
இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின்   கல்முனை  பிராந்திய  சங்க  வருடாந்த  பொதுக் கூட்டம் எதிர்வரும் ஞாயிறுக்கிழமை (14)  நிந்தவூர் அட்டப் பள்ளம்  தோம்புக்கண்ட  விடுதியில் நடை பெறவுள்ளது . சங்கத்தின் தலைவர்  சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜெரீன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில்  மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார் .  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்  ஏ.அருள்குமரன் ,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.அலாவுதீன் ,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்  பிரதிப் பணிப்பாளர் டாக்டர்.ஏ.ஏ.இஸ்ஸடீன்  உட்பட இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின்  தலைவர் எம்.ஜீ.யு.ரோஹண  ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் 

கவிஞர் மருதமுனை ஜமீலின் “அவன் பையில் ஒழுகும் நதி” கவிதை நூல் வெயீடு

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனையைச் சேர்ந்த கவிஞர் ஜமீல் எழுதிய கவிதைகளின் தொகுப்பான “அவன் பையில் ஒழுகும் நதி”நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(23-07-2017)மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் புயல் காவியம் தந்த மர்ஹூம் மஜீத் அரங்கில் நடைபெற்றது. இதில் கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ் தலைமையுரையாற்றினார்.பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சட்டத்தரணியும் நிருவாக சேவை அதிகாரியுமான ஏ.எம்.அப்துல் லத்தீப் நூலின் முதன்மைப் பிரதியை வர்த்தகர் எம்.எச்.எம்.தாஜூதீனுக்கு வழங்கினார்.விஷேட அதிதி பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம், இலக்கிய அதிதி எழுத்தாளர் உமாவரதராஜன் ஆகியோர் விஷேட பிரதிகள்  ஹம்ஸா மஜீட்டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி ஆகியோருக்கு வழங்கினார்கள் அதிக அளவிலான எழுத்தாளர்களும், கவிஞர்களும் கலந்து கொண்டனர்.

ஒரு சட்டகத்துக்குள் எந்தக் கலைஞனும் தன்னைப் பொருத்திக் கொள்ளும் போது ஏற்படும் பாதிப்புகள் கவிஞர் ஜமீலுக்கும் நிகழ்ந்தன

Image
 எழுத்தாளர் உமாவரதராஜன் பீ.எம்.எம்.ஏ .காதர் வாழ்வனுபவங்கள் மூலம்  அலாதியான சில படைப்புகளை குழந்தைகளின் உலகம் பற்றிய படப்பிடிப்புகளைத்  தந்த அதே வேளை குழந்தைகளை எப்போதும் எல்லாக் கோணங்களிலும்  படம் பிடிக்க முயலும் வலிந்தெழுதும் ஒரு போக்கும்  கவிஞர் ஜமீலையும் பற்றிக்கொண்டது என எழுத்தாளர் உமா வரதராஜன் தெரிவித்தார். மருதமுனை ஜமீல் எழுதிய கவிதைகளின் தொகுப்பான“அவன் பையில் ஒழுகும் நதி” நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை(23-07-2017)மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் எழுத்தாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்றது இங்கு இலக்கிய அதிதியாக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது-நண்பர்  ஜமீல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கவிஞர் .இது அவருடைய ஏழாவது நூல் . ஐந்தாவதாக வெளிவரும் கவிதைத்தொகுப்பு  ஏற்கனவே வெளிவந்த அவருடைய கவிதைத் தொகுப்புகள் பெரும்பாலும்  குழந்தைகளை  மையமாகக் கொண்டவை .  .நாளடைவில்'குழந்தைகள் உலகக் ' கவிஞர் என்று  முத்திரை குத்தப் பட்டு விட்டார் .அந்த  முத்திரையை அவரும்

அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்

Image
அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாபெரும் அமைதிப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் இன்று (2017.01.21) கல்முனையில் நடை பெற்றது. தமிழர் பாரம்பரிய விளையாட்டில் ஒன்றான  ஜல்லிக்கட்டுக்கு  ஆதரவு  செலுத்தும் வகையில் தமிழர்களின் கலாச்சார பண்பாடுகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்பதை வலியுத்தியே இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம் பெற்றது. தமிழர் கலாச்சார பண்பாடுகள் தடை செய்யப்பட்டும் சீரழிக்கப்பட்டும் வருகின்ற  இச்சூழ் நிலையில் தமிழ்நாட்டு வாழ் உறவுகளின் போராட்டத்துக்கு உரம் சேர்க்கும் வகையில் கல்முனை வாழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவு  திரட்டும் வகையில் இந்த  அமைதிப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் கல்முனை நகரில் இடம் பெற்றது. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக ஒன்று சேர்ந்த இளைஞர்கள் அங்கிருந்து அமைதிப் பேரணியாக கல்முனை நகரை சென்றடைந்து அங்கு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்த கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல

அம்பாறை மாவட்ட புத்தாண்டு வழிபாடு

Image
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு பூர்த்தி விழாவில் உதயமாகியுள்ள 2017ஆண்டை வரவேற்று அம்பாறை மாவட்ட இந்து ஆலயங்கள் தோறும் வழிபாடுகள் இடம் பெற்றன. நற்பிட்டிமுனை அம்பலத்தடி வினாயகர் ஆலயத்தில் நடை பெற்ற பூஜை வழிபாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன் கலந்து கொண்டு வழிபட்டார். நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு பூர்த்தி விழாவில் உதயமாகியுள்ள புத்தாண்டில் நாட்டில் அனைத்து இனத்தவர்களும் நிரந்தர அமைதி பெற்று வாழ அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என அவர்  தெரிவித்தார்.  

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா

Image
( அஸீம் கிலாப்தீன்) உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா கொழும்பு இலங்கை மன்ற மண்டபத்தில் விபுலாநந்தா அரங்கில் தற்போது இடம்பெற்றது  இந்நிகழ்வில் இரண்டாம் நாள் நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் , மீள்குடியேற்ற இராஜாங்க ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அ லி ஆகியோர் கலந்து சிறப்பித்துக்கொண்டனர் . இந்நிகழ்வில் ஆய்வுக் கோவை , சிறப்பு மலர் வெளியீடு மற்றும் பேராளர்கள் கொளரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.

பொருட்கள்வி லை அதிகரித்தால் முறையிடலாம்

Image
கொண்டாட்ட காலம் ஆரம்பித்துள்ளதையடுத்து, ஒரு சில பொறுப்பற்ற வர்த்தகர்களால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதாக, பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபைக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அதன் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்தார். எனவே, இவ்வாறானவர்களை கண்காணிக்கும் வகையில், உடனடி சுற்றிவளைக்கும் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் பொருட்டு அவர்களை தெளிவூட்டும் வகையிலான, நடமாடும் விளிப்பூட்டல் பிரிவொன்றையும் அமைத்துள்ளதாக தெரிவித்தார். இதேவேளை, விழாக்கால வேளையில்  முறைப்பாடுகளை மேற்கொள்ள விசேட முறைப்பாடு சேவையையும் ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அறிவுரைக்கமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், பின்வரும் தொலைபேசிகளின் மூலம் பொதுமக்கள் தங்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார். மாகாணம்        தொலைபேசி இலக்கம் மேல்        0771088914/0771088907 தென்        0771088903 வடக்கு     0771088914 ஊவா

வெடிக்கும் Galaxy Note 7; சம்சங் மீளப் பெறுகை

Image
சம்சங் நிறுவனம் தயாரித்துள்ள Samsun Galaxy Note 7 கையடக்க சாதனம், திடீரென தீப்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து உலகின் பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அச்சாதனத்தை மீளப் பெறுவதற்கு சம்சங் நிறுவனம் தீர்மானித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டுள்ள குறித்த கையடக்க சாதனம், தற்போது வரை சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகளவில் விற்கப்பட்டுள்ளன.  ஆயினும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இன்று (02) அச்சாதனம் அறிமுகப்படுத்தப்படவிருந்த நிலையில், குறித்த கையடக்க சாதனம் தீப்பிடிப்பது தொடர்பில் இது வரை 35 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதனை மீளப் பெறுவதற்கு சங்சங் நிறுவனம் தீர்மானித்துள்ளது. சுமார் பல மில்லியன் கையடக்க சாதனங்கள் இவ்வாறு மீளப் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சம்சங் நிறுவனம், உலகம் முழுவதிலும் பல்வேறு இடங்களிலும் இருந்து தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளைத் தொடர்ந்து அதனை ஆராய்ந்து விரிவான கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்துக்கான பேரீத்தம்பழ விடயம் ஜனாதிபதி பிரதமர் கவனத்துக்கு சென்றுள்ளன

Image
 சவூதி அரசாங்கத்தினால் இலங்கை முஸ்லிம்களுக்கு நோன்புக்காக வழங்கப்பட்ட பேரீத்தம் பழ வினியோகத்தில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் புறக்கணிக்கப் பட்டிருப்பதாக அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் குற்றம் சாட்டியூள்ளது. இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு நூறு வீத பங்களிப்பை வழங்கிய அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் பாரிய அநீதி இழைக்கப் படுவதாகவூம் அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.சக்காப்.செயலாளர் எம்.ஏ.எம்.றஸீன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர் அவர்கள்; மேலும் தெரிவிக்கையில் கடந்த ஆண்டு 250 தொண் கிடைக்கப் பட்ட நிலையில் இந்த வருடம் 200 தொண்ணாக குறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டுடன்  ஒப்பிடுகையில்  20வீதமாககுறைக்கப்பட்டு  குறைந்தளவூ பேரீத்தப் பழ தொகையே அம்பாறை மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது. அதுவூம் ஒரு வாரம் கழித்தே கிடைத்துள்ளது. கிடைத்துள்ள குறைந்த தொiகையை சனத் தொகைக்கேற்ப   நோன்பு நோற்கும் முஸ்லிம் கிராமங்களுக்கு பகிர்ந்தளிப்பதில் சிக்கல் நிலை தோண்றியூள்ளது.   இச்சம்பவம் தொடர்பாக முஸ்லிம் கலாச்சார திணைக்கள அதிகா

“கசகசா” ஒரு போதைப் பொருளா?

Image
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் “கசகசா” என்ற பொருள்ஒரு போதைப் பொருளாகும். இதைப் பற்றிய விளக்கத்தை பார்ப்போம். கசகசா வை ஆங்கிலத்தில் Opium Poppy என்று சொல்லப்படும். இந்த பப்பி விதை எனப்படும் கசகசா என்பது பப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அதுமுழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால் பசுமை நிறத்தில் இருக்கும்போது அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போதுஅந்த விதைப் பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம் என்ற போதைப்பொருள். இந்த கசகசாவை ஓராளவுக்கு மேல் சாப்பிட்டால் போதையை கொடுக்கும். இதனால்தான் துபாய், கத்தார்,குவைத், ஓமான், சவூதி அரேபியா, சிங்கப்பூர், மலேசிய போன்ற நாடுகளில் இந்த கசகசா போதை பொருள்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த நாடுகளுக்கு கசகசாவை கொண்டு சென்று பிடிப்பட்டால் சிறை தண்டனை நிச்சயம். கசகசா தொடர்பாக புதிய தலைமுறை என்ற தமிழக வாரப் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு செய்தியைபாருங்கள். சென்னையில் இருக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள்

கல்முனை செலான் வங்கி கிளையில் இடம் பெற்ற புத்தாண்டு கொடுக்கல் வாங்கல்

Image
( யூ.எம்.இஸ்ஹாக் ) புத்தாண்டுக் கொடுக்கல் வாங்கல் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்வு இன்று  வெள்ளிக்கிழமை சுப வேளையில் கல்முனை செலான் வங்கி கிளையில்  நடை பெற்றது .  வங்கி முகாமையாளர்  திருமதி .பிறேமினி மோகன்ராஜ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  சமயப் பெரியார்கள் ,வாடிக்கையாளர்கள்  என  கலந்து  கொண்டனர் . நிகழ்வில்  பரிசுகள்  வழங்கப் பட்டதுடன்  பால் சோறு ,பலகாரமும் பரிமாறப் பட்டன . வங்கி உதவி முகாமையாளர்   உட்பட  ஊழியர்கள் சகலரும் கலந்து கொண்டனர் .

மாவடிப் பள்ளி கிராமத்தில் அச்சுறுத்தும் காட்டு யானைகள்

Image
காரை தீவுக்கும் சாம்மாந்துறைக்கும்  இடைப்பட்ட மாவடிப் பள்ளி கிராம மக்கள் காட்டு யானைகளின் தொல்லைக்கு முகம் கொடுத்துள்ளனர் . கடந்த சில நாட்களாக 03 யானைகள் தினமும் அச்சுறுத்தலைக்  கொடுத்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமன்றி பிரதான வீதியில் பயணிக்கும் பயணிகளையும் இரவு வேளையில்  அச்சுறுத்துகின்றது. இதனை  அரச அதிகாரிகளும்  அரசியல் வாதிகளும் கவனத்தில் எடுத்ததாக தெரியவில்லை . தேர்தல் காலத்தில் பல வாக்குருத்க்ஹிகளை வழங்கும் அரசியல் வாதிகள் இந்த விடயத்தில் மௌனிகளாக இருப்பது கவலை அளிக்கின்றது .  

நற்பிட்டிமுனையில் 40 யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கி வைப்பு

Image
(யு.எம்.இஸ்ஹாக்) கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான றிஷாத் பதியூதீன் நிதி ஒதுக்கீட்டில்   நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமுக அபிவிருத்தி அமைப்பில் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த யுவதிகளுக்கு  தையல்  இயந்திரமும் ,சான்றிதழும் வழங்கி வைக்கும் நிகழ்வு  இன்று(02.04.2016) சனிக்கிழமை  இடம் பெற்றது.  அமைச்சரின் இணைப்பாளரும், கட்சியின் கல்முனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமுக அபிவிருத்தி அமைப்பின் தலைவருமான சி.எம்.ஹலீம்     தலைமையில் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகாவித்தியாலய  ஆராதனை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில்  6 மாத கால தையல்   பயிற்சியை முடித்த 100 யுவதிகளுக்கு சான்றிதழ்  வழங்கப் பட்டதுடன் பயிற்சியை பூரணமாக நிறைவு  செய்த  40 யுவதிகளுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப் பட்டன. .  திருமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.மஹ்ரூப் , கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் கட்சியின் உயர்