சமய முரண்பாடுகளை ஆராயும் பொலிஸ் பிரிவு அங்குரார்ப்பணம்

சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்கான விசேட பொலிஸ் பிரிவு சற்றுமுன்னர் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. கொழும்பு, தர்மபால மாவத்தை இலக்கம் 135இல் அமைந்துள்ள பௌத்த மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் 7ஆவது மாடியில் இந்த விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டது.
சமய முரண்பாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கின்ற பொலிஸ் நிலையங்களில் செய்யப்படுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் திருப்தி கொள்ளாவிடின் இந்த பிரிவில் முறையிடலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் 0112307674 அல்லது 0112307964 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டோ 0112307688 அல்லது 0112307406 ஆகிய தொலைநகல் இலக்கங்களுகோ அறிவிக்க முடியும் எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
இந்த புதிய பொலிஸ் பிரிவில், உதவி பொலிஸ் அதிகாரியின் கீழ் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள்கள் அறுவர் கடமையாற்றுவர் என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த பொலிஸ் பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் தி.மு.ஜயரட்ன, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், பௌத்த மதவிவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.பி.திசாநாயக்க, பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்