Posts

Showing posts from April, 2014

கிழக்கு மாகாண வைத்திய சாலைகளில் கடமையாற்றும் சகல சிற்றூழியர்களுக்கும் அடுத்த மாதத்திலிருந்து மேலதிக நேரக் கொடுப்பனவை அதிகரித்து வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை

Image
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றுகின்ற சகல சிற்றூழியர்களுக்கும் அடுத்த மாதத்திலிருந்து மேலதிக நேரக் கொடுப்பனவை அதிகரித்து வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கிழக்கு மாகாண வைத்திய சாலைகளில் கடமையாற்றும் சிற்றூழியர்கள் நீண்ட காலமாக  மேலதிக நேரக் கொடுப்பனவூ  அதிகரிப்புக்கு விடுத்த கோரிக்கைக்கு தீர்வூ எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்திய சாலைகளில் கடமையாற்றும் சகல உத்தியோகத்தர்களுக்கும் மேலதிக நேரக் கொடுப்பனவூ  அவர்கள் திருப்தியளிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் சிற்றூழியர்களுக்கு மாத்திரம் அவ்வாறு வழங்கப் படாமை  பாரியதொரு குறையாக  இருந்து வந்துள்ளது. அனேகமான வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சிற்றூழியர்கள் தங்களது கடமை நேரத்துக்கு மேலதிகமாக  நாளொன்றிற்கு  பல மணித்தியாலங்கள் கடமையாற்ற வேண்டிய நிரப்பந்தம் ஏற்பட்டு  அவ்வாறு கடமையாற்றி வந்த போதும் அதற்கான கொடுப்பனவை வழங்காமல் ஆகக் கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 40 மணி நேர மேலதிக கொடுப்பனவே சிற்றூழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. குறித்த இவ்விடயத்தை  கிழக்கு மாகாண சுகாதார

மட்டக்களப்பில் ஊடகத்துறை வகுப்புக்கள் ஆரம்பம்!

Image
தலைநகரில்  ஊடகக் கல்வியை வழங்கி வரும் வொய்ஸ் ஒவ் மீடியா நிறுவனம் தனது மட்டக்களப்புக் கிளையில் புதிய ஊடகக் கற்கை நெறிகளை ஆரம்பிக்கவிருக்கின்றது. எதிர்வரும் மே மாதம் 4 ஆம்திகதி முதல் அறிவிப்பாளருக்கான ஒலிபரப்பு (Announcing ) கற்கை வகுப்புக்கள் ஆரம்பமாகின்றன. சிரேஸ்ட அறிவிப்பாளர்  கலாநிதி அழகையர்  சசாங்கன் சர் மா ஒலிபரப்பு தொடர்பான அறிமுக வகுப்பை நடாத்த இருக்கின்றார்  6 மாத டிப்ளோமா சான்றிதழ் கற்கை நெறியானது பிரதி ஞாயிறு தோறும் கல்லடி நொச்சி முனையில் அமைந்துள்ள வொய்ஸ் ஒவ் மீடியாவின் கிளை அலுவலகத்தில் ஒலிபரப்பு துறையில் ஆர்வமுள்ளவர்கள் முற்பதிவுடன் இக்கற்கை நெறிகளில் பங்குபற்றலாம். 0652222832 அல்லது 0712164061 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலமாக மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளலாம். இதேவேளை பத்திரிகைத் துறையில் நடைபெறவூள்ளது. கொழும்பிலிருந்து வருகைதரும் சிரேஸ்ட அறிவிப்பாளர்கள்  இந்த கற்கை வகுப்புக்களை நடாத்துவர் . (Journalism) ஆர் வமுள்ளவர் களுக்கான இதழியல் கற்கைநெறிக்கான பதிவுகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. ஆர்வமுள்ளவர்கள் தொடர் புகொண்டு பதிவு களை மேற்கொள்ள முடியும். ஊடக

கல்முனை பொது நூலகத்தை புனரமைப்பு செய்து, முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் பெயரை சூட்ட தீர்மானம்!

Image
கல்முனை மாநகரில் அமைந்துள்ள பொது நூலகத்தை புனரமைப்பு செய்து, அந்நூலகத்துக்கு முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களது பெயரை சூட்டுவதற்கு தீர்மானித்திருப்பதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார். கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போதே முதல்வர் இந்த அறிவிப்பை  வெளியிட்டார். 1980ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களினால் அமைக்கப்பட்ட இந்நூலக கட்டிடத் தொகுதி, பின்னர் யுத்த சூழ்நிலை காரணமாக கல்முனை பொலிஸ் நிலையமாக இயங்கி வந்தது. சில வருடங்களின் பின்னர் மீண்டும் அது நூலகமாக செயற்பட ஆரம்பித்த போதிலும் நீண்ட காலமாக தேவையான புனரமைப்பு செய்யப்படாமல் பொலிவிழந்து காணப்படுகிறது. இது தொடர்பில் நான் முதல்வராக பதவியேற்றது முதல் பல தரப்பினரும் என்னிடம் சுட்டிக்காட்டி வலியுறுத்தி வந்துள்ளனர். அதனால் யூ.என்.ஹெபிட்டாட் நிதியில் சுமார் 23 லட்சம் ரூபா செலவில் இந்நூலகத்தை புனரமைக்கும் வேலைத் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்க தீர்மானித்துள்ளேன் என்றும் அதற்கு அந்நூலகத்தின் பிதா மகனான முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்

பொதுபல சேனா மற்றும் இனவாதத்தைத் தூண்டும் அமைப்புக்களுக்கு எதிராக கல்முனை மாநகர சபையில் கண்டன பிரேரணை நிறைவேற்றம்.

Image
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று முதல்வர் நி ஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது. இதில் பொதுபல சேனா அமைப்பினர் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கும் செயற்பாடுகள் மற்றும் இனவாதத்தைத் தூண்டும் அமைப்புக்களுக்கு எதிராக மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்வினால்  கொண்டுவரப்பட்ட  கண்டன பிரேரணை  ஏக மனதாக  நிறைவேற்றப்பட்டு  கண்டன உரை நிகழ்த்தப்பட்டது. (கண்டன பிரேரணையின் போது ஆற்றிய உரையின் சுருக்கம் பின்னர் பதிவேற்றம் செய்யப்படும்) இங்கு தொடர்ந்து உரையாற்றிய பறக்கத்துள்ளாஹ், இன்று பௌத்த கடும்போக்கு அமைப்புக்களினால் அடிக்கடி முஸ்லிம்கள் சீண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றும், இது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும் என்றும்   குறிப்பாக பொதுபலசேனா அமைப்பினால் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதக் கருத்துக்களை பகிரங்கமாக பரப்பிக் கொண்டிருக்கின்றனர். சிங்கள மக்கள் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்லர். அதேபோல் முஸ்லிம்களும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர் என்பதை நன்கு புரிந்துகொண்டிருக்கின்றனர். சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து முஸ்லிம்கள் இணைந்து செயற

புத்தாண்டு கலாச்சார விளையாட்டுப் போட்டியின் வினோத உடைப் போட்டி

Image
கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் நடை பெற்ற புத்தாண்டு கலாச்சார விளையாட்டுப் போட்டியின் வினோத உடைப் போட்டியில் பங்குபற்றியவர்களைப் படங்களில் காணலாம்.

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்களுக்கான பயிற்சி பட்டறை

Image
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் கழக அங்கத்தவர்கள் மற்றும் மத்தியஸ்த சங்க உறுப்பினர்களுக்கான உதைபந்தாட்டம் மற்றும் அதனோடிணைந்த நுணுக்கங்கள் சம்மந்தமான பயிற்சி பட்டறை ஞாயிற்றுக்கிழமை (27) மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதான கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இப்பயிற்சி பட்டறையை இச்சங்கத்தின் தலைவரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார். பயிற்சி பட்டறையின் முக்கிய வளவாளராக ஆசிய உதைபந்தாட்ட சங்கத்தின் இணைப்பாளர் எம்.சீ. ஜமால்டீன் பங்கு கொண்டு உதைபந்தாட்டம் தொடர்பான முக்கிய நுணுக்க செயற்பாடுகள் தொடர்பாக விரிவான விளக்கங்களை தமிழ், சிங்கள மொழிகளில் விளக்கமளித்தார். இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் மற்றும் இச்சங்கத்தின் உறுப்பினர்களும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தில் அங்கம் வகிக்கும் 27க்கு மேற்பட்ட கழகங்களில் அங்கம் வகிக்கும் வீரர்களும் 20 மத்தியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

கல்முனை உவெஸ்லியன் 78 பழைய மாணவர்களின் முயற்சி

Image
கல்முனை உவெஸ்லியன் 78 பழைய மாணவர் அமைப்பினரால்  கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின்  பிரதான நுழைவாயில் நவீன  வடிவமைப்பில்  நிர்மாணிக்கப் பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கென 12 இலட்சம் ரூபா செலவு செய்யப் பட்டுள்ளதாக அமைப்பின் செயலாளர் தாவூத் உவைஸ் தெரிவித்துள்ளார் .

ஜனாதிபதிக்கு பஹ்ரெயினின் அதி உயர் விருது

Image
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பஹ்ரெயினுக்குச் சென்றுள்ள  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பஹ்ரெயின்  அரசாங்கத்தின் உயர் விருதான 'கலீபா விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டார். பஹ்ரெயின் மன்னர்  ஹமாத் பின் இசா அல் கலிபா இந்த விருதை வழங்கினார். இரண்டாவது எலிசபேத் மகாராணி, சவூதி அரேபிய மன்னர் உள்ளிட்ட சிலருக்கு மாத்திரமே இதுவரை இந்த உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.  'நட்பு நாடுகளுடன் இலங்கை பேணிவரும் இருதரப்பு உறவுகள், அபிவிருத்திகள் மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து நாம் பெருமிதம் அடைவதுடன், நாட்டை சர்வதேச தளத்திற்கு உயர்த்த தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் உங்கள் முயற்சிகளை வரவேற்று இந்த விருதை வழங்குகிறோம்' என்று பஹ்ரேன் மன்னர் தெரிவித்தார்.

நற்பிட்டிமுனை சாகுல் ஹமீட் மௌலவி வபாதானார்

Image
நற்பிட்டிமுனை  மௌலவி சாகுல் ஹமீட்  இன்று வபாதானார் .அன்னாரது  ஜனாஸா இன்று 29.04.2014 மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இவர்  முன்னாள் நற்பிட்டிமுனை ஜும்மா  பள்ளி தலைவரும் ஓய்வு பெற்ற மௌலவி ஆசிரியருமாவார் . 

கிழக்கு மாகாண ஆளுநருடன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் றிஸான் சந்திப்பு!

Image
இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிஸானுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் றியல் அட்மிரல் மொஹான விஜயவிக்கிரம அவர்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று இன்று ஆளுநரின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்றது. எமது நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டில் அம்பாறை மாவட்;ட இளைஞர் பிரதிநிதியாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிஸான் கலந்து கொள்ளவுள்ளார். இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிஸான் முன்னெடுத்துவரும் செயற்றிட்டங்களுக்கு ஆளுநர் இதன்போது பாராட்டுக்களை தெரிவித்தார். அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகளின் கல்வி, உயர் கல்வி, சுயதொழில் போன்ற துறைகளின் அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கான நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான விஜயவிக்கிரம அவர்களின் தலைமைத்துவத்தினையும் நேர்த்தியான சேவையினையும் பாராட்டி ஞாபகச் சின்னமொன்றை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.

சாய்ந்தமருதில் சாதனையாளர் கௌரவிப்பு விழா ஊடகவியலாளர் மாநாடு

Image
சாய்ந்தமருது பிரதேசத்தின் கல்வி பொருளாதார ஒழுக்க விழுமியங்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றுகின்ற சபையாக 99 மரைக்காயர்மார்களைக் கொண்ட சாய்ந்தமருது புதிய நம்பிக்கையாளர் சபை செயல்படும் என நம்பிக்iயாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனீபா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபையினால் ஐந்தாம் தர புலமைப் பரீட்சைஇ கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சைகளில் சாதனை படைத்த 100 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்படவூள்ளனர். இந்த சாதனையாளர் கௌரவிப்பு விழா  அடுத்த மாதம்(மே) 04ஆம் திகதி நடை பெறவூள்ளது. இவ்விழா தெடர்பாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று திங்கட் கிழமை(28) இரவூ சாய்ந்தமருது ஜும்மாப்பள்ளி வாசல் அலுவலக மண்டபத்தில் நம்பிக்கையாளர் சபை தலைவர் வை. எம்.ஹனீபா தலைமையில் நடை பெற்றது. நம்பிக்கையளர் சபை அங்கத்தவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். தலைவர் வை.எம்.ஹனீபா அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் சாய்ந்தமருதில் உள்ள அனைத்து நிறுவனங்களையூம் ஒருங்கிணைத்து செயல்படுத்துகின்ற நிறுவனமாக பள்ளிவாசல்கள்

சமய முரண்பாடுகளை ஆராயும் பொலிஸ் பிரிவு அங்குரார்ப்பணம்

Image
சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்கான விசேட பொலிஸ் பிரிவு சற்றுமுன்னர் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. கொழும்பு, தர்மபால மாவத்தை இலக்கம் 135இல் அமைந்துள்ள பௌத்த மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் 7ஆவது மாடியில் இந்த விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டது. சமய முரண்பாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கின்ற பொலிஸ் நிலையங்களில் செய்யப்படுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் திருப்தி கொள்ளாவிடின் இந்த பிரிவில் முறையிடலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார். இந்த முறைப்பாடுகள் தொடர்பில் 0112307674 அல்லது 0112307964 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டோ 0112307688 அல்லது 0112307406 ஆகிய தொலைநகல் இலக்கங்களுகோ அறிவிக்க முடியும் எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். இந்த புதிய பொலிஸ் பிரிவில், உதவி பொலிஸ் அதிகாரியின் கீழ் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள்கள் அறுவர் கடமையாற்றுவர் என்றும் அவர் மேலும் கூறினார். இந்த பொலிஸ் பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் தி.மு.ஜயரட்ன, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், பௌத்த மதவிவகார அமைச்ச

விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்கிறார் ஹசனலி

Image
வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமையும் எதிர்ப்பது என்றே அர்த்தப்படும் என தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி  கசினோ என்ற பதம் உள்ளடக்கப்பட்டிருந்தால் எதிர்த்து வாக்களித்திருப்போம் எனவும் தெரிவித்தார்.  அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டு நிறைவேறியுள்ள இக்கட்டளை தொடர்பில் எமக்கு சந்தேகம் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.  அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்களின் கீழான கட்டளை வாக்கெடுப்பில் மு.கா. கலந்து கொள்ளாமை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.  அது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இவ் கட்டளைக்கு நாம் வாக்களிக்காது இருந்தமை இதனை ஆதரிப்பதற்காகவோ அரசாங்கத்தை வலுப்படுத்தவோ அல்ல. முன்னர் இக்கட்டளை கொண்டு வந்த போது கசினோ என்ற பதத்தினை வலுப்படுத்தியிருந்தனர். எனினும் இம்முறை கசினோ என்ற பதம் அகற்றப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக வேறு மாற்று வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நாம் வாக்களிக்காது இருந்தோம்.  வாக்கெட

அகில இலங்கை அரசாங்கப் பொது ஊழியர் சங்கத்தின் மேதின நிகழ்வுகள் கல்முனை நகரில்

Image
அகில இலங்கை அரசாங்கப் பொது ஊழியர் சங்கத்தின் மேதின நிகழ்வுகள் சங்க தலைமையகம் அமைந்துள்ள கல்முனை நகரில் மே முதலாம் திகதி இடம்பெறவுள்ளதாகச் சங்கப் பொதுச் செயலாளர் எம்.எம்.ஏ.வகாப் தெரிவித்தார்.  சங்கத் தலைவரும், பிரபல தொழிற்சங்கவாதியுமான எஸ்.லோகநாதன் தலைமையில் கல்முனை மெதடிஸ்த மண்டபத்தில் அன்றைய தினம் மேதினப் பொதுக்கூட்டம் இடம்பெறும். அதற்கு முன்னர் கல்முனை நகரில் மேதின ஊர்வலமொன்றும் இடம்பெறும். யுத்தம் முடிவடைந்த பின்னர் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் தமது கிளைகளை வடக்கில் புனரமைத்தும், விஸ்தரித்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதால் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களிலிருந்தும் சங்கக் கிளை முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் கல்முனையில் நடைபெறும்  இந்த மேதின நிகழ்வுகளில் கலந்துகொள்வர் என தலைவர் லோகநாதன் தெரிவித்தார். சங்கத்தின் இணை நிறுவனமான வடக்கு, கிழக்கு மாகாண ஜீவோதய நலன்புரி நிறுவனமும் சங்கத்துடன் ஒருங்கிணைந்து இந்த மேதின நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார். 

கல்முனை மாநகர பிரதி முதல்வர் பதவியை நற்பிட்டிமுனை கிராமத்துக்கு வழங்க வேண்டும்

Image
கல்முனை மாநகர பிரதி முதல்வர் பதவியை நற்பிட்டிமுனை கிராமத்துக்கு வழங்குவதே பொருத்தம் என  நற்பிட்டிமுனை ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள்  கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை கேட்டுக் கொண்டுள்ளனர். கல்முனை தொகுதியில் பெரும் பான்மை  ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை கொண்ட நற்பிட்டிமுனை கிராமம் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப் படுவதாகவும் தேர்தல் காலங்களில் ஆசை காட்டி மோசம் பண்ணுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக இருந்த சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு இன்னும் எவரும் நியமிக்கப் படவில்லை .எனினும் பலர் ஊர் ரீதியாக அப்பதவியை பெற முயற்சிகின்றனர். கல்முனை மாநகர சபையில் கல்முனை குடி,மருதமுனை, சாய்ந்தமருது  ஊர்களை சேர்ந்தவர்கள் முதல்வர்களாகவும் ,பிரதி முதல்வர்களாகவும் இருந்து வந்துள்ளனர். எனினும் நற்பிட்டிமுனை கிராமத்துக்கு முதல்வர் பதவியை வழங்கும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் பிரதி முதல்வர் பதவியையாவது வழங்க வேண்டும் என அந்தஊர் மக்கள் கேட்டுக்கொள்கின்றனர். இந்த விடயத்தில் எமது கிராமத்துக்கு கல்முனை தொகுதி பாராளும

எங்கள் தேசம் செய்தி இணையத்தளம் அங்குரார்ப்பணம்

Image
எங்கள்தேசம்   செய்தி   இணையத்தளம்   நேற்று  ( சனிக்கிழமை )  இலங்கை   ஜமாஅத்தே இஸ்லாமியின்   தலைவர்   உஷ்தாத்   ரஷீத்   ஹஜ்ஜுல்   அக்பர்   அவர்களினால் உத்தியோகபூர்வமாக   அங்குரார்ப்பணம்   செய்யப்பட்டது .  ஜமாஅத்தே   இஸ்லாமியின்   ஊழியர் ஒன்றுகூடல்   மாதாம்பை   இஸ்லாஹிய்யா   அரபுக்கல்லூரியில்   நடைபெற்றபோது இணையதளம்   அங்குரார்ப்பணமும் ,  அறிமுக   நிகழ்வும்   நடைபெற்றது . இணையதள   அறிமுக   உரையை   அல்ஹஸனாத்   சஞ்சிகையின்   உதவி   ஆசிரியர்   ஜெம்ஸித் அஸீஸ்   அவர்கள்   நிகழ்த்தினார்கள் .  ஜமாஅத்தே   இஸ்லாமியின்   செயலாளரும்   ஜஸ்ட்   மீடியா பௌண்டேஷனின்   தலைவரும்   சட்டத்தரணி   எம் . எஸ் . எம் .  பாரிஸ் ,  அல்ஹஸனாத் சஞ்சிகையின்   கௌரவ   ஆசிரியர்   ஏ . ரீ . எம் .  நவ்பல் ,  அல்ஹஸனாத் ,  எங்கள்   தேசம் பத்திரிகையின்   முன்னால்   நிர்வாக   ஆசிரியர்   அப்துல்லாஹ்   அஸாம்  ( இஸ்லாஹி ),  ஜஸ்ட் மீடியா   பௌண்டேஷனின்   ஏனைய   ஊழியர்களையும்   படத்தில்   காணலாம் www.engalthesam.lk

மத விவகார பொலிஸ் குழு நாளை முதல் செயற்படும்!

Image
இலங்கையில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு நாளை முதல் செயற்படவுள்ளது. மத விவகாரங்கள் அமைச்சின் கீழ் இந்த பொலிஸ் குழு செயற்பட வேண்டும் என கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார். அண்மைக்காலமாக மத விவகாரம் தொடர்பான அதிக முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய கட்சியின் தொழிலாளர் தினத்துக்கான ஏற்ப்பாடுகள் அம்பாறையில்

Image
மே 01 ஆந் திகதி அம்பாறையில் நடை பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின்  தொழிலாளர் தினத்துக்கான ஏற்ப்பாடுகள் நடை  பெறுகின்றன . அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் நடவடிக்கைக்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.நபார் கட்சி  தலைவர் ரணில் விக்கிரம சிங்கவினால் நியமிக்கப் பட்டுள்ளார் . இந்த நியமனத்தை அடுத்து கல்முனை மாநகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.நபார் கரையோரப் பிரதேசத்தில் தொழிலாளர் தின நிகழ்வுகளுக்கான நடவடிக்கைகளை துரிதப் படுத்தியுள்ளார்.