கிழக்கு மாகாண சபை வளாகம் வேலையற்ற பட்டதாரிகளால் முற்றுகை இடப்பட்டுள்ளது
தங்களது பட்டங்களுக்கு ஏற்ற தொழில்வாய்ப்பை வழங்குமாறு கோரி, கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், கிழக்கு மாகாண சபை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று (25) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, கிழக்கு மாகாண சபையின் மூன்று நுழைவாயில்களையம் மூடியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதன்போது, கிழக்கு மாகாணசபையில் மாதாந்த அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக, நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடையுத்தரவை, திருகோணமலை தலைமையக பதில் பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல, பௌத்த துறவி ஒருவரிடம் வழங்கியபோது, அவர் அதனை கிழித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோரில் ஒரு சிலரை அழைத்த கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பட்டதாரிகள் வேலையற்றவர்களாக காணப்படுவதாக, மத்திய அரசாங்கத்திடம் எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
Comments
Post a Comment