கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்; வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றம்!



கல்முனை மாநகரசபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களின் முழு ஆதரவோடு அங்கீகரிக்கப்பட்டது.

கல்முனை மாநகரசபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரினால் இன்று மாலை சமர்ப்பிக்கப்பட்ட போது சபையில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர், பிரதி மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப், ஏ.ஆர்.அமீர், ஏ.எம்.றகீப், ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர்அலி, ஏ.ஏ.பஸீர், ஏ. நஸார்தீன், ஏ.எம்.பறக்கத்துல்லாஹ், எம்.ஐ.பிர்தௌஸ், எம்.எல்.சாலித்தீன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், ஸீ.எம்.முபீத், .இஸட்.ஏ.றஹ்மான், தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களான ஏ.அமிர்தலிங்கம், ஏ.விஜயரெட்னம், எஸ்.ஜெயகுமார், ஜீ.கமலதாஸன் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரான ஏ.எச்.எச்.எம். நபார் ஆகிய மொத்த உறுப்பினர்கள்  பிரசன்னமாயிருந்தனர்.



வரவு செலவு திட்ட விவாதத்தை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதி முதல்வர் சிராஸ் மீராஸாஹிப் முன்னைய காலங்களில் கல்முனை மாநகர சபை வரவு செலவுத் திட்டங்கள் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது போல் இன்றைய வரவு செலவுத் திட்டத்தையும் ஏக மனதாக அங்கீகரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேடடுக்கொண்டார். தொடர்ந்து உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரான ஏ.எச்.எச்.எம். நபார் தான் இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு பூரன ஆதரவு வழங்குவதாக கூறிவிட்டு சபையிலிருந்து வெளியேறிச் சென்றார். அதன் பின் உரையாற்றிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினரான ஏ.அமிர்தலிங்கம் தமது கட்சியை சார்ந்தவர்கள் 2006 முதல் கல்முனை மாநகர சபை

வரவு செலவு திட்டங்களுக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கி வந்ததாகவும், தற்போதைய தமது கட்சி நிலைப்பாட்டின் படி இன்றைய வரவு செலவு திட்டத்தை பகிஷ்கரிப்பதாக குறிப்பிட்டதைத் தொடர்ந்து

தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களான ஏ.அமிர்தலிங்கம், ஏ.விஜயரெட்னம், எஸ்.ஜெயகுமார், ஜீ.கமலதாஸன் ஆகியோர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.



வரவு
செலவு திட்டம் சபையில் வாக்களிப்பிற்கு விட்டபோது தமிழ்
தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் 4 பேரும் ஐக்கிய தேசியக்கட்சியைச்
சேர்ந்த 1 உறுப்பினரும் அங்கு பிரசன்னமாயிருக்கவில்லை.

வாக்களிப்பு வேழையன்போது பிரசன்னமாயிருந்த (14)
உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்துக்கு ஏகமனதான ஆதரவினைத் தெரிவித்ததைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கல்முனை
மாநகரசபையின் வரவு செலவு திட்டம் கடந்த 23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட
இருந்த வேளையில், இறுதிநேரத்தில் திடீரென பிற்போடப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்த விடயமாகும்.



































Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்