Posts

Showing posts from April, 2017

சுமந்திரன், நிசாம் காரியப்பர் உள்ளிட்ட 25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமனம்

Image
சிரேஷ்ட சட்டத்தரணிகள் 25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.   இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33(2)(உ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்துக்கமைய சட்டத்தரணி தொழில்வாண்மையில் சிறப்பு பெற்றவர்கள் மற்றும் தொழில்வாண்மை செயற்பாடுகளில் நேர்மையாகவும், உன்னதமானவர்களுமான சட்டத்தரணிகள் ஜனாதிபதியால் இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.   அதற்கமைய  1. எம். ஏ. சுமந்திரன்   2. எம். நிசாம் காரியப்பர்   3. ஏ. எல். எம். ஹிதாயாத்துல்லா   4. விவேகாநந்தன் புவிதரன்   5. தயா பெல்பொல   6. ஆரிய பீ. ரெக்கவ   7. அனுர பண்டார மெத்தேகொட   8. நிஸ்ஸங்க நாணயக்கார   9. டபிள்யு. கே. அனுஜ கௌசிக்க பிரேமரத்ன   10. சமந்த ரத்வத்தே   11. விஜேரத்ன தர்மசேன   12. உபாலி சேனாரத்ன   13. பத்ம பண்டார   14. எஸ்.கே. மார்க் பீரிஸ்   15. கருணாரத்ன ஹேரத்   16. மஹேந்ர சுவந்தரத்ன   17. ஏ.பீ.சீ.எம். ஜயசேகர   18. மொஹான் வீரக்கோன்   19. பீ.ஆர்.எஸ்.பீ. சமரநாயக்க   20.

கிழக்கு மாகாண சபை வளாகம் வேலையற்ற பட்டதாரிகளால் முற்றுகை இடப்பட்டுள்ளது

Image
பிந்திய செய்தி  தங்களது பட்டங்களுக்கு ஏற்ற தொழில்வாய்ப்பை வழங்குமாறு கோரி, கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், கிழக்கு மாகாண சபை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (25) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, கிழக்கு மாகாண சபையின் மூன்று நுழைவாயில்களையம் மூடியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன்போது, கிழக்கு மாகாணசபையில் மாதாந்த அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக, நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடையுத்தரவை, திருகோணமலை தலைமையக பதில் பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல, பௌத்த துறவி ஒருவரிடம் வழங்கியபோது, அவர் அதனை கிழித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோரில் ஒரு சிலரை அழைத்த கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பட்டதாரிகள் வேலையற்றவர்களாக காணப்படுவதாக, மத்திய அரசாங்கத்திடம் எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். அதற்கான முடிவுகள் வரும்வரை எம்மால் எதனையும் செய்ய முடியாது என முதலமைச்சர் சுட்டிக்காட்டியதை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிரு

எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்க எந்த முடிவும் கிடையாது

Image
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க அரசாங்கம் எத்தகைய முடிவும் எடுக்கவில்லை எனவும் அது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்படவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,இது தொடர்பான சுதந்திரக் கட்சி கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது என ஜனாதிபதி இங்கு அறிவித்ததாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இங்கு பெற்றோலிய தொழிற் சங்கங்களின் போராட்டம் குறித்து ஆராயப்பட்டது.இதன் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, நடக்காத ஒன்றைப்பற்றி கற்பனையாக சிந்தித்து தொழிற்சங்கங்கள் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்திருந்தாலும் சுதந்திரக் கட்சியின் கொள்கைகளில் மாற்றம் இல்லை.அரச வளங்களை விற்பதற்கு சுதந்திரக் கட்சி எதிரானது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் நேற்று நடைபெற்ற சுதந்திரக் கட்சி ஊடக மாநாட்டில் பேசிய

மாணவர்களின் மனங்களை அறிந்து மதிநுட்பத்துடன் மனநிறைவோடு கற்பித்தவர் எங்கள் ஆசான் தாஹிர் சேர்

Image
நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப்  (பி.எம்.எம்.ஏ.காதர்) கற்பித்தலின் நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் கற்பித்து பல மாணவர்களை உருவாக்கிய பெருமை நல்லாசான் ஓய்வு  பெற்ற அதிபர் ஏ.எல்.எம்.தாஹிர் அவர்களையே சாரும் என ஏ.எல்.எம்.தாஹீர் அதிபரின் மாணவரும் மன்னார்  மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான மேல் நீதிமன்ற நீதிபதியுமான தாவூத் லெப்பை அப்துல் மனாப் தெரிவித்தார். ஓய்வு  பெற்ற அதிபர் ஏ.எல்.எம்.தாஹிர் அவர்களின் சேவையைப் பாராட்டி அவரிடம்  கற்ற மாணவர்கள் அமைப்பான மருதமுனை ஷம்ஸ் உயர்தர வட்டம்  ஏற்பாடு செய்த மகிழ்ச்சிப் பிரவாக விழா ஞாயிற்றுக்கிழமை (16-04-2017)மருதமுனை அல்-மதீனா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது இங்கு உரையாற்றி போதே நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.  ஓய்வு  பெற்ற ஏ.எல்.எம்.தாஹிர் அதிபரின் மாணவரான கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏ.எல்.எம்.தாஹிர் அதிபரிடம் உயர்தரம் கற்ற மாணவர்களும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இங்கு நீதிபதி தாவூத் லெப்பை அப்து

கல்முனை பிரதேசத்தில் இன்று எரிபொருளுக்கு ஏற்பட்ட நெரிசல்

Image

மீத்தொட்டமுல்ல; ஜப்பான் நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம்

Image
குறுகிய கால நடவடிக்கைகள்: - அடித்தளத்தை பலப்படுத்தி பொலித்தீனால் மூடுதல் - மழை காலத்துக்கு முன்னதாக குப்பை மேட்டின் அமைப்பை மலை போன்ற  (ஈர்ப்பு சக்திக்கமைய)  வடிவத்திற்கு மாற்றுதல்   நீண்ட கால நடவடிக்கைகள்: -  குப்பைமேட்டின் அளவை படிப்படியாக குறைத்தல்  -  மீள்சுழற்சி, மின்சாரம் மற்றும் இயற்கை உர உற்பத்தி செய்தல்   மீத்தொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தத்துக்கு காரணமான விடயங்கள் மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான சம்பவம் ஏற்படுவதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விதந்துரைப்பதற்காக வருகை தந்த ஜப்பானிய நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று (24) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டது.    பிரதிநிதிகள் குழுவின் தலைவரான Mitsutake Numahata வினால் குறித்த அறிக்கை, ஜனாதிபதியிடம் வழங்கி தமது விதந்துரைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.   குறித்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான குறுங்கால நடவடிக்கையாக குப்பைமேட்டின் அடித்தளத்தை பலப்படுத்தி பொலித்தீனால் மூடுதல் மற்றும் மழை காலத்துக்கு முன்னதாக குப்பை மேட்டின் அமைப்பை மலை போன்ற வட

கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சை எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பம்

Image
தென்கொரியாவில் தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்களுக்கான கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சை எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த பரீட்சை பன்னிபிட்டியவில் அமைந்துள்ள கொரிய களனி மத்திய நிலையத்தில் தொடர்ந்து நான்கு மாதங்கள் நடைபெறும் என்று இலங்கை லேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இந்த பரீட்சையில் சுமார் 23 ஆயிரம் இளைஞர் யுவதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் நாளாந்தம் 320 பேர் தோற்றவுள்ளனர். இம்முறை பரீட்சைகள் கணனியூடாகவே நடைபெறவுள்ளதாகவும் பரீட்சைக்கான திகதி நேரம் மற்றும் பரீட்சை நிலையம் குறித்த மேலதிக விபரங்களை www.slbfe.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதிபர் ஜெஸ்மினாவுக்கு வீடு தேடிச் சென்ற சேவை நலன் பாராட்டு !!

Image
நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் ஓய்வு பெற்ற நற்பிட்டிமுனை லாபிர்  வித்தியாலய அதிபர்  திருமதி ஜெஸ்மினா ஹாரீஸ் அவர்களுக்கு நடை பெற்ற  சேவை நலன் பாராட்டு விழா அவரது தெஹிவளை வீட்டி ல்  நடை பெற்றது . நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில் அமைப்பின் செயலாளர்  யு.எல்.எம்.பாயிஸ்  உட்பட அமைப்பின் அங்கத்தவர்களும்  நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகாவித்தியாலய பிரதி அதிபர் வீ.எம்.ஸம்ஸம் ,ஆசிரியை கே.எல்.குழந்தையும்மா ,நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய ஆசிரியர் எம்.எல்.அஷ்ரப் ஆகியோரும் மாணவர்களும் பெற்றோர்களும்  நிகழ்வில் கலந்து கொண்டனர்

சு.க. மட்டு மாவட்ட புதிய அமைப்பாளர் சுபைருக்கு ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து

Image
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் நோக்குடன் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சிப் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் காத்திரமான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 7 புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.  இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் துடிப்பான இளம் அரசியல் வாதியான எம்.எஸ்.சுபைர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமையான கட்சிக்கு பல நன்மைகளை ஈட்டித்தரும். 

அளுத்கம மக்களுக்கு நஷ்டஈட்டை வழங்க அமைச்சரவைப் பத்திரம்!

Image
ந.தே.முவின் குற்றச்சாட்டுக்கான விளக்கம்  அளுத்கம கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாட்சி அரசு உடனடியாக நஷ்டஈட்டினை வழங்கவேண்டும் என அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தியதை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய  நஷ்டஈடு வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பொய்யான பரப்புரைகள் செய்யப்பட்டுவருவதாக  புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் அண்மையில் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையொன்றில், அளுத்கம மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவது சம்பந்தமான ஆதாரமற்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்.  அவர் தனது ஊடக அறிக்கையில், அளுத்கம கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 33 வாரங்களைக் கடந்து விட்டபோதிலும் முறையான நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம் எம்பிக்களால் முடியாது போயுள்ளதாகவும், அதற்கான முயற்சிகளை அவர்கள் செய்வதில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  அளுத்கம

பாடசாலைகளில் டெங்கு அடையாளம் கண்டால் அதிபர் மீது வழக்கு

Image
பாடசாலைகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் டெங்கு நுளம்பு உற்பத்தியாவது அடையாளம் காணப்பட்டால் குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் குறித்த அரச நிறுவனத்தின் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கட்டுமானப் பணிகள் இடம்பெறும் பகுதியில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டால் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தப்படவிருப்பதுடன், பயன்படுத்தாதுள்ள மீன்பிடிப் படகுகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். கல்வி அமைச்சு அதிகாரிகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சின் அதிகாரிகள், மீன்பிடித்துறை அமைச்சின் அதிகாரிகள், முப்படையினருடன் நடத்திய விசேட கலந்துரையாடலில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது பற்றி கலந்துரையாடப்பட்டதாகவும், இதிலேயே மேற்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் கூறினார். இச்சந்திப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று அமைச்சில் நடைபெற்றது. இரண்டாம் தவணைக்காக பாடசாலை

சென்னை காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கற்கை நிலைய இலங்கை ஆலோசகராக என்.எம். அமீன் நியமனம்

Image
சென்னை காயிதே மில்லத் கல்வி சமூக நம்பிக்கை நிதியம் ஆரம்பிக்கும் காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்விக்கான அகடமியின் திறப்பு விழா எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நடைபெறும். ஆரம்ப நிகழ்வில் மலேசியாவின் வர்த்தக ஆலோசனைக்குழுவின் தலைவர் தாத்தோ முஹம்மது இக்பால் முன்னிலையில் காயிதே மில்லத் கல்வி சமூக நிறுவனத்தின் தலைவர் பத்மபூஷணம் மூஸா ராஸா தலைமையில் நடைபெறும். கஸ்தூரி ஸம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீ என் ராம் அங்குரார்ப்பண உரை நிகழ்த்துவார். இந்த நிகழ்வில் நக்கீரன் வார இதழின் பிரதம ஆசிரியர் ஆர். கோபால், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ். ஸாதிக், நவமணிப் பத்திரிகை பிரதம ஆசிரியர் என். எம். அமீன், மஹிந்தா நேயம் அகடமியின் ஸ்தபாகர் எஸ். துரை சாமி, சிரேஷ்ட ஊடகவியலாளர் கனி ஆகியோர் உரையாற்றவுள்ளதோடு, காயிதே மில்லத் சர்வதேச சமூக நம்பிக்கை நிதியத்தின் செயலாளர் எம். ஜீ. தாவூத் மீயாகான் அறிமுக உரை நிகழ்த்தவுள்ளார். இந்த ஊடகக் கல்லூரியின் ஆலோசனைக்குழுவின் தலைவராக மூஸா ராஸாவும் செயலாளராக எம். ஜீ. தாவூத் மீயாகானும் பணி புரிவதோடு, அங்கத்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

Image
 முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மறிச்சிக்கட்டி மக்களின் பிரச்சினை  அரசியல் கண்கொண்டு பார்க்க வேண்டியதோ ,கட்சிகள் நிறங்கள்  சார்பாக பார்க்க வேண்டிய விடயமோ அல்ல . இது ஒரு சமுதாயத்தின் உரிமைப்  பிரச்சினை மறிச்சிக்கட்டியில் இன்று ஏற்பட்டிருக்கும் ஆபத்து இந்த நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லீம்களையும் பாதிக்கக்கூடியது .எமது போராட்டத்திற்கு   தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்குகின்ற அதே வேளையில் முஸ்லீம் அரசியல் தலைமைகள் கட்சி நிறம் பார்த்து பிரித்து செயற்ப்படுவது சமுகத்திற்கே   வெட்க கேடான விடயம் . இவ்வாறு முசலி பிரதேச அபிவிருத்தி குழு ஆலோசகர் M.L.S.அலிகான் ஷரீப் தெரிவித்தார் மறிச்சிக்கட்டியில் கடந்த 20 நாட்களாக இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம்கள் பலர் இணைந்து கொண்டனர் . கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் C.M.முபீத் தலைமையில் சென்ற குழுவினர் அந்த மக்களுடன் இணைந்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர் . அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அலிகான் ஷரீப் மேற்கண்டவாறு பேசினார் அவர் அங்கு மறிச்சிக்கட

நற்பிட்டிமுனை சிறுவர்கள் பாராளுமன்றத்தை பார்க்கும் அரிய வாய்ப்பு

Image
கடந்த வருடம் ஐந்தாம் தர புலமை பரீட்சையில் சித்தி பெற்ற நற்பிட்டிமுனை மாணவர்களுக்கு நற்பிட்டிமுனை அல் - கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் கெளரவிப்பு நிகழ்வு அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் 2016.11.08 நடை பெற்ற போது அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்வி ராஜாங்க அமைச்சர் வீ . ராதா கிருஷ்ணன் மாணவர் களுக்கு நினைவு சின்னம் வழங்கி வைத்தார் . அவர் அன்று அந்த நிகழ்வில் உரையாற்றும் போது நற்பிட்டிமுனை சாதனை மாணவர்களுக்கு எனது பரிசாக பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தையும் அன்றய தினம் பாராளுமன்றில் மதிய உணவையும் வழங்கி கெளரவிப்பேன் என்றும் அதற்கான ஏற்பாட்டினை தம்பி ஹலீம் ஏற்பாடு செய்யும் படியும் வாக்குறுதி வழங்கினார் . கல்வி ராஜாங்க அமைச்சர் வழங்கிய வாக்குறுதி கடந்த திங்கட் கிழமை (17)நிறைவேற்றப் பட்டுள்ளது . " நற்பிட்டிமுனை சாதனையாளர்களின் பாராளுமன்றம் நோக்கிய பயணத்தில் " சாதனை மாணவர்கள் 10 பேரும் அவர்களது பெற்றோர்களும் ,உறவினர்களும் ,ஆசிரியர்கள் மற்றும் நற்பிட்டிமுனை அல் - கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில்