Posts

Showing posts from December, 2013

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்; வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றம்!

Image
கல்முனை மாநகரசபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களின் முழு ஆதரவோடு அங்கீகரிக்கப்பட்டது. கல்முனை மாநகரசபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரினால் இன்று மாலை சமர்ப்பிக்கப்பட்ட போது சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர், பிரதி மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப், ஏ.ஆர்.அமீர், ஏ.எம்.றகீப், ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர்அலி, ஏ.ஏ.பஸீர், ஏ. நஸார்தீன், ஏ.எம்.பறக்கத்துல்லாஹ், எம்.ஐ.பிர்தௌஸ், எம்.எல்.சாலித்தீன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், ஸீ.எம்.முபீத், .இஸட்.ஏ.றஹ்மான், தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களான ஏ.அமிர்தலிங்கம், ஏ.விஜயரெட்னம், எஸ்.ஜெயகுமார், ஜீ.கமலதாஸன் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரான ஏ.எச்.எச்.எம். நபார் ஆகிய மொத்த உறுப்பினர்கள்  பிரசன்னமாயிருந்தனர். வரவு செலவு திட்ட விவாதத்தை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதி முதல்வர் சிர

கல்முனை அல் சுகறா வித்தியாலயத்தில் சிரமதான நிகழ்வுகள்

Image
(எஸ்.எல்.அப்துல் அஸீஸ் ) 2014 புது வருடத்தின் பாடசாலைகளின் கற்றல்  கட்பித்த  நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட  உள்ள நிலையில் அதற்க்கு முன்னோடியாக  கல்முனை பிர்தேசம்களில் பொதுமக்களினால் ஏட்பாடுசெய்யப்பட்ட  பாடசாலை வளாக சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன . அந்தவகையில்  கல்முனை  அல் சுகறா வித்தியாலயத்தில் ஒழுங்கு செயப்பட்ட  பாடசாலை வளாக சிரமதான நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றது . இதில் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,  கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இளைஞ்ர் அமைப்புக்கள், பொதுமக்கள்  என பலரும்  கலந்து கொண்

உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் கட்டி ஆதரத்தழுவிக் கொண்டார்கள்.

கல்முனை மாநகர சபையின் மு.காவின் உறுப்பினர்களுடன் தலைவர் ரவூப் ஹக்கிம் நடத்திய பேச்சுவார்த்தை சற்று முன் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் கட்டிஆரத்தழுவிக் கொண்டார்கள். கல்முனை மாநகர சபையின் மு.காவின் உறுப்பினர்களுடன் நிந்தவூரில் கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலியின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ரவூப் ஹக்கிம் உறுப்பினர்கள் மத்தியில் பேசுகையில், கட்சியினது நன்மை கருதியும், தலைமைத்துவக் கட்டுப்பாட்டினை கருத்திற் கொண்டும் அனைவரும் நாளை வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இதனை முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிவு தலைமையிலான உறுப்பினர்கள் உட்பட அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். இதனை அடுத்து உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் கட்டி ஆதரத்தழுவிக் கொண்டார்கள்.

கல்முனை விகாராதிபதி சங்கரத்ன தேரருடன் ஹரீஸ் சந்திப்பு!

Image
கல்முனை தமிழ் உப பிரதேச செயலக விடயம் தொடர்பாகவும் இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் நிலை தொடர்பாகவும் பாராளுமன்ற உருப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களை சந்தித்து தெளிவுபடுத்தியுள்ளார். இச்சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிக் குழுச் செயலாளருமான ஏ.எம் பறக்கத்துல்லாவும் கலந்து கொண்டார்.

கல்முனை பிரதேச செயலக இனிய விழா

Image
கல்முனை  பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட இனிய விழாக்கள்  நிகழ்வு சனிக்கிழமை  கல்முனை  பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் கல்முனை  பிரதேச செயலக நலனோம்பல் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இன் நிகழ்வில் கல்முனை  பிரதேச செயலகத்தில் கடமையாற்றி  பதவி உயர்வு பெற்ற  , ஓய்வுபெற்ற  மற்றும் இடம்மாற்றம் பெற்று சென்றோர்கள் கௌரவிக்க பட்டதுடன்  கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது .

கல்முனை மாநகர சபை சர்ச்சை: அமைச்சர் ஹக்கீம் தலைமையில் விசேட கூட்டம்

Image
  சபை அமர்விலும் ஹக்கீம் பங்கேற்பார்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பாட்டிலுள்ள கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ரவூப் ஹக்கீம் தலைமையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சர்ச்சை கடந்த பல மாதங்களாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையிலேயே சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பதில் கல்முனை மேயராக கடந்த நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து சட்டத்தரணி நிசாம் காரியப்பரினால் கல்முனை மாநகர சபைக்கான 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் கடந்த திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படவிருந்தது. எனினும் இந்த வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கான முயற்சிகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில மாநகர சபை உறுப்பினர்கள் ஈடுபட்டனர். இதனால் கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை வரை ஒத்த

திவிநெகும திணைக்கள தின் முகாமைத்துவ உதவியாளர் சேவைக்குள் உள்வாங்குவதற்க்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு

Image
A.vk;.,];`hf;   rKu;j;jp mgptpUj;jp cj;jpNahfj;ju;fshf flikahw;wp tUk; midtiuAk; nghUshjhu mikr;rpd; jptpneFk jpizf;fsj;jpw;Fs; cs;thq;fg;gl;Ls;sdu;. ,e;j jpl;lj;jpd; fPo; cs;thq;fg;gl;Ls;s fy;Kid gpuNjr nrayf cj;jpNahfj;ju;fSf;fhd epue;j epakdk; toq;Fk; epfo;T New;W Qhapw;Wf;fpoik   ml;lg;gs;sk; ZDEO Njhl;lj;jpy; ,lk;ngw;wJ. gpuNjr nrayhsu; vk;.nesgy; jiyikapy; ,lk;ngw;w ,e;j epfo;tpw;F ehlhSkd;w cWg;gpdUk; fy;Kid mgptpUj;jpf; FO jiytUkhd rl;lj;juzp vr;.vk;.vk;. `uP];   gpujk mjpjpahf fye;Jnfhz;L epakd fbjq;fis toq;fpitj;jhu;. rKu;j;jp Kfhikahsu;fs; 05 NgUf;Fk;> rKu;j;jp mgptpUj;jp cj;jpNahfj;ju;fs; 49 NgUf;Fk; ,e;j epakdf; fbjq;fs; toq;fp itf;fg;gl;lJ. ,e;j epfo;it myq;fupf;Fk; tifapy; ,ir epfo;rpAk; mq;F eil ngw;wJld; ,yq;if xyp gug;G $l;Lj;jhgdj;jpd;   gpiw vg;.vk; fl;Lg;ghl;lhsu; g]Pu; mg;Jy; ifA+k; epfo;r;prfisj; njhFj;J toq;fpdhhu; நிகழ்வில்  பாடகர்களான  முஸ்தபா,கமால்தீன் ,

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் இராஜினாமா!

Image
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா இராசையா தனது பதவியை இராஜினாமா செய்வதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் உப தலைவருமான பொன்.செல்வராசா ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.  இது தொடர்பில் தவிசாளர் செல்லையா இராசையா அனுப்பியுள்ள கடிதத்தில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராகிய நான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு அதிகபடியான வாக்குகளைப்பெற்று தவிசாளராக நியமிக்கப்பட்டேன்.  இந்த நிலையில் பிரதேசசபையில் உள்ள ஏனைய மூன்று உறுப்பினர்களும், சபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தரமால் தொடர்ந்து குழப்ப நிலைகளை ஏற்படுத்திவருகின்றனர் எனவே இது தொடர்பில் கடந்த காலத்தில் பல தடவைகள் எமது கட்சி தலைமையின் கவனத்துக்கு கொண்டுசென்ற போதிலும் இது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எனவே தொடர்ந்து செயற்பட முடியாத நிலையில் எனது பதவியை இராஜினாமா செய்கிறேன். எனினும் கட்சி

அனர்த்தங்களை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் 117

Image
மண்சரிவு, வெள்ளம் உட்பட இயற்கை அனர்த்தங்கள், விபத்துக்கள் தொடர்பான தகவல்களை வழங்கவும் உடனடி உதவியைப் பெறவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை நேற்று அறிமுகம் செய்தது. 117 என்ற இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் உடனடியாக உதவியை பெற முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பிரதமர் டி. எம். ஜயரட்ன இந்த அவசர தொலைபேசி இலக்கத்தை நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். சுனாமி பேரழிவு ஏற்பட்டு 9 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் நோக்குடன் நேற்று களுத்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தேசிய பாதுகாப்பு’ தினம் பிரதமர் டி. எம். ஜயரட்ன தலைமையில் நடைபெற்ற போதே மேற்படி அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. பிரதமர் டி. எம். ஜயரட்ன 117 என்ற இலக்கத்துக்கு முதலாவது தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அனர்த்த முகாமைத்துவ அவசர தகவல் நிலையத்துடன் தொடர்பு கொண்டு பேசினார். நாட்டில் எந்த பகுதியிலும் ஏற்படும் இயற்கை அனர்த்தம் விபத்துக்களை தெரியப்படுத்தியதுடன் அந்நிலையம் உடனடியாக சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் தொடர்பு

காரைதீவு பிரதேச சபையின் பட்ஜட் மீண்டும் தோற்கடிப்பு

தவிசாளரின் தன்னிச்சை போக்கை எதிர்த்தே வாக்களித்ததாக உறுப்பினர்கள் தெரிவிப்பு காரைதீவு பிரதேச சபையின் வரவு, செலவுத் திட்டம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்தப் பிரதேச சபை, தமிழ்த் தேசி யக் கூட்டமைப் பின் ஆளுகைக் குட்பட்டது. இந்த சபையில் அங்கம் வகிக்கும் 5 உறுப்பினர்களில் நால்வர் எதிர்த்து வாக்களித்துள்ளனர். காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த 18 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப் பட்டபோது தோற்கடிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து இரண்டாவது தடவை யாகவும் நேற்று சபையில் சமர்ப்பிக்கப் பட்டபோது ஐந்து உறுப்பினர்களில் நான்கு பேர் எதிர்த்து வாக்களித்தனர். அதாவது, சபையின் தவிசாளரைத் தவிர சகல உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தனர். தவிசாளரின் தன்னிச்சையான போக்குக்கு எதிராகவே தாங்கள் எதிர்த்து வாக்களித் துள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்கான அமர்வு நேற்று தவிசாளர் செ. இராசையா தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு தவிசா

சாய்ந்தமருதில் மீன்பிடி வாடியும், டிப்பர் லொறியும் தீக்கிரை

Image
சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு சொந்தமான மீன் வாடியொன்றும் டிப்பர் வாகனமொன்றும் நேற்று (25) நள்ளிரவு இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மீன் வாடிக்கு சொந்தக்காரரான பீ.எம்.அலியார் (றாசிக்) சுகவீனமற்ற நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தீச் சம்பவத்தினால் மீன் வாடி முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன் டிப்பர் வாகனம் அந்த தீக்குள் தள்ளியும் விடப்பட்டுள்ளதாக அங்கு கூடியிருந்த மீனவர்கள் தெரிவித்தனர். அத்துடன் மீன்வாடியினுள் வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடிப் படகின் இயந்திரங்கள், குளிரூட்டிகள் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்களும் தீக்கிரையாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 

வாசகர்களுக்கு நத்தார் வாழ்த்துக்கள்

Image

அக்கரைப்பற்று மாநகர சபையின் பஜ்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Image
தேசிய காங்கிரஸின் ஆளுகையின் கீழ் உள்ள அக்கரைப்பற்று மாநகர சபையின் 2014ஆம் ஆண்டுக்குரிய பஜ்ஜெட் அதிகப்படியான உறுப்பினர்களின் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று(24.12.2013) காலை மேயர் அஹமட் ஸக்கி அதாவுல்லாவின் தலைமையில் கூடிய மாநகர சபை அமர்வின்போது; 2014ஆம் ஆண்டுக்குரிய பஜ்ஜெட் அறிக்கை வாசிக்கப்பட்டு அது வாக்கெடுப்பக்கு விடப்பட்டது. இதற்கு தேசிய காங்கிரஸின் ஏழு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தன் மூலம் பஜஜெட் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஒரேயொரு எதிர்கட்சி உறுப்பினரான முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த மௌலவி ஹனிபா மதனி சபைக்கு இன்று வருகை தராமை  குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அமோக ஆதரவுடன் அக்கரைப்பற்று மாநகர சபையின் 2014ஆம் ஆண்டுக்குரிய பஜ்ஜெட் நிறைவேற்றப்பட்டது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மேயர் ஸக்கி அதாவுல்லா, 'மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு மகாநகர சபைக்குட்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் எவ்வித வேறுபாடுகளுமின்றி நடைபெறுகிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாநகர உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களின் நலன்களில் அக்கறைகாட்டி வருகிறார்கள். அவர்களின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள

கல்முனையில் முதல்வர் பிரதி முதல்வர் திருவிளையாடல்

Image
கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதி முதல்வரல்ல, முதல்வராக சொல்லப்படும் நிசாம் காரியப்பர் பதில் முதல்வரே தவிர அவரும் முதல்வரல்ல என மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சிராஸ் மீராசாஹிபின் பெயர் கல்முனை பிரதி முதல்வராக இன்று  வரையிலும் தேர்தல்கள் ஆணையாளரினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை. கல்முனை முதல்வராக செயற்பட்ட சிராஸ் மீராசாஹிப் கடந்த நவம்பர் மாதம் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார்.  இதன் காரணமாக ஏற்பட்ட முதல்வர் வெற்றிடத்திற்கு பிரதி முதல்வரான சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பதில் முதல்வராக நியமிக்கட்டு தற்போது செயற்படுகின்றார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் பெயரை முதல்வராக சிபாரிசு செய்து தேர்தல்கள் செயலகத்துக்கு அறிவித்துள்ளது. எனினும், சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கல்முனை முதல்வர் என இன்று திங்கட்கிழமை வரையிலும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை. இதனால் கல்முனை பிரதி முதல்வரான நிசாம் காரியப்பர் பதில் முதல்வராகவே தற்போ

கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டம் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்

Image
கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டம் சம்பந்தமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களில் சிலர் கருத்து முரண்பாடுகளுடன் செயற்பட்டமை  கவலையையும், அதிர்ச்சியையும் தருவதாக உள்ளது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது... ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 11 ஆசனங்களைக் கைப்பற்றி ஆளும்  கட்சியாகவும், அதிக முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.  தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என  நினைத்து செயற்பட்டதானது வியக்கத்தக்க விடயமல்ல.  கடந்த முதல்வர்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்ற வகையில் தமிழ் தேசிய  கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு ஊடாக தமிழ் மக்களுக்குரிய  அபிவிருத்திகளையும், அவர்களது பகுதிகளுக்குரிய அதிகாரத்தினையும்  வழங்கியுள்ளார்கள். இதற்கு பகரமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள்  முதல்வர்களுக்கு முழு ஆதரவினையும் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று காலை வரை வாக்கள

கல்முனை மாநகர சபையில் பஜட் அமளி

Image
இன்று 23-12-2013  நடைபெற இருந்த கல்முனை மாநகர சபைக்கூட்டம் திடீர் என்று ஒத்திவைக்கப்பட்டதை ஆட்சேபித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் இணைந்து மாநகர சபை சபா மண்டபத்துக்கு முன்னால்  எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இன்று கல்முனை மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்தது.கூட் டம் பி.ப 2.30மணிக்கும் ஆரம்பமாகம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்  உறுப்பினர்கள்  கூட்டத்துக்கு வந்ததன்  பின்னர் திடிரென கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை உறுப்பிர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது .இதனை  கண்டித்து  இவர்கள் கோசமிட்டதுடன் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவின் பிரதிகளைக்கிழித்தெறிந்தனர்.  இன்று சமர்ப்பிக்கப்படயிருந்த வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்படும் என்று பயந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இவர்கள் குற்றம்சுமத்தினர்.அத்துடன்.நி லைமையை பொலிஸார் தலையிட்டு கட்டுப்படித்தியத்துடன் முதல்வர் நிஸாம் காரியப்பர்  மாநகர சபைக்கூட்ட மண்டபதின்  முன்னால் வந்து கூட்டம் ஒரு கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  ஆணையாளருக்கு உத்தரவு பிறப்ப

நாவிதன்வெளி பிர தேச சபையில் வரவு செலவு திட்ட அறிக்கை தோற்கடிக்கப் பட்டுள்ளது

Image
யு.எம்.இஸ்ஹாக் நாவிதன்வெளி பிர  தேச சபையில் இவ்வருடத்துக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தோற்கடிக்கப் பட்டுள்ளது.  பிர தேச சபை தவிசாளர் எஸ்.குணரட்ணம் தலைமையில்  நேற்று வரவு செலவு திட்ட அறிக்கை முன்மொழியப்பட்டது, வரவு செலவு திட்ட அறிக்கைக்கு எதிராக அம்பாறை  மாவட்டத்தில் தமிழ் தேசிய   கூட்டமைப்பின்  கட்டுப்பாட்டில் இருந்த மற்றுமொரு சபை தோற்கடிக்கப் பட்டுள்ளது .இந்த வரவு செலவு திட்ட அறிக்கைக்கு எதிராக  தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஆனந்தன் உட்பட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் தமிழ் மக்கள்  புலிகள் கட்சி உறுப்பினர் நால்வருமே எதிர்த்து  வாக்களித்துள்ளனர் நான்குபேரும் ஆதரவாக 03  பேரும்  வாக்களித்துள்ளனர்.

தந்தையின் கனவு தனயன் மருத்துவ துறைக்கு தெரிவு

Image
நேற்று முன்தினம் வெளியாகிய க.பொ.த (உ-த) பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் உயிரியல் பிரிவில் தோற்றிய கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய கல்லூரி மாணவன் முஹமட் பளீல் முஹமட் நிஹாத்  ஏ,2 பி சித்திபெற்று அம்பாறை மாவட்டத்தில் 21ஆவது இடத்தினை பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளார். கல்முனை நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த இம்மாணவன் மர்ஹும் பளீல் ,ஆயிஷா தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வராவார். இம்மாணவனின் தந்தையார் மர்ஹும் ஆதம்லெப்பை  முஹமட் பளீல் முன்னாள்கல்முனை , காத்தான்குடி பிரதேச செயலாளரும் ,ஊடகவியலாளரும் சிறந்த எழுத்தாளருமாவார்.

செய்தியாளர் தேவை

Image
எமது கல்முனை நியூஸ் இணையதளத்துக்கு செய்தி அனுப்ப ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறைக்குள் நுழைவதற்கு ஆர்வமாக உள்ளவர்கள்  தங்களின் பெயருடன் செய்திகளை அனுப்பி வைத்தால் அதனை இணையத்தில்  பிரசுரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் .  2014ஜனவரி 01 தொடக்கம் இந்த செய்தி சேவை ஆரம்பிக்கப் படவுள்ளது . செய்திகள் நம்பகமாகவும் உண்மைத்தன்மை நிறைந்ததாகவும்  இருக்கவேண்டும் . முக்கியமான புகைப்படங்கள் அனுப்பப் படும் பட்சத்தில் அதனையும் பிரசுரிக்க ஆயத்தமாகவுள்ளோம் . புனைபெயரில் செய்தி அனுப்புவதை தவிர்த்து  சொந்தப் பெயரில் அனுப்புவதற்கு முயற்சியுங்கள் . கல்முனை பிரதேச செய்தியாளர்களுக்கும்  ஆர்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப் படும் .வெளிநாடுகளில் வதியும் கல்முனை வாசிகளும் எமக்கு தகவல்களை அனுப்பலாம் . Full Name : Email Address : Mobile No : ஆகிய தகவல்களுடன்   kalmunainews1@myway.com  என்ற முகவரிக்கு  30.12.2013க்கு முன்னர் அனுப்பிவைக்கவும் 

ஜனாதிபதியின் அனுமதியின்றி கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து எந்த தீர்மானமும் மேற்கொள்ள முடியாது

Image
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதியின்றி கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து எந்த தீர்மானமும் மேற்கொள்ள முடியாது என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். தமிழ் பிரதேச செயலகம் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரிற்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் அனுமதியின்றி கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து எந்த தீர்மானமும் மேற்கொள்ளமாட்டேன் என உறுதியளித்துள்ளார்.