நற்பிட்டிமுனையில் 40 யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கி வைப்பு
(யு.எம்.இஸ்ஹாக்)
கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான றிஷாத் பதியூதீன் நிதி ஒதுக்கீட்டில் நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமுக அபிவிருத்தி அமைப்பில் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரமும் ,சான்றிதழும் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(02.04.2016) சனிக்கிழமை இடம் பெற்றது.
அமைச்சரின் இணைப்பாளரும், கட்சியின் கல்முனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமுக அபிவிருத்தி அமைப்பின் தலைவருமான சி.எம்.ஹலீம் தலைமையில் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகாவித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் 6 மாத கால தையல் பயிற்சியை முடித்த 100 யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டதுடன் பயிற்சியை பூரணமாக நிறைவு செய்த 40 யுவதிகளுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப் பட்டன. .
திருமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.மஹ்ரூப் ,கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் கட்சியின் உயர் பீட உறுப்பினருமான சீ.எம்.முபீத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும்,அரச வர்த்தக கூட்டுத்தாபனங்களின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல்,கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைதீன் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments
Post a Comment